Charges : ₹200 per year - AMC Charges (charged by CDSL / NSDL).
டீமேட் கணக்கை தொடங்கியாயிற்று. இனி முதலீட்டு வழிகள் என்னென்ன என்பதை விரிவாக காணலாம்.
1. Shares - பங்குகள்.
அனைவருக்கும் தெரிந்த ஒன்று. NSE மற்றும் BSE யில், நீங்கள் தெரிவு செய்த நிறுவனத்தின் பங்குகளை நீண்ட கால முதலீடாகவோ (Investments), குறுகிய கால முதலீடாகவோ (Trading) சேமிப்பது
வருமானம்: நீங்கள் எடுக்கும் ரிஸ்குக்கு ஏற்றாற்போல் மாறும். அதிக ரிஸ்க் = அதிக வருமானம்
நீண்ட கால (>10 Yrs) முதலீடுகளுக்கு பங்குச்சந்தை சராசரியாக 15% வருமானம் கொடுத்துள்ளது. இந்த வருமானமானது inflation-adjusted.
குறுகிய கால முதலீடுகளுக்கு சந்தை அபாயங்கள் மற்றும் ஏற்றங்கள் சார்ந்து மாறுபடும்.
அபாயங்கள்: பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள், நிறுவனத்தின் மதிப்பு, செயல்திறன்,
டிமாண்ட் / சப்ளை பொறுத்து மாறுபடும். உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமாகவோ (LVB ல் ஆனதுபோல்) நஷ்டமடைய வாய்ப்புகள் அதிகம்.
அடிப்படையில் வலுவான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு / diversification செய்தால் இந்த அபாயத்தை குறைக்கலாம்.
Liquidity: 2 நாட்கள்.
2. பரஸ்பர நிதி - Mutual Funds
இதுவும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் செபி மற்றும் ரிசர்வ் வங்கியினால் வலுவாக கண்காணிக்கப் படுகின்றன.
வருமானம்: நீங்கள் தெரிவு செய்யும் முதலீட்டு வகைகள் (Stock Market, Debt,Liquid,Gold ETF,Index) சார்ந்து மாறுபடும்.
வருமான வரம்பு: நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றாற்போல்
Equity Funds: 12%-15%
Debt / Liquid Funds: upto 7.5% - 8.5% (FD யை விட சற்றே கூடுதலாக)
Gold ETF: தங்கத்தின் விலை மதிப்பிற்க்கேற்றாற் போல்.
Index Funds: பங்குச்சந்தை குறியீட்டு எண்ணிற்கு (NSE / BSE) ஏற்றாற்போல்.
3. Corporate FD's - நிறுவனங்களின் வைப்பு நிதி
வங்கிகளை போலவே, அடிப்படை வலுவாக உள்ள சில நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து deposits மூலம் நிதி திரட்ட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது
இந்த நிறுவனங்கள், அதன் வைப்பு நிதிகளுக்கு குறைந்தபட்சம் 8.5% இருந்து 11% வரை வட்டி வழங்கியுள்ளன
மேற் சொன்னதற்கு ஏற்றாற்போல், அதிக வருமானம் = அதிக ரிஸ்க். நீங்கள் முதலீடு செய்த நிறுவனத்தை மூடிவிட்டால், உங்கள் முதலீடு மொத்தமும் நஷ்டம்தான். ஆனால், அடிப்படை வலுவாக உள்ள நிறுவனங்கள் பொதுவாகவே இதுவரையில் நிலையான வருமானத்தை கொடுத்துள்ளன. Some examples in the attached image.
4. NPS - National Pension Scheme
PFRDA - Pension Fund Regulatory and Development Authority வால் உன்னிப்பாக கண்காணிக்கப் படுகிற ஒரு ஓய்வுகால முதலீட்டு வகை. கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம். உங்கள் டீமேட் கணக்கிலேயே இதை நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.
இரண்டு வகையான முதலீட்டு வகைகள் NPSல் உண்டு.
Tier 1 - ஒய்வு காலம் வரையில் உங்களால் முதலீடை எடுக்க இயலாது. உங்கள் வயதிற்க்கேற்ற ரிஸ்க் மேனேஜ்மென்ட் கொண்டு உங்கள் பணம் முதலீடு செய்யப்படும். இதற்கும் PFRDA வழிமுறைகள் வகுத்துள்ளது.
ஓய்விற்கு முன் நீங்கள் இறந்துவிட்டால், உங்கள் nominee க்கு பணம் வழங்கப்படும். முதலீட்டுக்கு 80C யில் வரிவிலக்கு உண்டி.
Tier 2 - உங்கள் முதலீடை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். உங்களுக்கு எந்த அளவுக்கு ரிஸ்க் தேவை என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
அபாயங்கள்: NPS சந்தை சார்ந்த முதலீடு என்பதால், சண்டிகை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் வருமானம் மாறுபடும். அரசின் ஓய்வூதிய திட்டங்கள் அனைத்தும் NPS ல் தான் முதலீடு செய்யப்படுகிறது. உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதால், சந்தை முதலீட்டை விட இதில் ரிஸ்க் மிகவும் குறைவு தான்.
5. Real Estate Mutual Funds
நேரடியாக நிலத்தில் / வீட்டில் முதலீடு செய்ய முடியாதவர்களுக்காக இது உருவாக்கப்பட்டது. உங்கள் பணம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அந்த நிறுவனங்களின் projects ஈட்டும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு பிரித்தளிக்கப்படும்.
நேரடியாக நிலம்/வீடு வாங்கி அதன் lack of liquidity யினால் பாதிப்படையாமல் இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.
அபாயங்கள்: இது வீட்டுச்சந்தை சார்ந்த முதலீடு. டிமாண்ட் / சப்ளை பொறுத்து, உங்கள் வருமானம் கூடும்/குறையும்.
பல நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்வதால், சந்தை அபாயம் சற்றே குறைவு
மேற்சொன்னவை மட்டுமல்லாது உங்களுக்கு பரிச்சயமான வங்கி FD/RD, PPF, NSC, போஸ்ட் ஆபீஸ் FD போன்ற வாய்ப்புகளும் உள்ளன. இவைகளில் ரிஸ்க் மிகவும் குறைவாக இருப்பதினால், வருமானமும் குறைவே. வருடா வருடம், சந்தை வட்டி விகிதம் மாறினால், உங்கள் வருமானமும் மாறும் வாய்ப்புள்ளது.
ஆகையால்
உங்களுக்கு பொருத்தமான ஒரு முதலீட்டு வகையை தேர்ந்தெடுத்து, மாதா மாதம் தவறாது, நீண்ட காலங்களுக்கு முதலீடு செய்து, வருமானம் ஈட்டி, செல்வந்தராக மாறுங்கள்.
The best time to start investing is always NOW. Tomorrow will never come.
Save More, Invest More & Earn More. <end> 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#TaxPlanning
ஏப்ரல் மாதத்தில் நீங்கள் செய்யவேண்டிய மற்றுமொரு முக்கிய கடமை - Tax Planning.
இதற்கான வழிமுறைகள் என்ன?
எப்படி செய்வது?
எந்தெந்த வழிகளில் முதலீடு செய்வது?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் - இந்த இழையில்.
To begin, நீங்கள் செய்யவேண்டியது - உங்கள் அலுவலகத்தில்.
1. New/Old Regime - Select 2. Declaration - எந்தெந்த இடங்களில், எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிற விவரங்கள் பதியப்பட வேண்டும்
Declaration செய்வதற்கு எந்தெந்த section உங்களுக்கு exemptions அளிக்கும் என்கிற விவரங்கள்:
Exemption category யில், அனைவருக்கும் மிக பரிச்சயமான ஒன்று Section 80C (முதலீடுகள்).
என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன?
அவைகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
படத்தில் காண்க.
இந்த sectionல் உங்களுக்கு அதிகப்படியாக ஒன்றரை லட்சம் வரையில் exemption கிடைக்கும்.
இந்த நிதியாண்டு தொடங்கி விட்டது. நம்மில் பலர், இந்த ஆண்டிற்கான GOALS மற்றும் OBJECTIVES உங்களது அலுவலகத்தில் முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கியிருப்பீர்கள் இல்லையா?
நமக்கான பொருளாதார இலக்குகள் என்ன? அதை எவ்வாறு தேர்வு செய்து, அதனை அடைவது? அதற்கான இழை.
இந்த இழையை படிப்பதற்கு முன், எனது Telegram சேனலுக்கு சென்று Financial Planning Excel ஷீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். t.me/myfinancialind…
இந்த இழையில் சொல்லும் அனைத்தும் அந்த ஷீட்டுடன் பொருத்திப் பார்க்கவும். புரிந்துகொள்ள இன்னும் சுலபமாக இருக்கும்.
Financial Planning இன் முதற் படி, Financial Goals. இந்த வருடத்திற்கான உங்கள் பொருளாதார இலக்குகள். இலக்குகள் SMART ஆக இருத்தல் அவசியம்.
Specific
Measurable
Achievable
Realistic
Time-Bound
இந்த வருடத்திலிருந்து (2021-22) EPF சட்டத்தில் மாற்றங்கள்.
ஒரு வருடத்திற்கு ₹2.5 லட்சத்திற்கு மேல் உங்கள் contribution (உங்களுடைய contribution மட்டும்) இருந்தால், ₹2.5 லட்சம் வரையில் மட்டும் தான் உங்களுக்கு வட்டியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
உதாரணமாக, இந்த வருடம் உங்களுடைய contribution ₹3 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். வருட முடிவில் அதற்கான வரி ₹30,000 @ 10% வருட வட்டி என்று வைத்துக்கொள்வோம் (கணக்கிற்காக), அதில் ₹2.5 லட்சத்திற்கான வட்டி ₹25,000 க்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும்.
₹2.5 லட்சத்திற்கு மேல் உள்ள உங்கள் contribution (₹50,000) ஈன்ற வட்டியான ₹5,000 உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, tax slab படி, வரி விதிக்கப்படும்.
இதனால் ஏற்படும் மாற்றங்கள்: 1. உங்கள் PF contribution ₹2.5 லட்சம் என்றிருந்தால், VPF Contribution இனி உங்களுக்கு பயனளிக்காது.
நிறைய பேர் கேக்குறாங்க. ஒரு குறிப்பிட்ட பங்கு பேர சொல்லி, இந்த பங்கு 50% க்கு மேல வருமான குடுத்துருக்கே இந்த வருஷம், அதுல முதலீடு பண்ணலாமா?ன்னு.
அதற்கான பதில் இந்த இழையில்.
இந்த 2020-21 வருடம், பங்குச்சந்தைக்கு ஒரு outlier வருடம். 2020 மார்ச் 25 வாக்குல 7500 வரைக்கும் இறங்கிய #NIFTY குறியீடு, தற்போதைக்கு 100% recover ஆகியிருக்கு. ஆடி காத்துல அம்மியும் பறக்கும்ன்னு சொல்ற மாதிரி, இந்த recovery ல almost எல்லா பங்குகளும் உயரத்தான் செஞ்சிது.
இந்த outlier வருடத்துல, எந்தவொரு பங்கினுடைய performance எ அதோட actual performance ஆ பாக்க கூடாது. இது ஒரு one-off event தான். வலுவான அடிப்படை கொண்ட பங்குகள பத்தி கவலை வேண்டாம். அப்படி இல்லாத பங்குகள், ஒரு சிறு இறக்கம் வந்தாலே, அதள பாதாளத்துக்கு போகும்.
பணவீக்கமும், உங்கள் முதலீடுகளில் அதன் தாக்கங்களும் - ஓர் இழை.
Financial மற்றும் Retirement planningல் நமது வருங்காலப் பணத் தேவைகளை கணக்கிடுகையில் பணவீக்கத்தின் தாக்கத்தை கணக்கிலெடுக்க மறந்துவிடுகிறோம்.
பணவீக்கமென்பதுநம்மிடமுள்ள பணத்தின் வாங்குதிறன் மாற்றத்தின் ஒரு மதிப்பீடு. உதாரணமாக, 5% பணவீக்க விகிதத்தினால், 2021 வருடம் நீங்கள் வைத்திருக்கும் ₹100 மதிப்பு, 2022 வருடம் வெறும் ₹95 தான். அதாவது, இந்த வருடம் நீங்கள் ₹100 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருளை அடுத்த வருடம் ₹105 ஆகும்
உதாரணமாக உங்களின் தற்போதைய மாதாந்திர செலவு ₹25000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் retirement planning செய்கையில், 20 வருடங்கள் கழித்து உங்கள் செலவுகள் இதே அளவு இருக்காது. பணவீக்கத்தை சேர்த்தால், உங்களுக்கு ₹66332 தேவைப்படும். ஆகையால் நீங்கள் plan பண்ண வேண்டிய தொகை ₹66332.