*தல சிறப்பு* முருகனின் சரவணபவ எனும் ஷடாச்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳1
*பொது தகவல்* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 🙏🇮🇳2
கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்.
🙏🇮🇳3
*பிரார்த்தனை* இங்குள்ள அங்காரகனுக்கு தில பத்ம தானம் (தில-எள், பத்ம-தாமரை மலர்) செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
🙏🇮🇳4
*நேர்த்திக்கடன்* வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🙏🇮🇳5
*தலபெருமை*
நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. 🙏🇮🇳6
பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. 🙏🇮🇳7
இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.
*தல வரலாறு*
இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர்.
🙏🇮🇳8
ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார்.
🙏🇮🇳9
முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.
'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு.
இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.