கடவுளை பற்றி காமராசர்
“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம்
ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன்
“அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக்
குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன்
கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.
யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான். மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு?
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!!
இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு
அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.
“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?” என்று வினாத் தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “ டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?.
ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்!!!. இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும் ,
கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.
அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன்
ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான்.
விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல.
பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்” என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன் .
தலைவர்,
“நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?, ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு , மூக்குத்திக்குக் கூட வழியில்ல.
இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல்லாம் செய்யமாட்டான்.
சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்” என்றார்.
கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?, இதிலேருந்து எப்போ விலகுனீங்க?”
“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார்.அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன் அவர் மொட்டை போட்டுகிட்டார் என்னையும் போட்டுக்கச் சொன்னார்
அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
“அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?” என்று கேட்டேன்.
“அடுத்த மனுசன்
நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம
வாழ்த்தும்னேன்!!!”
காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.
சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து “ஏன் பள்ளிக்கூடம் போகலியா?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.
நன்றி : திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்) தமிழ் ஓவியாவின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇
''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.
நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம்
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.
‘‘உண்மையில் திராவிடக் குடிகள் இந்தியத்துணைக் கண்டத்தில் மிக நீண்ட வரலாற்று அசைவியக்கம் கொண்டவர்கள். இத்துணைக் கண்டத்தின் அனைத்து நிலப்பரப்போடும் தொடர்புடையவர்கள்; வாழ்ந்தவர்கள்; இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.
இன்று இந்தியாவில் உள்ள 461 பழங்குடிகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி கோண்டுகள் ஆவர். இவர்கள் திராவிடப் பழங்குடியினர். நடு இந்தியப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பழங்குடி பீல்கள். ராஜஸ்தான் தொடங்கி வட இந்தியாவில் 7 மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர்.
இவர்களும் திராவிடப் பழங்குடிகளே. நான்காவது பெரிய பழங்குடியான ஒராவன் திராவிடப் பழங்குடியே. இந்தியாவின் ஏழாவது பெரிய பழங்குடியான கோந்த் பழங்குடியும் திராவிடப் பழங்குடியே. ஒரிசா விலும் அதனை ஒட்டிய மாநி லங்களிலும் இவர்கள் வாழ்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது செயல்பாடுகளை பரந்து விரிந்த அளவில் நடத்துகிற காலம் இது. அதன் வரலாற்றையும் செயல்பாடுகளையும் பற்றி பல உண்மையற்ற தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக எதிர்கொண்டு அம்பலப்படுத்தும் புத்தகம் இது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அருணன் ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்து வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்களின் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
சுதந்திர இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு, ஆனால் கடந்த ஏழு வருடங்களாக இந்திய ஒன்றியத்தை அதன் அரசியல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 1924ல் இந்திய விடுதலைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்த அமைப்பு ஈடுபடவில்லை.
*பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.*
*சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.*
*இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முடியாது.*
*நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.*
No one can live on this planet without exposing hypocrisy...!
18.09.2005 அன்று அம்பலம் இணைய இதழில், சுஜாதா...
விஜய் டிவி யிலிருந்து சாமக்கிரியைகளுடன் வந்து இறங்கினார்கள். "எங்களது 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சிக்காக உங்களுக்கு மதன் ஒரு பரிசு அனுப்பியிருக்கிறார்" என்றனர்.
அது ஒரு நடுத்தர சைஸ் மரப்பெட்டி. 'இதை நீங்கள் திறந்து பார்ப்பதைப் படம் பிடிக்க வேண்டும்' என்றார்கள். வெளிச்சம் போட்டார்கள். சட்டைக்குள் மைக் வைத்து, ஒன் டூ த்ரி சொல்லச் சொன்னார்கள்.
"ரெடி சார்? நீங்க என்ன பண்றீங்க? யார் கிட்டருந்து வந்திருக்குன்னு கன்னத்தில் கை வெச்சு
அல்லது விட்டத்தைக் பார்த்து முதல்ல யோசியுங்க. 1992 ன்னு போட்டிருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிக்கிட்டே யோசிங்க. அப்றம் பெட்டியைத் திறங்க. அதுக்குள்ள இருக்குற புத்தகங்களைப் பாருங்க. உள்ள ஒரு கார்டூன் இருக்கும். அதைப் பார்த்த உடனே, 'ஆஹா இதை நம்ம மதன் அனுப்பிச்சிருக்காரு.
உலகப் புகழ் பெற்ற சிறார் நாவலின் கதை சுருக்கம்.
எழுத்தாளர்கள் ரோல் தால்,எனிட் பிளைடன், டாக்டர் சூஸ், பி. டி ஈஸ்ட்மேன், ஷெல் சில்வர்ஸ்டைன், அண்ணா சிவல், ஹாரியட் பீச்சர், என உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய
கதைகள், கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அவர்களுடைய சில கதைகளின் சாரத்தை சுவாரசியம் குறையாமல் சுருக்கி தந்திருக்கிறது இந்த நூல்.
ஒன்பது நாவல்களின் சுருக்கத்தை இங்கே கூறி அந்த நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
டாம் மாமாவின் குடிசை மிக அற்புதமான கதை வாசித்து மனம் நெகழ்ந்த கதை.
ஏழு தலைமுறைகளின் கதை குழந்தைகள் நமது வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதமாக இருக்கும்.
ஸ்கூலுக்கு போகிறாள் சுஜித் நன்மையே தரும் மரம் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் மொழிபெயர்த்த கதை.