‘‘உண்மையில் திராவிடக் குடிகள் இந்தியத்துணைக் கண்டத்தில் மிக நீண்ட வரலாற்று அசைவியக்கம் கொண்டவர்கள். இத்துணைக் கண்டத்தின் அனைத்து நிலப்பரப்போடும் தொடர்புடையவர்கள்; வாழ்ந்தவர்கள்; இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.
இன்று இந்தியாவில் உள்ள 461 பழங்குடிகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி கோண்டுகள் ஆவர். இவர்கள் திராவிடப் பழங்குடியினர். நடு இந்தியப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பழங்குடி பீல்கள். ராஜஸ்தான் தொடங்கி வட இந்தியாவில் 7 மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர்.
இவர்களும் திராவிடப் பழங்குடிகளே. நான்காவது பெரிய பழங்குடியான ஒராவன் திராவிடப் பழங்குடியே. இந்தியாவின் ஏழாவது பெரிய பழங்குடியான கோந்த் பழங்குடியும் திராவிடப் பழங்குடியே. ஒரிசா விலும் அதனை ஒட்டிய மாநி லங்களிலும் இவர்கள் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் திராவிடப் பழங்குடிகள் என்ற சொல்லாட்சியை எங்ஙனம் கையாள வேண்டும் என்பது இப்போது நமக்குத் தெளிவாகிறது. பண்டைய தமிழ்ச் சமூகத்தின் தொல்கூறுகளை அறிவதற்கு இந்த வடஇந்தியத் திராவிடப் பழங்குடிகளை ஆராயவேண்டியது அவசியமாகிறது.
அடுத்ததாகப் பண்டைய திராவிடப் பழங்குடிகளுக்கான உறவினை ஆராய இன்றைய தென்னிந்தியாவை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. பண்டைய திராவிடப் பகுதி விரிந்த பரப்புடைய ஒரு அகண்ட பிரதேசமாக இருந்ததை நாம் அறிவோம்.
இந்நிலையில் பழந்தமிழர் மரபின் பல கூறுகளை இன்றும் எச்சங்களாக இந்த அகண்ட தமிழகத்தில் தான் காணமுடிகிறது. இன்றைய தமிழகத்தில் பல கூறுகளை இனங்காண முடியவில்லை.
- ‘‘திராவிட மானிடவியல்'' (பக்தவத்சல பாரதி)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
''திராவிடர்'' என்பதற்கு பதிலாக ''தமிழர்கள்'' என்று வைத்து கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் பதில் 👇
''தமிழர்'' என்று சொன்னாலே பார்ப்பனர்கள் தாங்களும் ''தமிழர்கள்'' தான் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.
நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம், வளர்கிறோம்
தமிழ் பேசுகிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களை தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும் என்று கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் ''தமிழர்'' என்பது (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும் ஆனால் இன்று அது பொதுப் பெயராக மாறிவிட்டிருப்பதால் அம்மொழி பேசும் ஆரிய பண்புடைய மக்கள் யாவரும் தாமும் ''தமிழர்'' என்று உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள்.
கடவுளை பற்றி காமராசர்
“நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம்
ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா?. அரேபியாவிலே இருக்கிறவன்
“அல்லா” ன்னான், ஜெருசலத்தல இருக்கிறவன் “கர்த்தர்” ன்னான், அதிலேயும் சிலபேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக்
ஆர்எஸ்எஸ் இயக்கம் தனது செயல்பாடுகளை பரந்து விரிந்த அளவில் நடத்துகிற காலம் இது. அதன் வரலாற்றையும் செயல்பாடுகளையும் பற்றி பல உண்மையற்ற தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக எதிர்கொண்டு அம்பலப்படுத்தும் புத்தகம் இது.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அருணன் ஏராளமான புத்தகங்களை எழுதிக் குவித்து வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்களின் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
சுதந்திர இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு, ஆனால் கடந்த ஏழு வருடங்களாக இந்திய ஒன்றியத்தை அதன் அரசியல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 1924ல் இந்திய விடுதலைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்த அமைப்பு ஈடுபடவில்லை.
*பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.*
*சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.*
*இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முடியாது.*
*நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.*
No one can live on this planet without exposing hypocrisy...!
18.09.2005 அன்று அம்பலம் இணைய இதழில், சுஜாதா...
விஜய் டிவி யிலிருந்து சாமக்கிரியைகளுடன் வந்து இறங்கினார்கள். "எங்களது 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சிக்காக உங்களுக்கு மதன் ஒரு பரிசு அனுப்பியிருக்கிறார்" என்றனர்.
அது ஒரு நடுத்தர சைஸ் மரப்பெட்டி. 'இதை நீங்கள் திறந்து பார்ப்பதைப் படம் பிடிக்க வேண்டும்' என்றார்கள். வெளிச்சம் போட்டார்கள். சட்டைக்குள் மைக் வைத்து, ஒன் டூ த்ரி சொல்லச் சொன்னார்கள்.
"ரெடி சார்? நீங்க என்ன பண்றீங்க? யார் கிட்டருந்து வந்திருக்குன்னு கன்னத்தில் கை வெச்சு
அல்லது விட்டத்தைக் பார்த்து முதல்ல யோசியுங்க. 1992 ன்னு போட்டிருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிக்கிட்டே யோசிங்க. அப்றம் பெட்டியைத் திறங்க. அதுக்குள்ள இருக்குற புத்தகங்களைப் பாருங்க. உள்ள ஒரு கார்டூன் இருக்கும். அதைப் பார்த்த உடனே, 'ஆஹா இதை நம்ம மதன் அனுப்பிச்சிருக்காரு.
உலகப் புகழ் பெற்ற சிறார் நாவலின் கதை சுருக்கம்.
எழுத்தாளர்கள் ரோல் தால்,எனிட் பிளைடன், டாக்டர் சூஸ், பி. டி ஈஸ்ட்மேன், ஷெல் சில்வர்ஸ்டைன், அண்ணா சிவல், ஹாரியட் பீச்சர், என உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய
கதைகள், கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அவர்களுடைய சில கதைகளின் சாரத்தை சுவாரசியம் குறையாமல் சுருக்கி தந்திருக்கிறது இந்த நூல்.
ஒன்பது நாவல்களின் சுருக்கத்தை இங்கே கூறி அந்த நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
டாம் மாமாவின் குடிசை மிக அற்புதமான கதை வாசித்து மனம் நெகழ்ந்த கதை.
ஏழு தலைமுறைகளின் கதை குழந்தைகள் நமது வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதமாக இருக்கும்.
ஸ்கூலுக்கு போகிறாள் சுஜித் நன்மையே தரும் மரம் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் மொழிபெயர்த்த கதை.