இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். 🇮🇳🙏1
ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில்
🇮🇳🙏2
தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.
பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
🇮🇳🙏3
இக்கோயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. 🇮🇳🙏4
தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 🇮🇳🙏5
குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர். இந்தக் கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். 🇮🇳🙏6
இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.
பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி. 🇮🇳🙏7
இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என்று கூறப்படுகிறது.
தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5 மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன.
🇮🇳🙏8
அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரமிப்பின் உச்சம்.
🇮🇳🙏9
மேலும், இக்கோயிலில் தான் 22 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது...
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார்.
அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இது உங்கள் இடம்: கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!
ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர்.
கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது. இதனால் தான், தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் பலிப்பது இல்லை.
பொதுமக்கள் அவ்வளவு எளிதாக, தங்கள் ஓட்டு யாருக்கு என, வெளியில் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக, கிராமப் புற பெண்களிடம், அவ்வளவு எளிதில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, பழமையான கோவிலில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்து ஒளிர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் உள்ளது. இங்கு தினசரி பூஜை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அதிகாலை தொடங்கி மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.
இக்கோவிலில், கோவிலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகரசாமி அறக்கட்டளையினர் கூறுகையில், ' நேற்று காலை, 6:00 மணி தொடங்கி, 6:40 மணி வரை சூரிய ஒளி சிவலிங்கம் மீது ஒளிர்ந்தது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனம். இங்குள்ள புகழ்பெற்ற சிவாலயத்தின் பெயர் புஸ்பவனேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக உயர்ந்து நிற்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது . 🙏🇮🇳1
இங்குள்ள சிவபெருமான் புஸ்பவனேஸ்வரர் என்றும் பார்வதி தேவியார் சவுந்தர நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த 64 புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில், தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது. 🙏🇮🇳2
இந்த கோவில் நிகழ்ந்திருக்கும் அதிசயங்கள் ஏராளம். இந்த கோவில் குறித்து சொல்லப்படும் முக்கிய வரலாறு யாதெனில், நாட்டிய மங்கையான பொன்னையாள் என்கிற பெண், சிவபெருமானின் மிகத்தீவிர பக்தையாக இருந்தாள். அவளுடைய வாழ்வின் ஒரே நோக்கம் இறைவனுக்கு தங்கத்தால் ஒரு சிலை செய்வது. 🙏🇮🇳3