இது உங்கள் இடம்: கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!
ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர்.
கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது. இதனால் தான், தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் பலிப்பது இல்லை.
பொதுமக்கள் அவ்வளவு எளிதாக, தங்கள் ஓட்டு யாருக்கு என, வெளியில் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக, கிராமப் புற பெண்களிடம், அவ்வளவு எளிதில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.
கிராமத்தில், கட்சி நிர்வாகிகள் வீட்டில் மட்டும் தான், சின்னம், கட்சிக்கொடி, தலைவரின் படங்களை காண முடியும்; மற்ற வீடுகளில், அப்படி ஏதும் இருக்காது.
அரசியல் விஷயத்தில், கிராம மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. அதனால் தான், அதிகளவில் அவர்கள் ஓட்டுப்பதிவு செய்கின்றனர்.
யார் வந்து ஓட்டுக் கேட்டாலும், பணம் கொடுத்தாலும், 'கட்டாயம், உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம்' என்பர்; ஆனால், தம் விருப்பத்திற்கு ஏற்ப தான், ஓட்டுப் போடுவர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், கருத்துக் கணிப்பு எடுப்பது என்பது, மிக கடினமான காரியம். அது, சரியானதாக இருப்பதும் இல்லை.இந்த விஷயம் நன்கு தெரிந்ததால் தான், அரசியல் கட்சி தலைவர்கள், கருத்துக் கணிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார்.
அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். 🇮🇳🙏1
ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில்
🇮🇳🙏2
தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.
பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
🇮🇳🙏3
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே, பழமையான கோவிலில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்து ஒளிர்ந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் உள்ளது. இங்கு தினசரி பூஜை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அதிகாலை தொடங்கி மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.
இக்கோவிலில், கோவிலில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதுகுறித்து குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகரசாமி அறக்கட்டளையினர் கூறுகையில், ' நேற்று காலை, 6:00 மணி தொடங்கி, 6:40 மணி வரை சூரிய ஒளி சிவலிங்கம் மீது ஒளிர்ந்தது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனம். இங்குள்ள புகழ்பெற்ற சிவாலயத்தின் பெயர் புஸ்பவனேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக உயர்ந்து நிற்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது . 🙏🇮🇳1
இங்குள்ள சிவபெருமான் புஸ்பவனேஸ்வரர் என்றும் பார்வதி தேவியார் சவுந்தர நாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த 64 புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில், தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது. 🙏🇮🇳2
இந்த கோவில் நிகழ்ந்திருக்கும் அதிசயங்கள் ஏராளம். இந்த கோவில் குறித்து சொல்லப்படும் முக்கிய வரலாறு யாதெனில், நாட்டிய மங்கையான பொன்னையாள் என்கிற பெண், சிவபெருமானின் மிகத்தீவிர பக்தையாக இருந்தாள். அவளுடைய வாழ்வின் ஒரே நோக்கம் இறைவனுக்கு தங்கத்தால் ஒரு சிலை செய்வது. 🙏🇮🇳3