உண்மையில் அன்னைக்கு வன்ஸ் கேட்ட பிறகு தான் படிச்சேன்

அப்புறம் தான் புரிஞ்சது நாம உலகத்திலேயே அபாயகரமான வைரஸ் கிருமி இந்தியால பரவுவது.
Double mutant virus.
வேற எங்கேயும் இந்த mutation இல்லை. இப்ப தான் இங்கிலாந்துல இந்த இந்தியா வைரஸ் கண்டு பிடித்து சொல்லி இருக்காங்க.
இது dangerous virus என்பதற்கான எல்லா தகுதியும் பெற்று இருக்கிறது என்று சொல்லி இருக்காங்க
ஒரு நாளில் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் இந்தியாவில் உருவாவதற்கு இந்த புதிய கொரானா வைரஸ் B 1617 தான் காரணம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.
இதோட ஸ்பெஷல் என்னன்னா இதுல இரண்டு mutation இருக்கும். அதாவது இரண்டு இடங்களில் E 484 Q மற்றும் L 452 R, மரபணு மாற்றம் ஆகி இருக்கும்.
இந்த மரபணு மாற்றம் என்ன செய்யுதுனா இந்த வைரஸ் சுற்றி இருக்கும் ஊசி போன்ற இடங்களை இன்னும் கூர்மையாக்கும்.
இதனால் இந்த வைரஸ் எளிதாக உடம்பில் உள்ள செல்களில் ஊடுருவி செல்லும் தன்மையை பெறுகிறது
இது இந்த வைரஸ் க்கு எதிர்த்து உருவாகி இருக்கும் ஆண்டிபாடிய அதாவது எதிர்ப்பு சக்தி உள்ள செல்களில் கூட ஊடுருவி அதுலேயே பல்கி பெருகி அதையும் அழிக்கும் வாய்ப்பு பெற்றது.
இதுவரை நாலு இந்த மாதிரி மரபணு மாற்றம் அடைந்த வைரஸ்கள் உலக அளவில் ரிப்போர்ட் ஆகி இருக்கிறது
1)Uk
2) South Africa
3) பிரேசில்
4) இந்தியா variant

இதுல variant of concern னு இந்த இந்தியாவில் உள்ள மரபணு மாற்றப்பட்ட கொரானா வைரஸ் உள்ள கொண்டு வர்றாங்க.
இப்ப பரவும் இந்த இரண்டாவது அலைக்கும் இந்த வைரஸ் தான் காரணம் என்று சொல்லுறாங்க.
இந்த இரண்டாவது அலையோட Hot spots ஐந்து மாநிலங்களில் உள்ளது
மகாராஷ்டிரா
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரா

இதுல எல்லாம் இந்த புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
பழைய கொரானாவுக்கு ம் இந்த கொரானாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
எதனால இது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்?

1) இது air borne வீசும் காற்றில் கலந்து இருக்கிறது. ஒருவர் எதிரே இருந்து தும்மினால் தான் கொரானா வர வேண்டும் என்று
பழசு droplet infections. தும்மும் போது வருவது
2) இதுக்கு அறிகுறிகள் ரெண்டு முதல் ஐந்து நாட்களில் ஆரம்பம் ஆகிறது . பழைய கொரானாவில் 7-15 நாட்கள் ஆகும்.

3) இதுல தொண்டை வலி காய்ச்சல் வயிறு பிரச்சனை தோள் பட்டை வலி ன்னு வித்தியாசமான அறிகுறிகள் அதிகமா தென்படுகிறது.
பழசு ல இருமல் மற்றும் நுரையீரல் பிரச்சனை தான் முக்கியமானது.
4) Ramedesvir அறிகுறி ஆரம்பித்த 3-7 நாளைக்கு போடனும் னு சொல்லி இருக்காங்க. பழசுல வேற எந்த மருந்தும் வேலை செய்யல னா இது ஆரம்பிக்கனும்னு சொல்லி இருந்தாங்க.

5) இப்ப இருக்கிற RT PCR / Antibody test கண்டு பிடிக்க சிரமங்கள் இருக்கிறது அதனால ஸ்வாப் நெகடிவ் னு அலட்சியம் வேணாம்.
6) CT scan ல finding ஒரு வாரம் கழித்து தான் வரும். அதனால காய்ச்சல் வந்ததும் சிடி ஸ்கேன் நார்மல் னு இருக்குனு அலட்சியம் வேண்டாம்.

7) இரத்தம் உறைதல் தடுக்கும் மருந்து இரத்தத்தில் நோய் சிவியரா இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கனும். நுரையீரல் பிரச்சனை வந்த பிறகு கண்டிப்பா கொடுக்க
8)முதல் அஞ்சு நாட்கள் தாண்டி காய்ச்சல் இருமல் சளி இருக்கும் நபர்களுக்கு அடுத்த பதினான்கு நாட்கள் தொடர் கவனிப்பு வேணும். ஆக்சிஜன் அளவு இரண்டாம் வாரத்தில் குறைய வாய்ப்புகள் அதிகம்.

[8) 14 நாட்கள் தாண்டி ஒன்னும் பிரச்சினை வரலனாலும் இந்த எபெக்ட் குறைய மூணு மாசம் மாத்திரை சாப்பிடனு
ஆனால் நம்ம ஊர்ல இந்த நாட்கள் கணக்கு சரியா இல்லைங்கிறாதால எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கிறது னு குழப்பம் இருக்கு

9) இது வீட்டில் பத்திரமா உள்ளங்களை தான் முதல்ல தாக்குது. வெளியே போயிட்டு வர்றவங்களும் பத்திரமா இருங்க
11) பழைய கொரானா வயதானவர்கள் முதியவர்கள் தான் பிரச்சனை னு பேசுனோம். இந்த கொரானா இளம் சிறார்கள் adolescent தான் அதிகமா பாதிக்குது. அதனால வயது வித்தியாசம் ஆண் பெண் வித்யாசம் எல்லாம் இந்த புது வைரஸ் க்கு தெரியாது.

நம்ம ஊர்ல இன்னும் ஆராய்ச்சிகள் வெளியே வரல.
இந்த variant க்கு தனியா RT PCR vaccine anti viral drug எதுவும் இல்லை
அதனால இது புது நோய் அப்படினு தான் நினைச்சு வைத்தியம் பார்க்கனும்

உண்மையில் இப்ப தான் நிசமான புலி வருது இத்தனை நாள் லாக் டவுன் போட்டது எல்லாம் இந்த புலி க்காக தான்
இன்னும் எட்டு வாரத்துல இப்ப உள்ள குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது.
காரணங்கள்
1) மருந்து தட்டுப்பாடு
2)வாக்சின் தட்டுப்பாடு
3) இடம் பற்றாக்குறை
4) மருத்துவர்கள் பற்றாக்குறை
5)
Be safe னு சொல்லுறது பார்மாலிட்டி தான். அது சொல்லாம கடைப்பிடிக்கிறது தான் நல்லது.
Test positivity rate சென்னை க்கு 16 % ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து இருக்கிறது. வழக்கமா 3% க்கு கீழே இருக்கனும் இருந்தா நாம நோய் கட்டுக்குள் வச்சு இருக்கோம்னு அர்த்தம். திடீர்னு மூன்றுல இருந்து பதினைந்தா ஒரு மாசத்துல உயர்வது அந்த இடத்தில் நோய் அறிகுறிகளோட ஆட்கள் அதிகமாகியது
இப்ப ஏற ஆரம்பிச்சு இருக்கும் கிராப் பீக் தொட எட்டு வாரங்கள் ஆகும். இப்பவே முதல் படியில் இருக்கும் போதே இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் புதிய நோயாளிகள் வர்றாங்க. பீக் அப்ப இது பதினாறு மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.

அடுத்து என்ன செய்யலாம்?

போர்ககளத்துல நிக்குறோம்.
1) காலரா ஊசி போட்ட மாதிரி ஒரு தெருவுல இறங்கி தடுப்பூசி அரசாங்கம் போடனும்.

3) நோயோட தன்மைகள் சொல்லி தீவிர நோயாளிகளை அடையாளம் கண்டு பிடிக்கும் பயிற்சி எல்லாருக்கும் சொல்லித் தரணும்.
5)மினி கிளினிக் முழுவதும் கோவிட் ட்ரீட்மெண்ட் சென்டரா மாத்தி தெருவுக்குத் தெரு கணக்கு எடுக்கனும். உடனடியாக வைத்தியம் செய்யனும்.
6) கோவிட் மருத்துவம் முழுவதும் அரசாங்கம் கையில் எடுக்கனும். ஒரே மருந்துகள் அரசாங்கம் மூலம் எல்லாருக்கும் இலவசமா வரணும்.
அப்ப தான் தகுதியானவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்கும்.

8) போர்க்கால அடிப்படையில் எல்லா வேலைகளையும் நிப்பாட்டி முழு
கவனமும் கோவிட் மேல
இந்த அரசாங்கம் முதல்ல அதிகாரிகள் பேச்சு கேட்கிறது கூட சேர்ந்து மருத்துவர்கள் பேச்சு கேட்க ஆரம்பிக்கனும்.

7) பொது மக்கள் அரசாங்கம் சொல்லுறது கேட்க ஆரம்பிக்கனும் முழு ஒத்துழைப்பு கொடுக்கனும்.
இதை தடுக்க நம்ம கிட்ட இருக்கும் ஓரே ஆயுதம்

1) மாஸ்க் போடுறது
2) கைகளை கழுவுறது
3) சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறது
4)அவசியம் இல்லாத வெளியே வராமல் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது
5) முடிந்த அளவு கொரானா பற்றி பேசுவது, பாதித்த நபர்களுக்கு உதவுவது

#கொரானா_இரண்டாம்_அலை
#CoronaSecondWave
@mpgiri போட்டாச்சு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சில்வி

சில்வி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sylvitweets

17 Apr
தடுப்பூசி சில கேள்விகள்

Sabari
1)எனக்கு தடுப்பூசி பற்றி தெரியணும்.

Pressure, sugar இருக்கிறவர்கள் vaccanie எடுக்கிறதால் எதுவும் side effects வருமா

இதுவரை சுகர், பிரசர் இருக்கிறவங்களுக்கு என்று தனியாக side effects வந்தது இல்லை. அவங்க எல்லாம் போட்டுக் கொள்ளலாம்
Jayadevi Baskaran

2)கொரோனா ஊசியால் பயன் இல்லை என்று பிராச்சாரம் செய்பவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

இந்த மாதிரி பிரச்சாரங்கள் உண்மையில் அறிவியலுக்கு எதிரானது. தடுப்பூசி ஒன்று மட்டும் இந்த நோயிலிருந்து மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி. நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள்
Ram prasad

3).Swap test negative but CT scan la positive இது எப்படி?
Swab test மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிறது. எடுக்கப் படும் விதம், அந்த நேரத்தில் நோயாளியின் உள்ள வைரஸ் அளவு, அதை பத்திரமாக வைத்து இருந்து பரிசோதனைகள் செய்யும் வரை
Read 24 tweets
15 Apr 20
Herd immunity

கொஞ்சம் அடிப்படை அறிவியல் தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. 55%பிளாஸ்மா 45%உள்ள இரத்த அணுக்கள்
இந்த இரத்த அணுக்கள் மூன்று வகையானது
1)இரத்த சிவப்பு அணுக்கள் - இதில் உள்ள ஹீமோ குளோபின் ஆக்சிஜன் கொண்டு செல்லக் கூடியது
2)இரத்த வெள்ளை அணுக்கள்
3)இரத்தத் தட்டுகள் - (platelets) இது தான் டெங்கு போது குறைந்த அணுக்கள்.
இந்த மூன்றில் எதிர்ப்புச் சக்தி என்பது இரத்த வெள்ளை அணுக்களால் ஆவது. இதில் ஐந்து வகையான அணுக்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில் முக்கியமானது இரண்டு
1)நியூட்ரோபில் (Neutrophils) இவை பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுவை. எனவே நாம் இப்போது இதை விட்டு விடலாம்.
Read 23 tweets
12 Apr 20
Convalescent plasma therapy
சுருக்கமா பிளாஸ்மா தெரபி.

அதாவது தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்க லேட் ஆகுது என்ற காரணத்தால் உலகம் முழுவதும் ஏதாவது ஒரு முறை ஆராய்ச்சி பண்ணப் பட்டு இருக்கிறது. அதுல ஒரு ஆராய்ச்சி தான் இந்த பிளாஸ்மா தெரபி.
ஏற்கனவே ஹைட்ராக்சி குளோரோகுயின் பர்னிச்சர உடைச்ச ஊடகங்கள் இப்ப இந்த பிளாஸ்மா தெரபி கையில எடுக்க காரணம், கேரளா இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டு இருக்கிறது என்ற தகவல் மட்டுமே தான். அதாவது குடிக்க தண்ணீர் கேட்டா, வெள்ளிச் சொம்பு கொடுத்தாத் தான் கல்யாணம் என்ற ரேஞ்சுக்கு போயாச்சு
உண்மையில் இந்த பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
இது பத்தி தெரிவதற்கு திரும்ப நாம பத்தாம் வகுப்பு அறிவியலுக்கு போகலாம். அடிப்படை அறிவியல் தான். கொஞ்சம் பொறுமையா படிக்கவும்
Read 27 tweets
9 Apr 20
Corona Antibody

நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும்

இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.
இந்த Antibody இரண்டு வகைப்படும்.

முதலாவது Ig M - இது கிருமி உள் நுழைந்த உடனடியாக உருவாவது. கிருமிகள் இருக்கும் வரை இது போராடும். எனவே இது இருந்தால் கிருமிகள் Active ஆக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும்.
இரண்டாவது Ig G இது கிருமிகள் முற்றிலும் அழியும் முன்பு உருவாகும். ஆனால் நமது உடலில் காலத்திற்கும் இருக்கும இந்த வைரஸ் திரும்ப வரும் போது இந்த IgG நினைவு வைத்து அழிக்கும் இயல்பு உடையது. இது பாசிடிவ் என்று வருபவர்கள் இந்த கிருமி பாதிப்பு மீண்டு விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!