Pressure, sugar இருக்கிறவர்கள் vaccanie எடுக்கிறதால் எதுவும் side effects வருமா
இதுவரை சுகர், பிரசர் இருக்கிறவங்களுக்கு என்று தனியாக side effects வந்தது இல்லை. அவங்க எல்லாம் போட்டுக் கொள்ளலாம்
Jayadevi Baskaran
2)கொரோனா ஊசியால் பயன் இல்லை என்று பிராச்சாரம் செய்பவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
இந்த மாதிரி பிரச்சாரங்கள் உண்மையில் அறிவியலுக்கு எதிரானது. தடுப்பூசி ஒன்று மட்டும் இந்த நோயிலிருந்து மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி. நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள்
Ram prasad
3).Swap test negative but CT scan la positive இது எப்படி?
Swab test மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிறது. எடுக்கப் படும் விதம், அந்த நேரத்தில் நோயாளியின் உள்ள வைரஸ் அளவு, அதை பத்திரமாக வைத்து இருந்து பரிசோதனைகள் செய்யும் வரை
உள்ள வெப்ப அளவு என்று பல்வேறு காரணிகள் இதில் இருகுகிறவங்களுக்கு இருக்கின்றன. எனவே swab நெகடிவ் என்று அலட்சியமாக இருக்க கூடாது. அறிகுறிகள் மட்டுமே உண்மையான நிலையை சொல்லும்.
4)இதுல பெர்சன்ட்டேஜ் கணக்கு எப்படி பாக்குறாங்க?
நூறு டெஸ்ட்ல எத்தனை பாசிடிவ் என்பது தான்.
5). எந்த நிலையில் ஆக்சிசன் தேவை?
96% கீழே போனாலே உள்ள நுரையீரல் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்று கண்டு கொள்ளலாம். 90%கீழே போனால் கண்டிப்பா ஆக்சிஜன் தேவை.
6). வாசனை ருசி எல்லாம் தெரிஞ்சும் சிலருக்கு பாசிட்டிவ் வருதே இது ஏன்?
ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க எதிர்ப்பு சக்தி பொறுத்து
7) முன்னெச்சரிக்கை யாக என்ன மருந்து எடுத்துகலாம்
கோவிட் தடுப்பூசி போடுறது மட்டும் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வேற எந்த மருந்தும் இல்லை.
Joseph asirvadham
8)கொரோனா ஒரு குடும்பத்துல ஒருத்தர் பாசிட்டிவ் மத்தவங்களுக்கு நெகட்டிவ் இது எப்படி சாத்தியம்?
ஒவ்வொருத்தர் உடம்பிலும் எதிர்ப்பு சக்தி அளவில் வேறுபடும். அது தான் காரணம்
Remya senjai
9.தடுப்பூசி போடுவதற்கு முன் உடல்நிலையில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உண்டா? (70- 80 வயதினருக்கு )
வழக்கம் போல பிரசர், சுகர் போன்றவை பரிசோதனைகள் செய்து கொள்ளவும்.
Remya senjai
9.தடுப்பூசி போடுவதற்கு முன் உடல்நிலையில் ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உண்டா? (70- 80 வயதினருக்கு )
வழக்கம் போல பிரசர், சுகர் போன்றவை பரிசோதனைகள் செய்து கொள்ளவும்.
10). 45 வயதுக்கு கீழ் உள்ளோர் இப்போது எங்காவது தடுப்பூசி போட வாய்ப்பு உண்டா?
இப்ப வரைக்கும் அரசாங்கம் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல. கூடிய விரைவில் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.
இந்தியா வில் குழந்தை களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளதா?
ஆமாம்
வாக்சின் போட்ட பிறகும் கொரானா வர வாய்ப்பு உள்ளது. ஆனால் வீரியத் தன்மை குறைவாக இருக்கும். எனவே தடுப்பூசி போடுவது நல்லது.
பெரிய கண்ணன்
13)கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு என்ன மாதிரி உணவு பழக்க வழக்கங்களை எடுக்கனும்..
வழக்கம் போல எல்லா உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்
Vidhya beno
14)Vaccinate பண்ணின மக்கள, Covid ல இருந்து காக்க, தடுப்பூசிகளோட பங்கு எத்தகையதா இருக்கு அக்கா? நிஜமாவே vaccines வேலை செய்யுதா?
இங்கிலாந்துல இரண்டாவது அலையை கட்டுப் படுத்தினதுல வாக்சின் பங்கு மிக முக்கியமான ஒன்று.
ஜாலேந்திரன்
இரத்த நாளங்கள் அடைப்பு ( வெரிகோஸ்) உள்ளவர்கள் கொரனா தடுப்பூசி போட லாமா?
Varicose veins ல இரத்த அடைப்பு வராது. தாரளமாக போட்டுக் கொள்ளலாம்
Saravanan
1.கொரோனா வந்து போனதுக்கு அப்புறம் எத்தனை நாள் கழிச்சு தடுப்பூசி போட்டுக்கலாம்.
ஒரு மாசம் கழிச்சு போடலாம்.
2.முதல் டோஸ் தடுப்பூசி போட்டதுக்கு அப்புறம் கொரோனா வந்தா இரண்டாவது டோஸ் எப்ப போடனும்?
ரெக்கவரி ஆகி பதினைந்து நாட்கள் கழித்து போடலாம்
Gurusami
கோவிசீல்டு முதல் டோஸ் போட்ட பின் இரண்டாவது டோஸ்க்கு எத்தனை நாள் இடைவெளியில் போடலாம்....
Pls...
ஆறு வாரங்கள்
Mohan
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் Active Carrier ஆக இருப்பாரா? அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவுமா? அவர் Active Carrier என்பதை எப்படி அறிவது? அவரால், தடுப்பூசி போடாத குடும்ப உறுப்பினர்களுக்கு (சிறுவர்கள்) ஏற்படும் பாதிப்பை எப்படி தவிர்ப்பது?
இந்த மாதிரி ஆக்டிவ்வா கேரியர் எதுவும் சொல்லப்படல. குழந்தைகளை பத்திரமா பார்த்துக் கொள்ள வேண்டும். மாஸ்க் போடுதல், கை கழுவுதல், வெளியே அனுப்பாமல் இருத்தல், சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறது கண்டிப்பா பின்பற்ற வேண்டும்
அ. செல்வன்
எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கு... அலர்ஜி வரும்போது சொரிய சொரிய உடலெல்லாம் தடிப்பு தடிப்பா வரும்.. முதன்முதலில் வந்தபோது ஹைப்பர் டென்சனில் மயங்கி விழுந்தால் அரைமணிநேரம் மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்து இருக்கேன்.. புகைபிடிக்கும் பழக்கமும் உண்டுதடுப்பூசியை போட்டுகொள்ளலாமா.
வழக்கமா இந்த மாதிரி அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவ மனையில் மருத்துவர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளலாம். அலர்ஜி ரியாக்ஷன் வந்தா உடனடியாக வைத்தியம் செய்ய எல்லாம் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
Anuradha msk
Dear Doctor!
1)இந்த வைரஸ் முற்றிலுமாக அழியக்கூடிய சாத்தியம் இருக்கிறதா ??
எவ்வளவு காலமாகும் ??இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? ?
முற்றிலும் அழிய வாய்ப்பு இல்லை. இந்த இரண்டாவது அலை முடிந்து இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்
2) Vaccine களின் பக்க விளைவுகள் 2 ஆண்டுகள் கழிந்த பின்தான் தெரியவரும் என்று ஒரு தகவல் இருக்கிறது- உண்மையா? ?
அது பற்றி தெரியல
3) எந்த வாக்சினும் கொரோனாவுக்குகான தடுப்பை அளிக்கக் கூடியது அல்ல என்று சொல்லப்படுவது உண்மையா? முற்றிலும் தடுக்காது. ஆனால் வீரியத் தன்மை குறைக்கும்
4)எந்த விதமான முக கவசங்களை அணிய வேண்டும்???
சாதாரண துணி கவசம் போதுமானதா ?
மூன்று லேயர் உள்ள முகக் கவசம் அணிய வேண்டும் . துணி கவசம் வீட்டில் இருக்கும் போது போதுமானது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உண்மையில் அன்னைக்கு வன்ஸ் கேட்ட பிறகு தான் படிச்சேன்
அப்புறம் தான் புரிஞ்சது நாம உலகத்திலேயே அபாயகரமான வைரஸ் கிருமி இந்தியால பரவுவது.
Double mutant virus.
வேற எங்கேயும் இந்த mutation இல்லை. இப்ப தான் இங்கிலாந்துல இந்த இந்தியா வைரஸ் கண்டு பிடித்து சொல்லி இருக்காங்க.
இது dangerous virus என்பதற்கான எல்லா தகுதியும் பெற்று இருக்கிறது என்று சொல்லி இருக்காங்க
ஒரு நாளில் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் இந்தியாவில் உருவாவதற்கு இந்த புதிய கொரானா வைரஸ் B 1617 தான் காரணம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.
இதோட ஸ்பெஷல் என்னன்னா இதுல இரண்டு mutation இருக்கும். அதாவது இரண்டு இடங்களில் E 484 Q மற்றும் L 452 R, மரபணு மாற்றம் ஆகி இருக்கும்.
இந்த மரபணு மாற்றம் என்ன செய்யுதுனா இந்த வைரஸ் சுற்றி இருக்கும் ஊசி போன்ற இடங்களை இன்னும் கூர்மையாக்கும்.
கொஞ்சம் அடிப்படை அறிவியல் தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. 55%பிளாஸ்மா 45%உள்ள இரத்த அணுக்கள்
இந்த இரத்த அணுக்கள் மூன்று வகையானது
1)இரத்த சிவப்பு அணுக்கள் - இதில் உள்ள ஹீமோ குளோபின் ஆக்சிஜன் கொண்டு செல்லக் கூடியது
2)இரத்த வெள்ளை அணுக்கள்
3)இரத்தத் தட்டுகள் - (platelets) இது தான் டெங்கு போது குறைந்த அணுக்கள்.
இந்த மூன்றில் எதிர்ப்புச் சக்தி என்பது இரத்த வெள்ளை அணுக்களால் ஆவது. இதில் ஐந்து வகையான அணுக்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில் முக்கியமானது இரண்டு
1)நியூட்ரோபில் (Neutrophils) இவை பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுவை. எனவே நாம் இப்போது இதை விட்டு விடலாம்.
Convalescent plasma therapy
சுருக்கமா பிளாஸ்மா தெரபி.
அதாவது தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்க லேட் ஆகுது என்ற காரணத்தால் உலகம் முழுவதும் ஏதாவது ஒரு முறை ஆராய்ச்சி பண்ணப் பட்டு இருக்கிறது. அதுல ஒரு ஆராய்ச்சி தான் இந்த பிளாஸ்மா தெரபி.
ஏற்கனவே ஹைட்ராக்சி குளோரோகுயின் பர்னிச்சர உடைச்ச ஊடகங்கள் இப்ப இந்த பிளாஸ்மா தெரபி கையில எடுக்க காரணம், கேரளா இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டு இருக்கிறது என்ற தகவல் மட்டுமே தான். அதாவது குடிக்க தண்ணீர் கேட்டா, வெள்ளிச் சொம்பு கொடுத்தாத் தான் கல்யாணம் என்ற ரேஞ்சுக்கு போயாச்சு
உண்மையில் இந்த பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
இது பத்தி தெரிவதற்கு திரும்ப நாம பத்தாம் வகுப்பு அறிவியலுக்கு போகலாம். அடிப்படை அறிவியல் தான். கொஞ்சம் பொறுமையா படிக்கவும்
நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும்
இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.
இந்த Antibody இரண்டு வகைப்படும்.
முதலாவது Ig M - இது கிருமி உள் நுழைந்த உடனடியாக உருவாவது. கிருமிகள் இருக்கும் வரை இது போராடும். எனவே இது இருந்தால் கிருமிகள் Active ஆக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும்.
இரண்டாவது Ig G இது கிருமிகள் முற்றிலும் அழியும் முன்பு உருவாகும். ஆனால் நமது உடலில் காலத்திற்கும் இருக்கும இந்த வைரஸ் திரும்ப வரும் போது இந்த IgG நினைவு வைத்து அழிக்கும் இயல்பு உடையது. இது பாசிடிவ் என்று வருபவர்கள் இந்த கிருமி பாதிப்பு மீண்டு விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்