தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாக நான் சீமானைக் காண்கிறேன். பல அரசியல் விமர்சகர்களதும் கருத்து அதுவே. தனிமனித வழிபாடு, உட்கட்சி ஜனநாயக மறுப்பு, கற்பனைகளில் வாழ்தல் போன்றவற்றால் நிகழக்கூடிய அபாயங்களுக்கு...
(1/n)
...ஈழத்தமிழரின் பேரழிவைவிட வேறு சாட்சியங்கள் தேவையில்லை. சீமான் பற்றி மானசீகனின் பதிவொன்று கீழே. தமிழக இளைஞர்களின் அரசியலைச் சரியான வழியிற் கொண்டு செல்லத்தக்க முற்போக்கு அணிகள் பணிகளை ஆரம்பிக்காவிடில் விளைவுகள் கவலைக்குரியதாக ஆகலாம்....
(2/n)
..."இந்திய ராணுவத்தில் நாம் தமிழர் படை ஒண்ணு இருக்கு. அவங்க என்கிட்ட பேசுனாங்க 'அண்ணே நாங்க ஓய்வு பெற்ற பிறகு நெய்தல் படைக்கு பயிற்சியளிப்போம். கடல் வழியே போய் இலங்கையைக் கைப்பற்றுவோம் ' " என்று சீமான் பேசுகிறார்...
(3/n)
வானைப் பிளக்கும் கைதட்டல்களோடு தம்பிகளின் விசில் பறக்கிறது. ( அவருடைய மேடைகளில் இது ஒரு சாம்பிள்தான் . இது மாதிரி நூற்றுக்கணக்கான அபத்தமான கற்பனாவாதங்களும் , திராவிட எதிர்ப்பரசியல் என்கிற விஷமும் மெல்ல மெல்ல இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது )
(4/n)
எனக்குத் தெரிந்து எந்த அரசியல் கூட்டத்திலும் இப்படி ஓர் அபத்தமான பேச்சை தொண்டர்கள் கண்ணை மூடிக் கொண்டு ரசிப்பதில்லை . சில மதக் கூட்டங்களை விடப் பயங்கரமான கற்பனாவாதம் இது. தொடர்ந்து சீமானின் பேச்சைக் கேட்கும் போது எனக்குத் தோன்றியது இதுதான்.
(5/n)
அவர் தெரியாமல் எல்லாம் பேசவில்லை. தெரிந்தே இளைஞர்களை முட்டாளாக்குகிறார் . (உயர்ந்த இடத்தின் இரகசிய ஆதரவு அவருக்குக் கண்டிப்பாக இருக்கிறது என்பதே என் ஊகம்) ஆளும் வர்க்கத்திற்கு எதிரான நியாயமான கோபங்களை இந்த மாதிரிக் கற்பனாவாதங்களைப் பேசி மடைமாற்றுகிறார்.
(6/n)
அவருடைய நோக்கம் இரண்டுதான்.
1.மக்களின் கோபங்கள் புரட்சியாக மாறி விடக்கூடாது. தேர்தல் அரசியலில் ஒரு வார்டிலாவது வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் துளியளவும் இல்லாமல், 'அண்ணன் வந்தால் எல்லாம் மாறிடும் ' என்கிற போலி நம்பிக்கையை...
(7/n)
...பல ஆண்டுகளாக விதைத்து விதைத்து அவர்களை மந்தைகளாக்கி அலைய விடுகிறார்
2. இந்து பாசிசத்தையும் , திராவிட இயக்கங்களின் நடைமுறைப் பிரச்சினைகளையும் ஒரே தட்டில் வைத்து தமிழகத்தின் நிகழ்கால அரசியற் களத்தைத் திராவிட எதிர்ப்பை மையமாக வைத்து உருவாக்க நினைக்கிறார்.
(8/n)
அது வெறும் ஸ்டாலின் தொடர்பான பிரச்சினை இல்லை. நூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் நிலைபெற்றிருக்கும் சமூகநீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பொருளாதார நலத்திட்டங்கள், மதச்சார்பின்மை ஆகிய சித்தாந்தங்களை ஒதுக்கி விட்டு ஓர் இனவாத அரசியலை உருவாக்க நினைக்கிற விஷமமான திட்டம்.
(9/n)
அவரைக் குறைத்து எடைபோட வேண்டாம் . டார்ச் லைட்டை விட இது ஆபத்தானது . இமயமலையிலிருந்து 'ஆன்மீக ஜோதி ' வந்தால் டார்ச்லைட்டில் பேட்டரி தீர்ந்து விடும். ஏனென்றால் அது வெறும் ஆர்வக்கோளாறு. இது அரசியல் என்கிற பெயரில் பரவி வரும் விஷம்.
(10/n)
இளைஞர்கள் மிக அதிகமாக அவர் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். பகிர்கிறார்கள். சிலர் மட்டுமே கிண்டல் செய்யப் பலர் அவரைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். அவர் அரசியலில் ஜெயிப்பதாலோ, ஸ்டாலின் தோற்பதாலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
(11/n)
ஆனால், அவரை வைத்து உருவாக்கப்படும் இளைஞர்களின் அரசியல் நீக்கம் எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. அதற்காகவே நான் கவலைப்படுகிறேன்.
இணையத்தில் இயங்கும் திராவிட சிந்தனையாளர்கள் இன்றைய இளைஞர்களிடம் பொறுப்போடும்,...
(12/n)
...பல்வேறு உத்திகளோடும் உரையாட வேண்டிய தேவை இருக்கிறது. மிக முக்கியமாகக் கண்ணை மூடிக் கொண்டு கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்காமல் திராவிட, இடதுசாரி, அம்பேத்கரிய, காந்திய , நேருவிய, இடதுசாரி தமிழ்தேசியச் சிந்தனையாளர்கள் பிஜேபி எதிர்ப்பைப் போலவே....
(13/n)
...சீமான் விஷயத்திலும் ஒன்றுபட்டு அவருடைய பொய்களையும் , போலித் தமிழ்த் தேசியத்தையும் தக்க தரவுகளுடன் அம்பலப்படுத்துவதும், இளைஞர்களுக்கு முறையான அரசியலை அறிமுகம் செய்வதும் காலத்தின் தேவை .
தன் அரசியலை வெளிப்படையாக பேசும் எதிரிகளை விட,...
(14/n)
...நம் அரசியலை திரிபுவாதம் செய்யும் நபர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். அந்த ஆமை நடுவீட்டுக்கு வந்து நம் புத்தக அலமாரியை சத்தமில்லாமல் தின்று கொண்டிருக்கிறது!
- மானசீகன்
(End)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்...
(2/5)
... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார்
கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ...
(3/5)
கடந்த 4வருடங்களாக ஸ்டாலின் நினைத்திருந்தால் பாஜகவோடு கைகோர்த்து (அதும் பாஜக பல முறை திமுகவோடு கூட்டு சேரவேண்டும் என முயற்சித்து) அதிமுக அரசை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அவை அனைத்தையும் புறம் தள்ளி மிக,மிக.. எவ்வளவு மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்...
(1/4)
அவ்வளவு மிக கடுமையாக பாஜகவை அதும் ஒரு படி மேலாக சென்று சேடிஸ்ட் மோடி, ஃபாஸிஸ்ட் மோடி என்று விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கிற ஸ்டாலினை எப்போதும் சந்தேக கண்களோடுவே பார்ப்பவர்கள், கடந்த நான்கு வருடங்களாக மக்களுக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம், புதிய கல்வி கொள்கை,..
(2/4)
CAA,உயர் வகுப்பினர் 10% இடஒதுக்கீடு, EIA என மக்கள் விரோத பாஜகவின் திட்டங்களுக்கு அடிபனிந்து அவர்களுக்கு ஆதரவளித்து, தமிழ்நாட்டில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்ற எடப்பாடியை இன்று விநாயகரை வைத்து பாஜக நடத்தும் நாடகத்தில் பாஜகவை எதிர்ப்பவராய் திரைக்கதையில்
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகம் இது வரை காணாத களம்!
வழக்கமாக ஆளும் கட்சிக்கே நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதும் 10 வருடங்கள் ஆண்டு கொண்டிருக்கிற கட்சி பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், ஊடகங்களின் தாக்குதல்கள் இருக்கும்.
(1/7)
அவர்கள் குறைகளை சுட்டிக்காட்டியே எதிர்கட்சி ஸ்கோர் செய்யும் நிலை இருந்தது. தன் குஞ்சுகளை பருந்திடமிருந்து காக்க கோழி ஓடி ஓடி காப்பது போல் கடைசி வருடத்தில்
ஆளும்கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராட வேண்டும். மக்களிடம் மண்டியிட வேண்டும்.
(2/7)
ஆனால் இன்று ஆளும் கட்சியின் நிலையே வேறு. அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை, ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் கூட பெரிதாக இல்லாமல் கேவலமான துக்ளக் தர்பார் நடத்தி வருகின்றனர். ஆனால் அவை எதுவும் விவாத, பேசு பொருள் ஆகாமல் மாறாக எதிர்கட்சியின் மீது அத்தனை வன்மங்கள்,
ஆ.ராசா 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப் பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். ஒட்டுமொத்த நாடும் தனக்கு திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில்,