சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். திருமணம் வேண்டுவோர்க்கு அருள் புரியும் தலம். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில்
மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.
ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள்
நகர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.
பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.
ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்தார் சிவபிரான்.
அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.
தேவாரப் பாடல்:
சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன்
புத்தர் தேர் அமண்கையர்-புகழவே,
மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம்
அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.
சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை 'மேலைக்காழி' என்பர்.
கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர்.
ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான்.
சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் இது காமனை எரித்த தலம். எனவே இறைவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால்
மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும் . அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும்.
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.
பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.
எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.
இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.