சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை 'மேலைக்காழி' என்பர்.
கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர்.
ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான்.
வழியில் விமானம் தடைபட்டு நின்றது கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான்.
இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கிய பின் லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான்.
அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் 'குற்றம் பொறுத்த நாதர்' எனப்படுகிறார்.
விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு.
சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் 'தலைஞாயிறு' என வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது.
72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர்.
இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது. சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் 'கருப்பறியலூர்' என வழங்கப்படுகிறது.
ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான், முடியவில்லை. அதனால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனை குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும்
என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார்.
அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். பின் இவர் அமைத்து வழிபட்ட தலம் தற்போது 'திருக்குரக்கா' எனப்படுகிறது.
தேவாரப் பாடல்:
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.
சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் இது காமனை எரித்த தலம். எனவே இறைவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால்
மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும் . அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும்.
சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். திருமணம் வேண்டுவோர்க்கு அருள் புரியும் தலம். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில்
மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.
சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.
ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள்
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.
பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.
எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக,
சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
வாசிக்கும் இதை, “பஞ்ச வாத்தியம்” என்றும் கூறுவர்.
இவற்றில் மிகவும் பழமையானது கொக்கரை, சங்கு. “சங்கநாதம்” மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, எப்படியோ வேறு பார்வை ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களெல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.
சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.