ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது: 1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான். 2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.
தற்போது கட்டப்பட்டுவரும் Central Vista திட்டம் முடிவடையும்போது, இது முழுமை பெற்றுவிடும். நாடாளுமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்படும். 3. சீன நாடாளுமன்றமான National People's Congressல் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 2,980.
இதனால், அந்த நாடாளுமன்றம் அதிபரின் ரப்பர் ஸ்டாம்பாகவே இருக்கும். ஏகப்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால் எந்த விவாதமும் நடக்காது. ஆகவே, எல்லா அதிகாரமும் ஏழே ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மத்திய கமிட்டியிடம்தான் இருக்கும். அதிபர் சொல்வதை இந்த ஏழுபேரும் கேட்பார்கள். அதே பாணியில், மிகப் பெரிய
நாடாளுமன்றத்தை உருவாக்கி, அதிகாரத்தை மோதி-அமித் ஷா ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்வார்கள்.
4.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, தென்கொரிய பாணியிலான குடும்பங்களுக்குச் சொந்தமான மிகப் பெரிய காங்ளமரேட்கள் உருவாக்கப்படும். இப்போதே அந்த நிறுவனங்கள்எவை என்பதை நம்மால் எளிதில்அடையாளம் காண முடியும்.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் இரு முனைகளுக்கு இந்த இரு நிறுவனங்களின் பெயர்கள்தான் சூட்டப்பட்டிருக்கின்றன. 5. ஆனால், தென்கொரிய நிறுவனங்கள் உலகத் தரத்தில் செயல்படுபவை. உலகின் பிற பெரிய நிறுவனங்களுடன் தரத்தில் போட்டியிடுபவை. ஆனால், மேலே சொன்ன இந்திய நிறுவனங்கள் அப்படி
அல்ல.பதிலாக, இந்தியாவின் பல்வேறு தரப்பினரிடமும் உள்ள செல்வத்தை சிலரிடம் குவிப்பதற்கான செயல்கள் நடக்கும். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் சாதாரண மக்களின் வருவாய் பல மடங்கு குறைந்திருக்கும்போது, இந்தியப் பெரும் பணக்காரர்களின் வருவாய் 35 சதவீதம் உயர்ந்தது இதற்குச் சான்று. 6. அடுத்தது
தான் முக்கியமான பகுதி. இந்திய வாழ்வின் சக அம்சங்களிலும் இந்துத்துவ விஷத்தை புகுத்துவது. ஒருவர் இந்துவாகவோ முஸ்லிமாகவோதான் இருக்க வேண்டும். அல்லது சங்கியாகவோ தேசத்துரோகியாகவோ இருக்க வேண்டும். 7. முடிவில் இந்தியாவானது சீனா,தென் கொரியா,இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் உள்ள அபாயகரமான
அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு நாடாகிவிடும்.இந்தச் சூழலுக்கு மத்தியில்தான் ராகுல் காந்தியின் ஆளுமையையும் வியூகத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
8.பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்சும் எதையும் காதில் வாங்காமல், செய்வதைச் செய்துகொண்டே போகும் பாணியைக் கொண்டவர்கள்.மாறாக,காங்கிரஸ் படிப்படியாக
விஷயங்களைச் செய்வதற்கும் பேச்சுவார்த்தைக்கும் இறங்கிவருவதற்கும் ஒப்புக்கொள்ளக்கூடியது.
9.மோதியும் அமித் ஷாவும் தொடர்ந்து மக்களை பதற்ற நிலையில் வைத்து,ஒரு அணிதிரட்டலை செய்துகொண்டே இருக்கிறார்கள்.ஆனால், ராகுலும் காங்கிரசும் தீவிர வலதுசாரி அல்லது இடதுசாரி நிலையை எடுக்காமல் தொடர்ந்து
இந்தியாவை முன்னகர்த்திச் செல்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். உரையாடுகிறார்.
10.இதனால்,ராகுல்காந்தியைவிட அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கூடுதல் மதிப்பு உருவாகிறது.அவர் வெறும் ஒரு அரசியல் வாரிசு அல்ல.ஒரு பாரம்பரியத்தின் வாரிசு. 11. மோதியும் அமித்ஷாவும் சீனா - தென்கொரிய-இந்துத்துவம்
இணைந்த இந்தியாவை உருவாக்க முயலும்போது மக்களிடம் ராகுல் காந்தி முன்வைப்பது மாதிரியான ஒரு அரசியலுக்கான ஆதரவு அதிகரிக்கும். இந்தியாவின் மகத்தான அமைப்புகள் வீழ்ச்சியிலிருந்து மீளும். அப்படி ஒரு எதிர்காலத்திற்கான நம்பிக்கை இருந்தால், ராகுல் காந்தி அதன் மையமாக இருப்பார். @RahulGandhi
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட
வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக இவை ஆபத்தற்றவை என்றாலும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது(சில உள்ளினங்களில்) ஒரு பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடையத் திரவத்தை வெளியேற்றுகின்றன. இத்திரவம் கண்களில் பட்டால் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
உடலின் ஒருமுனையில் அமைந்திருக்கும் வாயில் குட்டி மரங்களை ஒத்த
கோவிட் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 35அரசு மருத்துவமனைகளில் (குறிப்பு;- மாநிலத்தில் அல்ல,அரசு மருத்துமனைகளில் மட்டும்) உள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 355கி.லி. கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இன்னும் அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்று எண்ணிய தமிழக அரசு
இந்த உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவெடுத்தது. மேலும் 30 அரசு மருத்துவமனைகளில் 431கி.லி திரவ ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவியது. இதுவும் மீறி தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று இன்னொரு 100கிலி திறன் கொண்ட உருவாக்க ஆலைகளை அமைக்கிறது. இதைத்தவிர தமிழகம் எங்குமுள்ள ஆக்சிஜன் உருவாக்க ஆலைகளின்
திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
அப்படியே பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம் செல்வோம், நான்கு தினங்களுக்கு முன்னர்தான் அந்த மாநில முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அம்மாநிலத்தில் உள்ள 37மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு 55-60
"இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது", இது பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனம். இது எதுக்கு இப்போது என்று நினைத்தால், படியுங்கள்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக
அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அறமற்ற செயலும் கூட.
பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால்
கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது அறமற்ற செயல்,
"எனக்கு மாதவிடாய் நாட்களே புடிக்காது, 6-7 நாட்களுக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது, சானிடரி நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை, அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லமுடியாமல் போய்விடும்" என்கிறார் ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தை சேர்ந்த 14வயது நிவேதிதா மொஹபத்ரா. இதில்
நிவேதிதா மட்டும் தனித்தல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவியர் மாதவிடாயால் பள்ளிக்கு செல்லமுடியாமல் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேசிய "குடும்ப சுகாதார கணக்கெடுப்பில்", ஒடிசாவில் மட்டும் சுமார் 53% பெண்கள் சுகாதாரமற்ற வழிமுறைகளை பின்பற்றி மாதவிடாயை
கையாளுகிறார்கள் என்று தெரியவந்தது .
இந்த அவலநிலையை போக்குவதற்காக கடந்த2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒடிசா அரசாங்கம் "குஷி" திட்டத்தை துவக்கியது.இந்த திட்டத்தின் படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 17லட்சம் மாணவியருக்கு இலவசமாக "சானிடரி நாப்கின்"
கடந்த மாதம் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனேக கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன,அந்த பகுதிக்கு் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.திமுக சுற்றுச்சூழல் அணியின் கார்த்திகேய
சிவசேனாபதி, விசிக தலைவர் தோழர் திருமாவளவன் அந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது தோழர் திருமாவளவனிடம், "தோழர் கட்சிக்கென்று சுற்றுச்சூழல் அணி உருவாக்கவேண்டுமென்ற கோரிக்கையை வைத்தோம்". அதற்கு அவர்"தோழர் கட்சியே சுற்றுச்சூழல் அணிதான்"
என்றார்.மகிழ்ச்சி தோழர் என்றோம். அவர் சொல்லியதை போலவே விசி கட்சிக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது.
பானை - சுயசார்பின் சின்னம்
பானை - சூழல் பாதுகாப்பின் சின்னம்
பானை - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சின்னம்
பானை - மரபுசார் தொழில் நுட்பத்தின் சின்னம்
பானை - ஊரக பொருளாதாரத்தின் சின்னம்
அதானியின்”காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம்.இதன் நோக்கம் சென்னை, எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய
துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை
கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஒன்றில் 6 பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே