அறிவியல் ஆராய்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய படம். இன்று நாம் உயிரியலில் உச்சத்தை அடைந்திருப்பதற்க்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தது என்றால் மிகையாகாது.
இன்று #WorldDNADay (1)
பெருந்தொற்றின் ஊடாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் நாம் கொண்டாட வேண்டியது அறிவியல் ஆரய்ச்சியாளர்களையும், மருத்துவ பணியாளர்களையும் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் மனித குலம் என்றோ நீர்த்து போயிருக்கும். (2)
DNA என்றவுடன் நமக்கெல்லாம் நினைவில் வரும் பெயர்கள் வாட்சன் மற்றும் கிரிக் (Watson & Crick). இவர்கள் தான் DNA வின் கட்டமைப்பை விளக்கியவர்கள் என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம். ஆனால் இவர்களுக்கு முன்னதாகவே ஒரு பெண்மணி DNA வின் கட்டமைப்பை ஆராய்ந்து கொண்டிருந்தார் (3)
அவர்தான் ரோஸலின்ட் பிராங்களின் (Rosalind Franklin- An unsung personality in DNA structure discovery). அவரைப்பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை சுட்டவும் 👇🏻 (4)
இந்த பெருந்தொற்றின் ஊடாய் கடந்து சென்று கொண்டிருக்கிற இந்த வேளையில் பலதரப்பட்ட செய்திகள், அதன் விளைவாக மக்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்கள் என்கிற நிலை. இயன்ற அளவிற்க்கு சந்தேகங்களை தகுந்த அறிவியல் ஆதாரத்தோடு களைந்து வருகிறோம். (1)
அந்த வரிசையில் இன்று, CRP பரிசோதனை பற்றி தெரிந்து கொள்வோம். தடூப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை கேட்ட மாத்திரத்தில் பலரும் கேட்ட கேள்வி, CRP டெஸ்ட் பன்னனுமாமே. அது அவசியம் செய்யனுமா? அதற்கான பதில் தான் இந்த இழை. (2)
1. CRP என்றால் என்ன?
CRP என்கிற பதம் C-Reactive Protein என்பதின் சுருக்க குறியீடு. இது ஒரு புரதம். இந்த புரதம் உற்பத்தியாகும் இடம் கல்லீரல் (Liver). கல்லீரலில் உருவாகி இரத்த ஓட்டத்தில் கலக்கும். (3)
Remdesvir- இந்த மருந்து முதன் முதலாக ஹெப்பாடைடிஸ் - C நோய் தொற்றை குணப்படுத்த உருவாக்கப்பட்டது. அதன் பின் பரிசோதனை முயற்சியாக எபோலா தொற்றின் போது உபயோகப்படுத்தபட்டது. ஆனால் எந்தவித பயனும் இல்லை. இப்போது கோவிட்-19 குணப்படுத்த வல்லதா என்ற முயற்ச்சி செய்கிறார்கள். (1)
இதுவரையில் எந்த பலனும் இல்லை. பல மருத்துவ நிபுணர்கள் இந்த மருந்தை கோவிட்-19க்கு தொற்றிற்கு உபயோகபடுத்துவதை வீண் என்று கூறி வருகிறார்கள். அது முற்றிலும் உன்மை. அநாவசியமான ஒரு தேவை பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். (2)
Favipiravir - இந்த மருந்து இன்புளுயன்சா தொற்றுக்காக உருவாக்கப்பட்டது. வேறு எந்த வைரஸ் தொற்றையும் இது குணப்படுத்தாது. கோவிட்-19 தொற்று உட்பட. மேற்குறிப்பிட்டதை போல இதுவும் ஒரு தேவையில்லாத மருந்து (3)
புதிய கொரோனா வைரஸ் தொற்றை இப்பொழுது நடைமுறையில் இருக்கும் COVID-19 RT-PCR முறையில் கண்டறிவது சாத்தியமில்லை. CT ஸ்கேன் அல்லது புனேவில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் வைரஸின் மரபனுவை ஆய்வு செய்வதன் மூலம் கண்டிறியலாம். (1/4)
RT-PCR negative என்றால் கோவிட் நெகட்டிவ் என்று அர்த்தமல்ல (இப்போதைய சூழலில்) ஆகவே கட்டாயம் CT ஸ்கேன் செய்தே ஆக வேண்டும். இந்த புதிய வைரஸ் அதிவேகமாக பரவுமே தவிர அதிக உயிரிழப்புக்களை உண்டாக்காது. ஆனால் 14-21 நாட்கள் முதலான தனிமைப்படுத்தல் போன்றவை அவசியமாகிறது. (2/4)
இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவிலிருந்து தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரவது கடந்த நாட்களில் பயணித்து இருந்தால் தயவு செய்து அவர்களை உடனே அருகில் இருக்கும் COVID மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும். ஆகவே பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். (3/4)
நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த ஒன்று. நம்மில் நிறைய பேர் அதிகம் சொல்லும் குற்றச்சாட்டு; டாக்டர் கிட்ட போனா இந்த டெஸ்ட எடு, அந்த டெஸ்ட எடு. ஸகேன் பன்னு என்று, நீளமா லிஸ்ட் போட்டு 1,000, 2,000, 10,000 வாங்கிடுறாங்க. கடைசியா ஒன்னும் இல்லனு சொல்லுறாங்க. (1/n)
இப்படி பல பேர் பல நேரங்களில் பேசி கேட்டதுண்டு. எந்த மருத்துவ பரிசோதனை செய்யும்போதும், அதை பற்றி நோயாளிக்கும் அவரோட உடன் வந்தவருக்கும் விளக்கி கூறிய பின்னரே சோதனை செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. மேலை நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. (2/n)
நம் தேசத்தை பொறுத்தவரை, தவிர்க்க இயலாத காரணங்களால் அதை செய்ய இயலாத நிலை. மருத்துவர்கள் வேண்டுமென்றே இந்த முறைகளை புறந்தள்ளுவதில்லை. அவர்களுக்கு போதிய நேரமில்லை, குறிப்பாய் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை கணக்கிட்டால் மருத்துவர்களின் கஷ்டம் விளங்கும்(3/n)
பல நேரங்களில்; நம் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ வீட்டின் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி , இந்த பிள்ளையை மாதிரி எங்க பரம்பரையிலே யாரும் இல்லைங்க, தப்பி இங்க வந்து பிறந்திடுச்சி எப்படி சமாளிக்கறதுனே தெரியல என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.(2/n)
அப்படி பாக்டீரீயா குடும்பத்தில் தப்பி பிறந்த குழந்தைகளை Strain என்று குறிப்பிடுவோம். Strains are most often virulent. They are the rebels. They are unique and they carry an extraordinary level of determination (3/n)