நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த ஒன்று. நம்மில் நிறைய பேர் அதிகம் சொல்லும் குற்றச்சாட்டு; டாக்டர் கிட்ட போனா இந்த டெஸ்ட எடு, அந்த டெஸ்ட எடு. ஸகேன் பன்னு என்று, நீளமா லிஸ்ட் போட்டு 1,000, 2,000, 10,000 வாங்கிடுறாங்க. கடைசியா ஒன்னும் இல்லனு சொல்லுறாங்க. (1/n)
இப்படி பல பேர் பல நேரங்களில் பேசி கேட்டதுண்டு. எந்த மருத்துவ பரிசோதனை செய்யும்போதும், அதை பற்றி நோயாளிக்கும் அவரோட உடன் வந்தவருக்கும் விளக்கி கூறிய பின்னரே சோதனை செய்யப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. மேலை நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. (2/n)
நம் தேசத்தை பொறுத்தவரை, தவிர்க்க இயலாத காரணங்களால் அதை செய்ய இயலாத நிலை. மருத்துவர்கள் வேண்டுமென்றே இந்த முறைகளை புறந்தள்ளுவதில்லை. அவர்களுக்கு போதிய நேரமில்லை, குறிப்பாய் அரசு மருத்துவமணைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை கணக்கிட்டால் மருத்துவர்களின் கஷ்டம் விளங்கும்(3/n)
நேரமின்மை என்கிற ஒரு காரணத்தால் மட்டுமே பெரும்பான்மையான மருத்துவர்கள் அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை பற்றிய அவசியத்தை விளக்கி கூற முடிவதில்லை. Doctors prefer to spend more time with their patient, but usually they are deprived of that chance due to overload of patients.(4/n)
பொது மக்களுக்கு இந்த பரிசோதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்ச்சியாக எளிய முறையில் ஓவ்வொரு பரிசோதனை முறையைப்பற்றியும் அதை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன் உங்கள் ஆதரவோடு. (5/n)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Naveen Prabakaran

Naveen Prabakaran Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @cnpkaran

28 Nov
Antibiotic Resistance- Thread- Final Part

இந்த தலைப்பின் முதல் மூன்று இழைகளின் இணைப்பு👇🏽

Part-1

Part-2

Part-3
பல நேரங்களில்; நம் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ வீட்டின் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி , இந்த பிள்ளையை மாதிரி எங்க பரம்பரையிலே யாரும் இல்லைங்க, தப்பி இங்க வந்து பிறந்திடுச்சி எப்படி சமாளிக்கறதுனே தெரியல என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.(2/n)
அப்படி பாக்டீரீயா குடும்பத்தில் தப்பி பிறந்த குழந்தைகளை Strain என்று குறிப்பிடுவோம். Strains are most often virulent. They are the rebels. They are unique and they carry an extraordinary level of determination (3/n)
Read 22 tweets
28 Nov
Antibiotic Resistance- Thread- Part-3

அனைவருக்கும் வணக்கம்! Antibiotic Resistance என்கிற தலைப்பில் எழுதிய இரண்டு பாகங்களின் இழையை படித்து பகிர்ந்தமைக்கு நன்றி. முதல் இரண்டு இழைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகள் பற்றிய தகவல்களை பாரத்தோம். (1/n)
இந்த இழையில் பாக்டீரீயாக்கள் எப்படி பாக்டீரீயா எதிர்ப்பிகளை எதிர்க்கிற திறமையை (Resistance) உருவாக்கி கொண்டன/ கொண்டிருக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
பாக்டீரீயாக்கள் இருகூற்றுப்பிளவு ( Binary Fission) முறையில் இனப்பெருக்கம் செய்பவை. (2/n)
ஒரு பாக்டீரியா இருகூற்றுப்பிளவு முறையில் இரண்டாக மாறுவதற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரம் Doubling Time (DT) எனப்படும். நம் உடலில் அங்கமாக இருக்கும் பல பாக்டீரீயாக்களுக்கு DT 20-60 நிமிடங்கள். ஆனால் சில பாக்டீரீயாக்களுக்கு DT 72 மணி நேரம் அல்லது அதற்க்கு மேலும் கூட ஆகும். (3/n)
Read 20 tweets
26 Nov
Antibiotic Resistance- Thread - Part-2

முதல் இழையில் பாக்டீரீயாக்களை பற்றி எழுதியிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்க இயலாமல் போயிருந்தால் அவசியம் படிக்கவும். இணைப்பு கீழே👇🏽 (1/n)
இந்த இழையில் நோய்த்தொற்றுகளின் வகைப்பாடு மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகளின் (Antibiotic) கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவது வகைப்பாடு நோயுண்டாக்கும் கிருமிகளின் மூலத்தை (Source) அடிப்படையாக கொண்டது. (2/n)
1. Exogenous (exo-வெளி) Infections - இந்த வகையான நோய்த்தொற்றிக்கு காரணமான நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுனிகள்) தண்ணீர், காற்று, உணவு, பகிர்ந்து உடுத்தும் உடைகள் மூலமாக தொற்றும்.எ.கா, சளி, காசநோய், மூளைக்காய்ச்சல், மலேரியா (3/n)
Read 23 tweets
23 Nov
Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n)
எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
நுண்ணுயிரிகளின் உலகம் வியப்பானது, விசித்திரமானது, ஆபத்து மிக நிறைந்தது. நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் எளிய முறையில் வகைப்படுத்தயிருக்கிறேன். (3/n)
Read 25 tweets
21 Aug
இழை 👇

2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
Read 16 tweets
12 Jul
Thread
மருத்துவ மாணவர்களும் சாதி வெறியும்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n)
நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி. ஆதலால் பொதுவாக என்னுடைய வகுப்பில் எல்லோரும் சற்று கவனமாகவே இருப்பார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வகுப்புகளில் இந்த மாணவர்களின் சேட்டைகள் அளவுக்கதிகமாக இருந்த வந்தது. (3/n)
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!