பல நேரங்களில்; நம் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ வீட்டின் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி , இந்த பிள்ளையை மாதிரி எங்க பரம்பரையிலே யாரும் இல்லைங்க, தப்பி இங்க வந்து பிறந்திடுச்சி எப்படி சமாளிக்கறதுனே தெரியல என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள்.(2/n)
அப்படி பாக்டீரீயா குடும்பத்தில் தப்பி பிறந்த குழந்தைகளை Strain என்று குறிப்பிடுவோம். Strains are most often virulent. They are the rebels. They are unique and they carry an extraordinary level of determination (3/n)
பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க எந்த சக்தி முயன்றாலும் அதை எதிர்த்து நிற்கிற வல்லமையை அவை போராடி கற்றறிந்து வைத்திருப்பவை. தான் கற்றுக்கொண்டதை தன்னோடு வைத்துக்கொள்ளாமல் அவர்களை போல ஒத்த கருத்துள்ள வேற்று குடும்பத்து பாக்டீரீயாக்களுக்கும் அதை கற்றுக்கொடுக்கின்றன.(4/n)
They pass on their skills to their next generation and also to the like minded rebels from other bacterial genera. Because, Sharing is caring right? பாக்டீரியாக்கள் தங்களுடைய அடுத்த பரம்பரையை காண வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. (5/n)👇🏽
மாமேதை அண்ணல் அம்பேத்கரின் முழக்கமான; கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்கிற வாசகத்தை நாம் உள்வாங்கி செயல்படுகிறோமோ இல்லையோ, பாக்டீரியாக்கள் மிக அர்ப்பணிப்போடு இவற்றை செய்து வருகின்றன. (6/n)
பாக்டீரீயாக்களுக்கு போராட்ட உணர்வை தூண்டி விடுவது எது? எந்த காரணங்களால் அவை மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற முடிகிறது என்பதை பின் வரும் மூன்று பகுப்பாய்வுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். (7/n)
Case 1: Underuse of antibiotics
ஒருவருக்கு பாக்டீரீயா நோய்த்தொற்று வந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அவர். மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் நோயாளியை நன்கு ஆராய்ந்த பின்னர், தேவைப்பட்டால் நோயளியின் குருதியை ஆய்வுக்கு* உட்படுத்தி அதையும் படித்த பின்னர்(8/n)
மருந்து எழுதிக்கொடுத்து 5 நாட்கள் இந்த மருந்தை உட்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்புகிறார். நோயளி மருந்து சீட்டோடு மருந்தகம் சென்று சீட்டை நீட்டியபடி இரண்டு நாளைக்கு மட்டும் கொடுங்க என்று கேட்டு இரண்டு நாட்களுக்கு மட்டும் மருந்தை வாங்கி உட்கொள்ளுகிறார்.(9/n)
அவருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மீதி மூன்று நாட்கள் மாத்திரை உட்கொள்வதை தவிர்க்கிறார். மருத்துவர் பரிந்துரைத்த Antibiotic க்கின் அளவைவிட குறைவான அளவை உட்கொண்டால் நம் உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அவை உணவு போல பழகிவிடும். (10/n)
Case 2: Overuse of Antibiotics
ஓரு நோயாளிக்கு மருத்துவர் 3 நாட்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்து உட்கொள்ள அறிவுறுத்துகிறார். நோயாளிக்கு மூன்று நாட்களில் எப்படி குணமாகும் என்கிற சந்தேகம் வருகிறது.(11/n)
மருந்தகத்தில் கூடுதலாக 2 நாட்களுக்கு சேர்த்து மருந்தை வாங்கி கொண்டு போகிறார். அளவுக்கு அதிகமாக ஆண்டிபயாட்டிகுகளை உட்கொண்டால் பாக்டீரீயாக்கள் அவைகளை எதிர்க்க வழிகளை மேற்க்கொள்ளும். (12/n)
Case: 3 Unwanted use of Antibiotics
ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் (வைரஸ் தொற்று) அவதிப்படுகிறார், நேராக மருந்தகம் செல்கிறார். இரண்டு அமாக்ஸிசிலின் மாத்திரை வாங்கி உட்கொள்ளுகிறார். அந்த மருந்து தேவையா தேவை இல்லையா என்பதை பற்றி அவர் சிந்திக்கவில்லை. (13/n)
C1, C2 நோயாளிகள் மருத்துவ அறிவுரையை புறந்தள்ளினார்கள் ஆனால் C3 நோயாளியோ மருத்துவரையே புறந்தள்ளி விட்டார். All these 3 more are less contribute to the development of resistant in bacteria . Underuse is more dangerous than overuse but unwanted use is even more dangerous. (14/n)
பொதுமக்களின் அலட்சியம் மட்டுமே resistant bacteria உருவாக காரணமா என்று பாய்ந்து வரவேண்டாம். சில மருத்துவர்களும் சமயங்களில் Antibiotics ஐ சரிவர பரிந்துரை செய்வதில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். But, when it comes to numbers, general public contribute more (15/n)
Abuse ( Unwanted Use > Under Use > Over Use) of Antibiotics is what lead to the raise of Antibiotic Resistant Organisms. This increased tendency of resistance will be very hard to handle as we will soon run out of options.(16/n)
கோடிக்கணக்கான பணத்தையும், காலத்தையும் செலவு செய்து கண்டுபிடிக்கும் மருந்துகளை, எந்தவித செலவும் செய்யாமல், தங்கள் வாழ்விடத்துலே இருந்து கொண்டு எதிர்க்கும் திறனை வளர்த்துக்கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் பாக்டீரீயாக்கள் சமார்த்தியசாலிகளா இல்லை நாமா? (17/n)
We can only get update for our PC, Mac and Smart Phones. நம்மால் தான் இந்த உலகமே இயங்குகிறது என்கிற உச்சபட்சமான ஆணவமே மனிதனுக்கு எதிரி என்பதை நாம் அவசியம் உணரந்தாக வேண்டும். இல்லையென்றால், கொரனாவை விட கொடுமையான நோய்த்தொற்றிக்கு பலியாக நேரிடும். (18/n)
Better late than never, நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
1. மருத்துவரின் ஆலோசணைப்படி Antibiotic மருந்துகளை உட்கொள்ளுங்கள். Doctors are trained for that. They know better. 2. Self-medication செய்து கொள்வதை முற்றிலும் தவிருங்கள். (19/n)
3. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று; வாட்சாப் மற்றும் முகநூலில் தமிழனா இருந்தா ஷேர் பன்னு என்கிற tagல் வரும் மருத்துவக் குறிப்புகளை உடனே டெலிட் செய்யுங்கள்.
Let us all work together to make this earth a better place to live. (20/n)
இந்த பதிவில் எழுத்துப் பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து , மன்னிச்சு விடுங்க.
வேறு ஒரு உபயோகமான இழையுடன் மறுபடியும் சந்திக்கிறேன். நன்றி
அனைவருக்கும் வணக்கம்! Antibiotic Resistance என்கிற தலைப்பில் எழுதிய இரண்டு பாகங்களின் இழையை படித்து பகிர்ந்தமைக்கு நன்றி. முதல் இரண்டு இழைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகள் பற்றிய தகவல்களை பாரத்தோம். (1/n)
இந்த இழையில் பாக்டீரீயாக்கள் எப்படி பாக்டீரீயா எதிர்ப்பிகளை எதிர்க்கிற திறமையை (Resistance) உருவாக்கி கொண்டன/ கொண்டிருக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.
பாக்டீரீயாக்கள் இருகூற்றுப்பிளவு ( Binary Fission) முறையில் இனப்பெருக்கம் செய்பவை. (2/n)
ஒரு பாக்டீரியா இருகூற்றுப்பிளவு முறையில் இரண்டாக மாறுவதற்க்கு எடுத்துக்கொள்ளும் நேரம் Doubling Time (DT) எனப்படும். நம் உடலில் அங்கமாக இருக்கும் பல பாக்டீரீயாக்களுக்கு DT 20-60 நிமிடங்கள். ஆனால் சில பாக்டீரீயாக்களுக்கு DT 72 மணி நேரம் அல்லது அதற்க்கு மேலும் கூட ஆகும். (3/n)
முதல் இழையில் பாக்டீரீயாக்களை பற்றி எழுதியிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படிக்க இயலாமல் போயிருந்தால் அவசியம் படிக்கவும். இணைப்பு கீழே👇🏽 (1/n)
இந்த இழையில் நோய்த்தொற்றுகளின் வகைப்பாடு மற்றும் பாக்டீரீயா எதிர்ப்பிகளின் (Antibiotic) கண்டுபிடிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். முதலாவது வகைப்பாடு நோயுண்டாக்கும் கிருமிகளின் மூலத்தை (Source) அடிப்படையாக கொண்டது. (2/n)
1. Exogenous (exo-வெளி) Infections - இந்த வகையான நோய்த்தொற்றிக்கு காரணமான நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுனிகள்) தண்ணீர், காற்று, உணவு, பகிர்ந்து உடுத்தும் உடைகள் மூலமாக தொற்றும்.எ.கா, சளி, காசநோய், மூளைக்காய்ச்சல், மலேரியா (3/n)
Antibiotic Resistance- Thread - Part-1
கொரோனா வைரஸின் முதலாமாண்டு பிறந்தநாளை நாம் சிறப்பாய் கொண்டாடி முடித்திருக்கின்ற இந்த வேளையிலே, இதை விட மிகச்சவாலான நோய் தொற்றுக்களை வருங்காலங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை கூறவே இந்த பதிவு (1/n)
எளிய நடையில் எழுத முயற்ச்சித்திருக்கிறேன். சில இடங்களில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலமும்/தமிழும் கலந்து எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். படித்தவர்கள் தங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். (2/n)
நுண்ணுயிரிகளின் உலகம் வியப்பானது, விசித்திரமானது, ஆபத்து மிக நிறைந்தது. நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி ஆராய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் எளிய முறையில் வகைப்படுத்தயிருக்கிறேன். (3/n)
2017-11-04 அன்று என் சொந்த பணி நிமித்தமாக சீனாவிலிருந்து தமிழகத்திற்க்கு பயணித்தேன். மலின்டடோ ஏர்லைன்ஸ் விமானம் பயண வழி குவாங்சோ-கோலாலம்பூர்-திருச்சி. Check in முடித்து, காத்திருந்தேன். (1/n)
அப்போது தமிழகத்திலிருந்து சீனாவிற்க்கு Business Expo காண வந்த மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுக்கு அதுதான் முதல் சீன பயணம். சீனாவில் அவர்கள் செலவிட்ட நாட்களை பற்றி நிறைய பேசினார்கள். திருப்த்திகரமான பயணம் என்று சொன்னார்கள்.(2/n)
அதில் ஒருவர், மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. வே. ஈஸ்வரன் அவர்கள். கோயம்புத்தூரை சேர்ந்தவர். விமானம் கிளம்பி அதன் Cruising Altitude ஐ அடைந்ததும், எனக்கு அடுத்த இருக்கையிலே வந்து அமர்ந்தார். நிறைய விஷயங்கள் பேசினோம். அவற்றில் ஒன்று...(3/n)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் எங்கள் பல்கலையில் 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பயில்கிறார்கள். அதில் 70% சதவிகிதம் பேர் குஜராத்திகள். சேர்ந்த புதிதில் எல்லா மாணவர்களையும் போல பயபக்தியுடன் (1/n)
நடந்துகொண்டனர். நாட்கள் செல்ல செல்ல அவர்களின் நடவடிக்கைகள் வேறு மாதிரி செல்ல ஆரம்பித்தது. பொதுவா எல்லா மாணவர்களிடமும் தெரிவதுதான் ஆனாலும் இவர்களின் ஆணவ போக்கை காண முடிந்தது. என்னை பொறுத்தளவில் வகுப்பு அறையில் யார் தொந்தரவு செய்தாலும் வெளியே அனுப்பிவிடுவேன்(2/n)
எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி. ஆதலால் பொதுவாக என்னுடைய வகுப்பில் எல்லோரும் சற்று கவனமாகவே இருப்பார்கள். ஆனால் சில குறிப்பிட்ட வகுப்புகளில் இந்த மாணவர்களின் சேட்டைகள் அளவுக்கதிகமாக இருந்த வந்தது. (3/n)