Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
கலிபோர்னியா, central valley பகுதியில் Subsidence இன்னும் தொடர்கிறது ஆனால் Subsidence வீதம் (rate) குறைந்துள்ளது.1988-2013 வரை 25 ஆண்டுகளில் Subsidence சுமார் 5 அடிகளாக உள்ளது. Subsidence வீதம் (rate) குறைய Joseph F. Poland யின் ஆராய்ச்சியும் ஒருவகையில் காரணம் & அதைபற்றிய பதிவு.
கலிபோர்னியா, central valley பகுதியில் subsidence ஏற்பட காரணம் விவசாயம். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயம் நடைபெறுவதால் subsidence ஏற்படுகிறது. Subsidence யை புரிந்து கொள்ள Terzaghi's Principle நமக்கு உதவும்.
நிலத்தடி நீர் எவ்வாறு நிலத்தடியில் உள்ள பாறைகளி சேமிக்கப்படுகிறது என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளவும்
Aquifer: மணலில் நீர் சேமிக்கப்படுகிறது. நீரோட்டம் இருக்கும் (Permeable) கிணறுகள், Borewell அமைத்து நீரை எடுக்கலாம்.
Aquitard: களிமண் (Clay) நீரை உறிஞ்சும். நீரோட்டத்தை தடுக்கும்(impermeable). களிமண்ணில் நீரை எடுக்கமுடியாது.
Aquitard: களிமண் நீரை உறிஞ்சும் போது அதன் கன அளவு கூடும் & நீரை இழக்கும் போது கன அளவு குறையும். Aquitard இந்த பண்பு நிலம் உள்வாங்க subsidence க்கு காரணம்.
Subsidence யை புரிந்து கொள்ள, Aquifer & Aquitard யின் மீது செயல்படும் stress பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
Normal stress, Aquifer மீது உள்ள மணல், & களிமண், கட்டடங்கள் எடையால் (Overburden load) ஏற்படுகிறது Aquifer & Aquitard யில் இருக்கும் நிலத்தடி நீர் அழுத்தம் Pore pressure.
Terzaghi's Principle
Effective stress (sigma ev) = Normal stress (sigma v) – Pore pressure (Pp)
Aquifer யில் உள்ள நீரை, Bore well/ கிணறுகள் மூலம் எடுக்கும் போது pore pressure குறையும்; Effective stress (அழுத்தம்) கூடும்.
நிலத்தடி நீரை எடுப்பதால், Aquifer & Aquitard மீது அழுத்தம் (Effective stress) கூடுவதால், மணல் & களிமண் அழுத்தப்பட்டு நெருக்கமாகி (compaction & compression) கன அளவு குறையும். Aquifer & Aquitard யின் அளவு எவ்வளவு குறைகிறதோ, கிட்டத்தட்ட அதே அளவு subsidence ஏற்படும்.
Layman மொழியில், நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுத்தால், நிலம் உள்வாங்கும் (subsidence).
Maxwell model, Voigt model & Power law மூலம் Aquifer & Aquitard deformation யை இன்னும் விரிவாக விவரிக்கலாம்.
Pore pressure கூடும் போது நிலநடுக்கம் தூண்டப்படுகிறது.
Pore pressure குறையும் போது subsidence ஏற்படுகிறது.
Joseph F. Poland, 1935-1940 வரை Stanford University யில் முழு நேர PhD; thesis submit பண்ணாமல் USGS யில் பணியில் சேர்ந்து விட்டார். Subsidence தொடர்பான ஆராய்ச்சியில் அவரின் பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, அவருக்கு 1981 யில் Stanford University, PhD வழங்கியது.
நம்ம ஊரில் ஏன் subsidence இல்லை?
நாம் நிலத்தடி நீரை உறிஞ்சும் போது, ஏற்படும் வெற்றிடத்தை கடல் நிர் நிரப்பிவிடுகிறது (Sea water intrusion), pore pressure குறைவதில்லை எனவே Subsidence ஏற்படுவதில்லை மாறாக நிலத்தடி நீர் உவர் நீராகிறது
தமிழகத்தின் உள்மாவட்டங்களில், பாறையில் உள்ள விரிசல்களில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. Rock strength அதிகமாக இருப்பதால் subsidence ஏற்படுவதில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது. 1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28% 2. Compensation cess up to 22%
Reservoir induced earthquake: அணைகள் கட்டுவதால் தூண்டப்படும் நிலநடுக்கம்
நிலநடுக்கம் ஏற்படாத/ 100 வருடங்களுக்கு ஒரு முறை ரிக்டர் அளவில் 3 & அதற்கு குறைவான அளவு நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் (stable area) அணைகள் கட்டுவதால் எவ்வாறு நிலநடுக்கம் எற்படுகிறது பற்றிய பதிவு
Induced earthquake பூமியின் tectonic stress எந்த பங்கும் வகிப்பதில்லை. மனிதனின் செயல்பாட்டால் (Dam) நிலநடுக்கம் ஏற்படுகிறது. அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதை பற்றி இணையத்தில் மாடல்/ கார்டூன்/ அனிமேஷன்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள தவறுகளை அறிவியல் விதிகள் கொண்டு ஆராய்வோம்.
சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள், அறைகுறை சிவில், Geotechnical engineers யின் favorite model, அணையின் எடை பூமியை அழுத்தி, அதனால் பூமியின் அடியில் உள்ள பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த concept எப்படி அறிவியல் விதிகளுக்கு முரணாக உள்ளது என்பதை பார்போம்.
இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என அறிவுறுத்தியது
தண்ணீர் தீண்டாமை:
சென்னையில், 80களின் ஆரம்பத்தில் சரியான தண்ணீர் பஞ்சம். திருவல்லிக்கேணியில், வெங்கட்ரங்கம் தெருக்கு கிழக்கில் சேரி, மாட்டாங் குப்பம் & அயோத்தி குப்பம். வெங்கட்ரங்கம் தெருக்கு மேற்கில் TP கோயில் தெரு, பார்த்தசாரதி குளம் & கோவில், பெரிய தெரு – பார்ப்பனர்கள் ஏரியா
பெரிய தெருக்கு மேற்கில் பாய்ங்க ஏரியா.
திகேணியில் pumping station ஐஸ்அவுசில் உள்ளது. அங்கிருந்து தண்ணீர் பைப் லைன், TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு வழியாக கோஷாஸ்பத்திரி (கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை)க்கு போகும். இது மருத்துவமனை தண்ணிர் லைன் என்பதால் எப்போது தண்ணீர் வரும்.
தண்ணீ பஞ்சம் காலத்தில் இந்த இரண்டு தெருக்கள் (TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு) தவிர்த்து வேறு எங்கும் குடிநீர் வராது. அந்த காலத்தில் RO & கேன் நீர் கிடையாது. இந்த தெருவில் இருப்பவர்கள் ஜாதி/ வர்ணம் பார்த்து தான் தங்கள் வீட்டின் அடி பம்பில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள்.
Pre-Owned Car
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
Used car யில் மாருதி சுசூகி, ஹோண்டா, டோயாடா கார்கள் வாங்கவும். Ford, ஸ்கோடா, VW கார்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் பராமரிப்பது சிரமம். Used காரை தெரிந்தவர்களிடம் வாங்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கார்கள் நல்ல நிலையில் இருக்கும்.
Used car dealers, இணையம், Authorised car dealers (True Value) etc., வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் எப்படி கார் வாங்குவது என்பதை பார்ப்போம்.