இவங்களுக்கு தெளிவா பதில் சொல்லுவேன் பட் அது அவங்களுக்கு புரியனுமே. சரி புரிஞ்சுக்குற அளவு யோசிக்கும் சிலருக்கு இவங்க பாணில பதில் சொல்றேன். முதல்ல இது எஜூகேஷன் செக்கரட்ரி கூட்ற கூட்டம்னா நீங்க தாராளமா செக்கரட்ரிங்கள கூப்பிட்டுக்கோங்க. அது ஒரு மினிஸ்டர் கூட்டும் கூட்டம்
There is a lot of difference between legislative body and executive body.அப்படி பார்த்தா இந்த மீட்டிங் மினிஸ்ட்டர் வைச்சு தான் நடக்கனும். அடுத்து நவோதயா ஸ்கூல் திறக்க எதிரி லெவல்ல பேசுறீங்க பாருங்க. எவனாவது கெட்டி சட்னி அளவு மூளை இருக்கவன பக்கத்துல வச்சுக்கோங்க.
இந்தியா முழுக்க இருக்க மொத்த நவோதையா ஸ்கூல் 636, பட் தமிழ்நாட்டுல இருக்க கவர்ன்மென்ட் அன்டு எய்டட் ஸ்கூல்ஸ் 6108.கிட்டத்தட்ட நீங்க சொல்ற மாதிரி பத்து மடங்கு. நவோதயா ஸ்கூல் இங்க வந்தா மாவட்டத்துக்கு ஒரு ஸ்கூல் பட் இப்பவே மாவட்டத்துக்கு குறைஞ்சது 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கு
அப்பறம் முக்கியமா நவோதயா ஸ்கூல் ல அட்மிஷனுக்கு நுழைவுத்தேர்வு, இங்க ஒரு தேர்வும் இல்லை. அப்பறம் பீஸ் 600 ரூபாய் நவோதயால. எங்க கவர்ன்மென்ட் ஸ்கூல்ல பீஸ் இல்லீங்க. உங்களுக்கு மாணவர் நலன் வேனுமா ஒரு தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போங்க, கூடவே எதாவது ஒரு மாநிலத்தின்
நவோதயா பள்ளிக்கும் போங்க கம்பேரிசன் ஸ்டடி பன்னி ரிப்போர்ட் தாங்க. என்கிட்ட ரிப்போர்ட் இருக்கு. அதுக்கப்பறம் குவாலிட்டினு வருவீங்க . சத்தியமா சொல்றேன் ஊர்ல இருக்க எந்த நவோதயா ஸ்கூல் விட இங்க இருக்கிற ஸ்கூல் குவாலிட்டி ரொம்பவே அதிகம். எக்ஸாம்பில் ப்ரீமியர் இன்ஸ்டிடியூட்
போங்க எவ்வளவு நவோதயா பசங்க இருக்காங்கன்னு செக் பன்னுங்க. பெரிய முட்டை. பட் இங்க அண்ணா பல்கலைக்கழகத்துல கிட்டத்தட்ட 6% மாணவர்கள் அரசுப்பள்ளி மாணவர்கள். இப்ப சொல்லுங்க எது குவாலிட்டி. எல்லாத்துலயும் மேல இருக்க நாங்க எதுவுமே இல்லாத அந்த காலி டப்பாவ ஏன் இங்க விடனும்.
இன்னும் ஒரே ஒரு ரிக்வஸ்ட் தயவு செஞ்சு போதைல படிங்க இந்த பதிவ. தெளிவா இருக்கப்ப படிச்சா ஒரு காயத்ரியும் புரியாது. இதுல எதுனா தப்பு இருந்தா தாராளமா சொல்லுங்க நான் கேட்டுக்குறேன்.
பிகு: விஸ்கியில் தண்ணீர் அதிகம் கலந்து குடிங்க உடம்புக்கு நல்லது. #tnagainstnep
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏதோ ஒரு பக்கம் ஆண்ட்டி பஞ்சாயத்து ஓடுச்சு. ரொம்ப சிம்பிளா சில சம்பவங்கள். நமக்கு சின்ன வயசுல ஒரு சிலர் ரொம்ப ஆழமா பதிஞ்சுருப்பாங்க. அதுல ரொம்ப முக்கியமான வங்க அத்தை அல்லது அத்தை முறை உள்ளவங்க. சில சமயங்களில் அத்தை மகள்கள் கூட நம்மை விட வயசு அதிகமா இருக்கும் போது
அத்தாச்சினு கூப்பிடுவோம் இவங்களும் நமக்கு ரொம்ப மனசுக்கு இணக்கமா இருப்பாங்க. என்ன காரணம் நாம் முதலில் அம்மா சகோதரி தவிர்த்து நெருங்கி பழகும் பெண்கள் இவர்கள் தான். கோடை விடுமுறை நாட்களில் எங்கப்பா கேப்பார் அத்தை வீட்டுக்கு போறீயா சித்தி வீட்டுக்கு போறீயானு. யோசிக்காம
என் பதில் அத்தை வீடுதான். காரணம் ரொம்ப சிம்பிள் என் அத்தைய எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப உலவும் ஆன்ட்டி எனும் பதம் 2000 பிற்பகுதியில் வந்தது.அதாவது அத்தை இல்லை அம்மா வயசுக்கு இணையான பக்கத்து வீட்டு பெண்களை கூப்பிட பயன்படுத்திய ஒரு டேர்ம். அத்தை சித்தி பெரியம்மா
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்த இழை. 1. டாடா கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் +2 வரை படித்து உயர்கல்வியை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை . ஆண்டிற்கு 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த
உதவித்தொகை பெற விரும்புபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: admissions.cornell.edu/apply/internat… 2. காமன் வெல்த் கல்வி உதவித்தொகை:
காமன் வெல்த் நிறுவனத்தால் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. ஆங்கிலத்தை ஒருபாடமாக படித்து , அறிவியல் அல்லது மானுடவியல்
பொறியியல் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 65% மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 31 லட்சம் வரை உதவித்தொகை + விமான பயணச்சீட்டும் வழங்கப்படும்.
தொடர்புக்கு: cscuk.fcdo.gov.uk/scholarships/c…
தமிழ்நாட்டில் கலை ,அறிவியல், பல்தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்த ஒரு த்ரெட் முடிந்த அளவு பிறரிடம் சேர்க்கவும். 1. இராஜஸ்தான் அசோசியன் உதவித்தொகை.
சென்னை மாநகரில் கலை அறிவியல் நர்சிங் பார்மசி படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை.
உங்களின் கல்விக்கட்டண இரசீதை வைத்து விண்ணப்பிக்கலாம். வலைதள முகவரி. ryabookbank.com 2. ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் அறக்கட்டளை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன் பெறலாம். தொடர்புக்கு 26206261. 3. யூனிட்டி அறக்கட்டளை உதவித்தொகை. பொருளாதாரத்தில் பின்தங்கிய
இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை. இணையம் unitytrust.in 4. கௌரவ் பவுன்டேஷன் கல்வி உதவித்தொகை:
நிறைய மதிப்பெண் பெற்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை
தொடர்புக்கு
contact@gauravfoundation.org
Website : gauravfoundation.org
வள்ளுவர் வாசுகி ஒரு கற்பனை கதை. இப்ப வரை தநா மாநில பாடத்திட்டத்தில் பக்தி இலக்கியம்னு ஒரு பார்ட் வரும் அதுல இந்து மத பாடல்களுடன், திரு கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும், உமறுப்புலவரின் சீராப்புரணமும் கூடவே இருக்கும். வேறெந்த பாடத்திட்டத்திலும் இப்படி ஒரு
யுனிக்னெஸ் பார்க்க முடியாது. ஆனா இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்து மத கற்பனை கதைகள் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டம். இத்தோடு மட்டும் இல்லை மெடிவல் இந்தியா வரலாறு முடிந்த வரை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் பட் இங்க அப்படி இல்லை. இத்தனைக்கும் ஒரு சமச்சீர்
கரிக்குலம் இங்கதான். சைன்ஸ் எடுத்தாலும் அப்படித்தான் கிட்டத்தட்ட 2004 க்கு பிறகு மேல்நிலை பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் சிபிஎஸ்இ செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு மூன்று முறை ரிவைஸ் பண்ணிட்டாங்க. இந்த கரிக்குலம் மாத்தாம இருக்கதுக்கு பின்னாடி பெரிய பெரிய நுழைவுத்தேர்வு
ஸ்ரீவித்யா - தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. பல இரவுகள் யோசித்திருக்கிறேன் இப்படி ஒரு ஹீரோயின் மெட்டீரியல் எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார் என்று. ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் நம் மனது நேரடியாக சில்கை நினைக்கும்.ஆனால் அதைவிட
பவர்ஃபுல் கண்கள் வித்யாவினுடையது. சிறந்த கர்நாடக பாடகி சிறந்த நடிகை இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும். ஏன் இப்ப ஸ்ரீவித்யா எனும் கேள்விக்கு நேரடியான பதில் முரசு டிவியில் கடந்தவாரம் ஒளிபரப்பான நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட
ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது. அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு அரக்கியை ஏன் கதாநாயகியாக கொண்டாடவில்லை நாம். அதற்கடுத்து இன்னும்