தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டில் எழுப்பிடுவோம்! தமிழீழம் காக்க கட்சி, சாதி, மதம் கடந்து ஒன்றுபடுவோம்! - மே பதினேழு இயக்கம்
தமிழர்களின் தாகமான தமிழீழ தாயகத்தை அடையும் நோக்கில் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை, இந்தியா, அமெரிக்கா...
1/n
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள். இனப்படுகொலை நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும் தமிழர்களுக்கான நீதி கானல்நீராகவே உள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழர்களுக்கான நீதி என கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், இனப்படுகொலையாளர்களை காப்பாற்றும் முயற்சியாகவே நீடிக்கிறது.
2/n
தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் இயங்கிய தமிழீழ அரசாங்கம், மிக சிறப்பான, முற்போக்கான ஜனநாயக ஆட்சியை வழங்கியது. பிராந்திய (புவிசார்) அரசியல் நலனுக்காக தெற்காசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏகாதிபத்தியத்திய நாடுகள் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசிற்கு எதிராக இருந்தன.
3/n
தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாதமும், ஆரிய இனப்பகையும் இதன் பின்னணியில் இயங்கின என்றால் மிகையாகாது. திரிகோணமலை போன்ற ராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை தனது ஆளுகைக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குல நாடுகளின் ஏகாதிபத்தியமும்...
4/n
தெற்காசிய பிராந்திய அரசியலில் கோலோச்ச விரும்புகின்ற சீனாவின் விரிவாதிக்கமும் தமிழர்களுக்கு எதிராக இணைந்து 2009இல் மாபெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்தன.
தமிழீழ மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக இன்றளவும் போராடி வருகிறார்கள். அம்மக்களோடு இணைந்து அந்த ஜனநாயக கோரிக்கையை...
5/n
வென்றெடுப்பது நமது கடமையாகும். இதற்கான போராட்டம் தலைமுறைகள் கடந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. பல தலைமுறைகளின் கனவை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உறுதியேற்போம்.
2009-க்கு பிறகு ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தமிழர் கடலான...
6/n
சென்னை மெரினா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வந்தது. 2017-இல் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் நினைவேந்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நினைவேந்தல் நடத்தியதற்காக...
7/n
17 தோழர்களை கைது செய்ததோடு, தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
2018, 2019 ஆண்டுகளில் நினைவேந்தல் நடத்துவதற்கான ஜனநாயக போராட்டத்தினை...
8/n
மே பதினேழு இயக்கம் முன்னெடுத்தது. இந்த கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக 2018 போராட்டத்தில் பங்கெடுத்து முன்னணி பாத்திரம் வகித்ததற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஐயா வைகோ மற்றும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்...
9/n
தோழர் திருமுருகன் காந்தி மீது வழக்குகள் ஏவப்பட்டன. 2019-இல் நினைவேந்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சேப்பாக்கத்தில் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. சென்ற ஆண்டு 2020 கொரானா நோய் பெருந்தொற்று காலத்தில்...
10/n
பொதுவெளியில் கூட முடியாத சூழலில், தமிழ்நாடு முழுவதும் குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏந்தி, விளக்கேற்றி நினைவேந்தல் நடந்தேறியது.
அந்த வகையில், இந்தாண்டு கொரானா நோய்த்தொற்று மிகத்தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை போல் வீடுகளில் இருந்தபடியே, இன்று...
11/n
மே 18 செவ்வாய் மாலை 6:30 மணியளவில், தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் வீட்டிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, விளக்கேற்றி, பதாகைகள் ஏந்தி தமிழீழ இனப்படுகொலைக்கான 12ம் ஆண்டு நினைவேந்தலை நடத்திடுவோம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.
12/n
மேலும், புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு, தமிழினப்படுகொலைக்கு நினைவெந்தும் விதமாக உலகத் தமிழர்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டுமென கோரிக்கை வைக்கின்றோம். மேலும், இனப்படுகொலையில் பலியானவர்களுக்கான...
13/n
நினைவேந்தலை இந்த கடற்கரையில் ஆண்டுதோறும் அரசே முன்னின்று நடத்திட வேண்டும். இந்த கோரிக்கையை 2011 முதல் நீண்ட காலமாக மே பதினேழு இயக்கம் முன்வைத்து வருகிறது என்பதை இச்சமயத்தில் நினைவு கூற விரும்புகின்றோம்.
தமிழினத்தின் வரலாற்றில் நீக்க இயலா கறையுடன் உறைந்து போயிருக்கின்ற...
14/n
இந்த துயர நிகழ்வை கட்சி, சாதி, மதம், எல்லை கடந்து தமிழினம் நினைவு கூற வேண்டும். இதே ஒற்றுமையுடன் தமிழினப்படுகொலைக்கான சுதந்திரமான சர்வதேச விசாரணையும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையை நாம் நிறைவேற்றுவோம்.
15/n
2013ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங்களை நினைவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுடைய ஏகோபித்த கோரிக்கையை இந்திய அளவில் நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கையை முன்வைக்கிறது.
16/n
புதிதாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்பவும், நினைவேந்தல் நடத்துவதற்கும் உரிய உரிமையை நிலைநாட்டுவதோடு...
17/n
இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது.
அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக...
2/11
முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.
அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட...
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...
1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...
2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!
அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்
அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...
1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...
2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...
3/8
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...
1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...
2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்
கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...
1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.
1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...
3/9
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்
தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...
1/5
...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...
2/5
...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.
இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5