மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுடன் பேசப்போகிறோம் என்றதுமே ஒருவித பதட்டம் எனக்கு வந்துவிட்டது. காரணம் அவரைப் பார்த்து பேச வேண்டும் என்று சில ஆண்டுகளாவே நினைத்து வருகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில், எனது தந்தையார் Govi Rajamahendiran (Red Cross)
கோவி.ராஜமகேந்திரன் அவர்கள் ஆசிரியருடன் இணைந்து பல பணிகளை செய்தவர்.2009 ல் அப்பா,இறந்த போது, தஞ்சையில் ஆசிரியர் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, வாயில் வரை வந்தவர், அவரின் பிள்ளைகள் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறோம்? என கேட்டுவிட்டு சென்றார். அது என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்பா இறந்துவிட்டார்.அடுத்து என்ன என்பதை பார்ப்பது தானே பகுத்தறிவு?அதை சொல்லாமல் விதைத்துவிட்டு சென்றார் ஆசிரியர்.நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கிறோம் என்பதை ஆசிரியரிடம் ஒருநாள் நேரில் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இன்றைய நிகழ்வு அந்த வாய்ப்பை வழங்கியது.
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அப்பாவின் பெயரை சொல்லி,இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று சொன்ன போது, ஆசிரியர் கைத்தட்டி வரவேற்றார். அத்தனை மகிழ்ச்சி அவருக்கும்,அதைப்பார்த்த எனக்கும்!
நான் பேசுகையில், எங்கள் குடும்பத்தில் திராவிட இயக்க தொடர்பு ஏதுமில்லை என்று குறிப்பிட்டேன்.
எனக்கு தனிசெய்தியில், என் அப்பாவின் உறவினர் ஒரத்தநாடு ஆசிரியர் மதிவாணன் ஒரு பெரியார் பெருந்தொண்டர் என்பதையும் அவரோடு இணைந்து பணியாற்றியதை குறித்தும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயகுமார் அவர்கள் அனுப்பியிருந்தார்கள்.
மதிவாணன் வேறுயாருமில்லை. என் அப்பாவின் சித்தப்பா.
என் தாத்தாவின் தம்பி. எனது சிறிய தாத்தா. ஒரு பெரியாரியவாதியாக கடைசிவரை இருந்தவர். பெரியாரியராக இருந்த என் தாத்தாவை நான் மறந்தாலும், திராவிட இயக்கம் மறக்கவில்லை என்பதையும் உணர்ந்தேன்!
திராவிட இயக்கம் என்பதே ஓர் பெரிய குடும்பம் தான் என்பதை இன்றைய நிகழ்வு உணர்த்தியது!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆசிரியர் என்பது அவர்களுக்கு பிடிக்காத சொல். குரு என்பார்கள்.
ஆசிரியர் நாளை குரு உட்சவ் என பெயர் மாற்றுவார்கள்.
++
கட்டவிரலை காணிக்கையாய் கேட்ட துரோனாசாரியா எனும் சனாதன வெறியன் பெயரில் தான் விருதுகள் வழங்குவார்கள்.
பெண்ணுக்கு எதற்கு கல்வி என்று கேட்டவர்கள் அவர்கள். போராடித்தான் இங்கே பெண்கள் படிக்கவே ஆரம்பித்தார்கள்.
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், ++
வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கிறது என்பதை உணர்ந்தவுடன், வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என வாய்கூசாமல் பேசியவர்கள்.
அனைவரும் சமம் என்று சொன்னாலே அவர்களுக்கு பிடிக்காது. அனைவருக்கும் சமச்சீர் கல்வி என்று சொன்னால்
சீமானின் தந்தை இறப்பிற்கு ஆறுதல் சொல்ல தலைவர் @mkstalin அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை கேட்டேன்.
அவரின் மீதும், தலைவர் கலைஞர் மீதும், பேரறிஞர் அண்ணா மீதும் வன்மமாக பேசியவர் சீமான். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், தலைவர் மு.க. ஸ்டாலின் என்றுமே ஒரு சிறந்த அரசியல் பண்பாளராக, சிறந்த மனிதராக தான் இருந்திருக்கிறார்.
என் திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி “அரசியல் பண்பாளர் மு.க. ஸ்டாலின்” எனும் தலைப்பிலான கட்டுரை தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் அவரிடம் வெளியான அரசியல் நாகரீகம், அரசியல் பண்பு, மனிதநேயம், நிதானம் போன்ற பல பண்பு நலன்களை கொண்ட சம்பவங்கள் தொகுக்கப்பட்ட கட்டுரை அது.
அந்த கட்டுரை திராவிட வாசிப்பு - The Dravidian Herald மின்னிதழிலும் வெளியானது.
இத்தனை ஆற்றல் வாய்ந்த தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு இத்தனை நாள் முதல்வராக வாய்ப்பு தராமல் போய்விட்டோமே என்கிற குரல்களை கேட்க முடிகிறது.தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையே 2018 க்கு பிறகு அறிந்தவர்கள் தான் அதிகம். இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் குறித்தும் பலருக்கு தெரியாது.
நானும் அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்த பின் தான் எத்தனை பெரிய தலைவர் அவர் என்பதை உணர்ந்தேன். அவரது ஆற்றல், பண்புநலன், உழைப்பு, கனவு ஆகிய அனைத்துமே மிகப்பெரியவை. அதை நாம் நிச்சயம் உணர வேண்டும். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம் தமிழ்நாட்டுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை
அனைவருக்கும் உணர்த்த வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது, அவரைப் பற்றி வாசிப்பதும், எழுதுவதும் தான்...
முதல்வர் @mkstalin அவர்கள் குறித்து வாசிக்க வேண்டிய முக்கிய புத்தகங்கள் என எதை சொல்வீர்கள்?
நான் அவரைக் குறித்து எனது “திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின்” புத்தகத்திற்காக
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய கோவை மகேந்திரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன்.
1) தோல்விக்கு நீங்கள் அனைவரும் தான் காரணம். நீங்களா ராஜினாமா பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ண வைக்கவா என்று கமலஹாசன் கேட்டதாக கூறுகிறார்.
2) இது என் கட்சி என்று கமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு அவர் தான் நிரந்தர தலைவர் என்று தீர்மானம் போட்டதை நினைவு கூறுகிறார்.
3) தீர்மானங்கள் எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு கூட தெரியாது. மீட்டிங் நடப்பதற்கு முன்பு, இந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க, அந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க என பிரித்து கொடுத்து படிக்க வைத்துவிடுவார்கள் என்கிறார்.
Kubler - Ross Theory. குருநாதர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உளவியல் பாடம் இது. பல விசயங்களுக்கு இதை பொருத்திப்பார்க்கலாம். இது தியரியாக பார்த்தால் “துக்கத்தின் ஐந்து நிலைகள் (5 Stages of grief)” என்று சொல்வார்கள்.
ஒரு விரும்பத்தகாத அல்லது ஒரு துக்க நிகழ்வு நிகழ்கிறது.