தமிழகத்தில் 2.06 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன.. சராசரியாக குடும்பத்துக்கு 3 பேர் என்றாலும் 6.18 கோடி மக்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் வருகிறார்கள்
தமிழக அரசு நேற்று நீதிமன்றத்தில் சொன்ன படி 1.58 கோடி மக்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளனர். (1/4)
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்த மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதற்கான சிகிச்சை கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகளில் மூன்று மடங்கு உயர்த்தி அரசு ஆணையும் வெளியானது
காப்பீடு திட்டத்தில் இல்லாத மக்களின் நிலை? (2/4)
இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது
சிகிச்சை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் காப்பீடு இல்லாத மக்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாவது தவிர்க்க.. தகுதி உள்ள அனைவரையும் காப்பீடு திட்டத்தில் இணைக்க அரசு முன்வர வேண்டும் (3/4)
குடும்ப அட்டை உள்ள அனைவரையும் ஸ்மார்ட் கார்டு/காப்பீட்டு திட்டத்தில் இணைத்தால் பெரும்பாலான மக்கள் பயன் பெறுவார்கள்
கொரோனா தாக்குதல் வராமல் இருப்பது நல்லது. வந்தால் அதற்கான சிகிச்சை செலவை சமாளிக்கும் திறன் பல நடுத்தர/ஏழை மக்களிடம் இல்லை
அரசு அவர்களுக்காக ஆவன செய்ய வேண்டும் (4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சத்தமே இல்லாம தமிழகத்தில் ஒரு #VaccinationDrive பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கு
பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள் போடப்படுது
CoWin பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் சாதனை செய்தி அறிவார்கள்.
தொழிற்சாலைகளில் தனி தனியாக camp போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் #vaccination டிரைவ் நடக்குது
இது போக பள்ளிகள் கல்லூரிகளில் camp இருக்கு
PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு
சாதனை செய்தி on the way 💪💪
வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு
ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி குறைவு என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது
மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது
தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்..
பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5)
பஸ் வசதி இருந்தும் பஸ் கட்டணம் கொடுக்க முடியாமல் பலரும் பல மைல் தூரம் மெயின் ரோட்டில் நடந்தே சென்று வருகிறார்கள்
தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெண்கள் அதிகம் இப்படி வேலைக்கு போய் வருகிறார்கள் (2/5)
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு மருத்துவத்துக்கு, வியாபாரத்துக்கு, தொழிலுக்கு என பலவற்றுக்கும் பஸ் பயணம் தான் எல்லோருக்கும்
மெட்டாலா மாதிரி ஒரு ஊரில் இருந்து எந்த ஒரு தேவைக்காகவும் ராசிபுரம் வர வேண்டும் என்றால் பஸ் கட்டணமே 50/- ஆகி விடும்
வட மாநிலங்களில் நிலவும் கொடுமையான நிலை இப்போது தமிழகத்தில் இல்லை. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு என்பது நமக்கு தெரியும்
ஆனால்
ஒரு நாளில் 14000 பேர் பாதிக்கையில் இந்த கட்டமைப்பு நிறைய அதிக நாள் ஆகாது (1/5)
சென்னையில் இப்போது படுக்கைக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பிற மாவட்டங்களில் படுக்கைகள் உள்ளன.
ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது
இருக்கும் கட்டமைப்பில் சமாளிக்க வேண்டும் எனில் தினசரி எண்ணிக்கை குறைய வேண்டும் (2/5)
தினசரி எண்ணிக்கை கூடாமல் இருப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.
அவசியமற்ற பயணங்கள் தவிர்ப்பது, பொருட்கள் வாங்க ஆன்லைன் முறை / ஒருவர் மட்டும் சென்று வாங்குவது, வேலைக்கு போய் வருவதை தவிர பிற சமயங்களில் வீட்டில் இருப்பது ஆகியவை நம்மையும் மாநிலத்தையும் மற்றவர்களையும் காக்கும் (3/5)