#Thread on #TwitterBan

கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)

அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்

1. குறை தீர்ப்பு குழு அமைத்தல் (1/8)
2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது

இதனுடன் இன்னொரு விதியாக

3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்

(2/8)
4. வெளியான பதிவுகளின் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அதற்கான பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களை தான் சேரும்

5. பயனர் தவறுக்கு நிறுவனங்களே பொறுப்பு

இந்த விதிகள் எல்லாம் மே 26 ஆம் தேதி அமலுக்கு வரும்

அரசின் இந்த விதிமுறை ஏற்காத நிறுவனங்கள் செயல்பட முடியாது

(3/8)
இது பேச்சுரிமை / கருத்து உரிமையை கட்டுப்படுத்தும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்

WhatsApp நிறுவனம் பயனர்களின் பதிவை கட்டுப்படுத்த முடியாது என அறிவித்து உள்ளது

Facebook நிறுவனம் குறை தீர்க்கும் குழு விதியை ஏற்பதாக சொல்லி உள்ளது.

Twitter முடிவு தெரியவில்லை
(4/8)
இந்நிலையில் மே 26 காலை முதல் சமூக வலை தளங்கள் இயங்காதோ என்கிற அச்சம் பயனர்களிடம் இப்போது உள்ளது

என்னை பொறுத்த வரை.. இயங்க தடை விதிக்கப்படாது என்றே நினைக்கிறேன்

மேலும் கால அவகாசம் கொடுக்க வாய்ப்பு உள்ளது

அல்லது பயனர்களை tracking செய்யும் அமைப்பை வைக்க சொல்லக் கூடும் (5/8)
பயனர்களை track செய்வது என்பது.. எல்லா பயனாளர்களையும் validate செய்வது.. (Aadhaar, PAN, License போன்றவை மூலம்)

இப்போதே Twitter தனது users verification செய்ய ஆவணங்களை கேட்கிறது. இதே போல அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வரலாம்.

தவறான பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க இது உதவும்

(6/8)
இதன் மூலம் fake ID, ananymous tweets ஆகியவை கட்டுப்படுத்தப்படும்

பயனாளர்கள் தவறான அல்லது சட்ட விரோத கருத்துக்கள் வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரை கண்டு பிடிக்கவும் இந்த ஆவணங்கள் & validation உதவும்

இப்படியான practical rules விதிக்க தான் வாய்ப்பு உள்ளது (7/8)
எது எப்படி ஆகினும் சமூக வலை தளங்களை இயங்காமல் செய்வது என்பது இயலாத காரியம்

சில கட்டுப்பாடுகளுடன் அவை தொடர்ந்து இயங்கும் என்றே நான் நம்புகிறேன்

அத்தகைய கட்டுப்பாடுகள் சமூக வலைதள பதிவுகளை சரியான வழியில் கொண்டு செல்லவும் உதவக்கூடும்.

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று (8/8)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Satheesh Kumar

Satheesh Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @saysatheesh

26 May
சத்தமே இல்லாம தமிழகத்தில் ஒரு #VaccinationDrive பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கு

பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள் போடப்படுது

CoWin பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் சாதனை செய்தி அறிவார்கள். ImageImage
தொழிற்சாலைகளில் தனி தனியாக camp போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் #vaccination டிரைவ் நடக்குது

இது போக பள்ளிகள் கல்லூரிகளில் camp இருக்கு

PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு

சாதனை செய்தி on the way 💪💪 Image
வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் அறிந்த தகவலின் படி கிராமங்கள் மலை கிராமங்கள் தொலை தூர பகுதி மக்களுக்கு கூட நடமாடும் வாகனம் மூலம் சென்று ஊசி போட்டு வருகிறது தமிழக அரசு

ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் ஊசி குறைவு என்றாலும் அத்தனையும் உபயோகிக்கிறது
Read 6 tweets
25 May
காப்பீடு சிகிச்சை:

தமிழகத்தில் 2.06 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன.. சராசரியாக குடும்பத்துக்கு 3 பேர் என்றாலும் 6.18 கோடி மக்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் வருகிறார்கள்

தமிழக அரசு நேற்று நீதிமன்றத்தில் சொன்ன படி 1.58 கோடி மக்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளனர். (1/4)
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்த மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என அரசு சமீபத்தில் அறிவித்தது.

அதற்கான சிகிச்சை கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகளில் மூன்று மடங்கு உயர்த்தி அரசு ஆணையும் வெளியானது

காப்பீடு திட்டத்தில் இல்லாத மக்களின் நிலை? (2/4)
இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது

சிகிச்சை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் காப்பீடு இல்லாத மக்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாவது தவிர்க்க.. தகுதி உள்ள அனைவரையும் காப்பீடு திட்டத்தில் இணைக்க அரசு முன்வர வேண்டும் (3/4)
Read 4 tweets
7 May
மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது

தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்..

பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5)
பஸ் வசதி இருந்தும் பஸ் கட்டணம் கொடுக்க முடியாமல் பலரும் பல மைல் தூரம் மெயின் ரோட்டில் நடந்தே சென்று வருகிறார்கள்

தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெண்கள் அதிகம் இப்படி வேலைக்கு போய் வருகிறார்கள் (2/5)
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு மருத்துவத்துக்கு, வியாபாரத்துக்கு, தொழிலுக்கு என பலவற்றுக்கும் பஸ் பயணம் தான் எல்லோருக்கும்

மெட்டாலா மாதிரி ஒரு ஊரில் இருந்து எந்த ஒரு தேவைக்காகவும் ராசிபுரம் வர வேண்டும் என்றால் பஸ் கட்டணமே 50/- ஆகி விடும்

இது எவ்வளவு பெரிய சுமை? (3/5)
Read 5 tweets
25 Apr
நண்பர்களே

வட மாநிலங்களில் நிலவும் கொடுமையான நிலை இப்போது தமிழகத்தில் இல்லை. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு என்பது நமக்கு தெரியும்

ஆனால்

ஒரு நாளில் 14000 பேர் பாதிக்கையில் இந்த கட்டமைப்பு நிறைய அதிக நாள் ஆகாது (1/5)
சென்னையில் இப்போது படுக்கைக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பிற மாவட்டங்களில் படுக்கைகள் உள்ளன.

ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது

இருக்கும் கட்டமைப்பில் சமாளிக்க வேண்டும் எனில் தினசரி எண்ணிக்கை குறைய வேண்டும் (2/5)
தினசரி எண்ணிக்கை கூடாமல் இருப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.

அவசியமற்ற பயணங்கள் தவிர்ப்பது, பொருட்கள் வாங்க ஆன்லைன் முறை / ஒருவர் மட்டும் சென்று வாங்குவது, வேலைக்கு போய் வருவதை தவிர பிற சமயங்களில் வீட்டில் இருப்பது ஆகியவை நம்மையும் மாநிலத்தையும் மற்றவர்களையும் காக்கும் (3/5)
Read 5 tweets
24 Apr
ஒரு மாச கேப்புக்கு பிறகு மீண்டும் வாக்கிங் போற சுகம் இருக்கே.. 😍😍
அந்தி மஞ்சள் மாலை

ஆளில்லாத சாலை

#WalkingClicks
கொக்கு பற பற..
Read 4 tweets
6 Apr
இன்று வாக்களித்த அனுபவம்

வாக்களிக்க போகும் நண்பர்களுக்காக

▪️பாகம் எண் & வரிசை எண் குறிச்சு வேச்சுக்கோங்க

▪️பாக எண் வாரியாக பூத் இருந்தது.. அங்கே போய் உங்க ஐடி காட்டி வாக்கு போடலாம்

▪️சானிடைசர் கைகளில் தெளிச்சாங்க

▪️எல்லோருக்கும் one use hand gloves தர்றாங்க (1/4)
▪️ இடைவெளி விட்டு வரிசையில் நிற்க மார்க்கிங் செய்து இருக்காங்க

▪️வாக்குச்சாவடி நீட்டா இருந்தது.. போதுமான முன்னெச்சரிக்கை எல்லாம் எடுத்து இருக்காங்க

▪️ஓட்டு போட்டு வந்ததும் அங்கேயே hand gloves கழற்றி dust bin ல போட்டுட்டு வாங்க

(2/4)
▪️மெஷினில் பச்சை லைட் எரிந்த பிறகு வாக்களிக்கும் பட்டனை அழுத்துங்க

▪️யாருக்கு ஓட்டு போட்டோம் என VVPT மெஷினில் பார்க்க முடியும். அதை confirm பண்ணிட்டு வெளியேறுங்க

▪️வாக்கு பதிவு ஊழியர்கள் வாலண்டயர்கள் எல்லோரும் தன்மையா பழகினாங்க. வேண்டிய உதவிகள் செய்வாங்க. தயங்காம கேளுங்க (3/4)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(