மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது
தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்..
பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5)
பஸ் வசதி இருந்தும் பஸ் கட்டணம் கொடுக்க முடியாமல் பலரும் பல மைல் தூரம் மெயின் ரோட்டில் நடந்தே சென்று வருகிறார்கள்
தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெண்கள் அதிகம் இப்படி வேலைக்கு போய் வருகிறார்கள் (2/5)
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு மருத்துவத்துக்கு, வியாபாரத்துக்கு, தொழிலுக்கு என பலவற்றுக்கும் பஸ் பயணம் தான் எல்லோருக்கும்
மெட்டாலா மாதிரி ஒரு ஊரில் இருந்து எந்த ஒரு தேவைக்காகவும் ராசிபுரம் வர வேண்டும் என்றால் பஸ் கட்டணமே 50/- ஆகி விடும்
இது எவ்வளவு பெரிய சுமை? (3/5)
நகரங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சாதாரண பேருந்துகள் தான்.
பெரும்பான்மையான பேருந்துகள் தமிழகத்தில் சாதாரண பேருந்துகள் தான்
மலை கிராமங்கள், கடற்பகுதி, எல்லைப் பகுதிகளை நகரத்தோடு இணைப்பவை அவை தான்
அது இலவசம் என்பது பெரிய விஷயம்
நகர டீலக்ஸ் பஸ்களை வைத்து பேசுவது தவறு (4/5)
கிராமப்புற பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், மேம்பாடு, மருத்துவம் ஆகியவற்றுக்கு இந்த இலவச பஸ் பயண திட்டம் எந்த அளவுக்கு உதவும் என்பதை புரிய.. தமிழகத்தை பற்றிய புரிதல் அவசியம்
ஒரு நகரவாசி பார்வையை விடுத்து ஒரு தமிழக பார்வையை வளர்த்து கொள்வது நமக்கு முக்கியம்
நன்றி
(5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வட மாநிலங்களில் நிலவும் கொடுமையான நிலை இப்போது தமிழகத்தில் இல்லை. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு என்பது நமக்கு தெரியும்
ஆனால்
ஒரு நாளில் 14000 பேர் பாதிக்கையில் இந்த கட்டமைப்பு நிறைய அதிக நாள் ஆகாது (1/5)
சென்னையில் இப்போது படுக்கைக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
பிற மாவட்டங்களில் படுக்கைகள் உள்ளன.
ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது
இருக்கும் கட்டமைப்பில் சமாளிக்க வேண்டும் எனில் தினசரி எண்ணிக்கை குறைய வேண்டும் (2/5)
தினசரி எண்ணிக்கை கூடாமல் இருப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.
அவசியமற்ற பயணங்கள் தவிர்ப்பது, பொருட்கள் வாங்க ஆன்லைன் முறை / ஒருவர் மட்டும் சென்று வாங்குவது, வேலைக்கு போய் வருவதை தவிர பிற சமயங்களில் வீட்டில் இருப்பது ஆகியவை நம்மையும் மாநிலத்தையும் மற்றவர்களையும் காக்கும் (3/5)
🔸பெரிய கோவில்களில் கிடைக்கும் உபரி வருவாயை மற்ற சிறு கோவில்களுக்கு பகிர்ந்து அளித்து எல்லா கோவில்களிலும் முறையாக பூஜைகள் நடைபெற அரசு உதவுகிறது
🔸 சிறு கோவில்களில் ஒரு கால பூஜை நடக்க அரசு மானியம் கொடுக்கிறது (1/7)
🔸 கோவில்களில் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே முழு அதிகாரம் செலுத்துவதை தடுத்து இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மக்களை கொண்டு அறங்காவலர் குழு அமைத்து சம அதிகாரம் வழங்கியது அரசு
🔸 அனைத்து தரப்பு மக்களும் ஆலயங்களில் வழிபாடு செய்ய உரிமை தந்தது அரசு (2/7)
🔸கோவில்களின் சொத்துக்களை தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுவதை தடுத்து அரசின் வருவாயாக கணக்கிட்டு முறையாக பாதுகாத்து வருவது அரசு
🔸புனரமைப்பு, குடமுழுக்கு போன்றவைகளை அரசு தனது நிதி நிலையில் இருந்து நடத்தி கொடுத்து பாரம்பரியத்தை காக்கிறது
உடனே அங்கே வரும் ஆம்புலன்ஸ் (108 சேவை) அங்கேயே அவரை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை செய்கிறது. ஹாஸ்பிடல் செல்லாமல்.. (1/6)
அந்த காட்சியில் அந்த ஆம்புலன்சில் ஒரு டாக்டர் & செவிலியர்கள் இருந்தாங்க.. ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தி அதனுள்ளே செந்திலுக்கு (மாயன்) சிகிச்சை கொடுத்து அங்கேயே டிஸ்சார்ஜ்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இது சீரியலுக்காக செய்தார்கள் என நினைத்தேன்..
(2/6)
எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ நண்பரிடம் இது பற்றி கேட்டேன்
அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது..
மருத்துவமனை செல்ல வேண்டி இருந்தால் தான் அது அங்கே செல்லும். சாதாரண சிகிச்சை எனில், அங்கேயே சிகிச்சை கொடுத்து விடுவார்களாம்.
அதற்கான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இருக்காங்களாம்..
(3/6)