இவர் இளவயதில் தற்கொலைக்கு முயன்று அதில் உயிர்பிழைத்தவர்.. தற்போது அமெரிக்காவில் தற்கொலை தடுப்பு சமூக ஆர்வலராக பிரபலமாக இருப்பவர்..
10 வயது இருக்கும் போது வலிப்பு நோய் (epileptic seizures) காரணமாக மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தார்.. 16 வயது வரை அந்த மருந்துகள் சாப்பிட்டவர் வலிப்பு நோய் குணமடைந்ததால் அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார்..
ஆனால் அந்த மருந்துகளின் பக்கவிளைவுகளாக மனச்சோர்வு (depression) மற்றும் இருமுனையப் பிறழ்வு (bipolar disorder) அவருக்கு வந்திருப்பதை அவர் அறியவில்லை..
அவர் பெற்றோர் இருவரும் பிரிந்தது அவர் மனதை பாதித்த நிலையில் அவரது நாடக ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டது அவர் மனதை மேலும் பாதித்தது.. தாயுடன் வாழ்ந்துவந்த அவர் 19 வயதில் ஒருமுறை தாயுடன் ஈடுபட்ட வாக்குவாதம் முற்றி அவர் தாயை விட்டுவிட்டு தந்தையுடன் வாழ ஆரம்பித்தார்..
அதே வருடம் அவர் காதலியுடன் பிரிவு ஏற்பட்டது.. பிரிவு ஏற்பட்டபின் வந்த வார இறுதி நாட்களில் 6 தற்கொலை கடிதங்கள் எழுதி தூக்கி எறிந்தவர் 7வது கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்..
25 செப்டம்பர் 2000 அன்று அவர் தந்தை அவரை கல்லூரியில் கொண்டு விட்டபோது தன் தந்தையை தழுவி முத்தமிட்டு மனதிற்குள் விடைகொடுத்தார்.. பின்னர் Golden Gate Bridge செல்லும் பேருந்தில் ஏறினார்.. அங்கு சென்று அந்த பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள..
பேருந்தின் கடைசி இறுக்கையில் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தவர் மனதில் “நான் ஏன் தனிமையில் வருத்தமாக இருக்கிறேன் என்று கேட்டு பேசி யாராவது ஒருவர் கனிவாக அன்பு செலுத்தினால் தற்கொலை செய்யாமல் திரும்பிவிடுவேன்” என்று நினைத்தார்..
பேருந்தில் இருந்த எவரும் அவரிடம் பேசவில்லை.. பேருந்து நின்றபின் இறங்கி அவர் பாலத்தை நோக்கி கலங்கிய கண்களுடன் நடந்தார்.. அங்கும் அதே நிலை.. அங்கிருந்த காவலர் முதற்கொண்டு எவரும் பேசவில்லை..
சுற்றுலா பயணி ஒருவர் கேமரா கொடுத்து புகைப்படம் எடுக்க சொல்லி உதவி கேட்க புகைப்படம் எடுத்து கொடுத்தார்.. அவர் கூட கலங்கிய கண்கள் பற்றி ஏதும் கேட்கவில்லை.. அவர் சென்றபின், தடுப்பு வேலி மீது ஏறி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்..
பாலத்தில் இருந்து குதித்து கீழே விழ ஆரம்பித்த அந்த நொடி “நான் சாகக்கூடாது” என்று என் உள்மனம் சொன்னது என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் Kevin.. குதித்தபோது தலைகீழாக குதித்தவர் சாக்ககூடாது என்ற எண்ணம் வந்தவுடன் அனிச்சையாக சுழுன்று கால் ஆற்றில் படுமாறு விழுந்தார்..
விழுந்த வேகத்தல் கால்முறிவு ஏற்பட்டு நீந்த சிரம்ப்பட்டவரை ஒரு கடல் சிங்கம் (sea lion) ஒன்று மூழ்கிவிடாமல் பார்த்துக்கொண்டது.. கடலோற காவற்படை வந்து அவரை மீட்கும்வரை..
இவர் இன்று தற்கொலை தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்பு பரப்ப ஒரு நிறுவனம் நடத்துகிறார்.. மனநலம் பாதித்தவர்களுக்கு தற்கொலை தீர்வல்ல என்று விழுப்புணர்வு ஏற்படுத்துகிறார்..
தயவு செய்து தற்கொலை பற்றி விளையாட்டா ட்விட் செய்வதை கைவிடுங்கள். அது உண்மையாக அப்படி எண்ணம் கொண்டவர்களின் ட்விட்களையும் கேலிப்பொருளாக மாற்றி உதவி கிடைக்காமல் செய்துவிடும்
கலங்கிய நிலையில் எவரை கண்டாலும் ஆறுதலாக பேசுங்கள். அது ஒரு உயிரை காப்பாற்றும் நிகழ்வாக இருக்கலாம்
முற்றும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh