சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
புகைப் பழக்கம் இருக்கும் நபருக்கு தவணை தொகை கூடும்.
j. Joint டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.
k. உங்கள் குடும்ப பரம்பரை நோய் இருந்தால் (உங்கள் தாத்தா பாட்டி பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுக்கு) மறைக்காமல் சொல்லுங்கள்.
l. குறைவான காப்பீட்டுத் தொகையை எடுக்க வேண்டாம். ஏனெனில் 10-20
ஆண்டுகளுக்குப் பிறகு 10-20 லட்சம் உங்கள் குடும்ப நிதி தேவைகளுக்கு மிகக் குறைவாக இருக்கும். நல்லா யோசித்து உங்கள் பைனான்சியல் கமிட்மெண்ட்ஸ் பார்த்து, எதிர்காலத்துக்கு எவ்வளவு தேவைப்படும் பார்த்து நல்ல தொகை முடிவு பண்ணுங்கள்.
m. 1-2 policy மேல் எடுக்காதிங்க, அதிகபட்சம் 2 பாலிசிகளாக இருக்கலாம்.
n. Nominee யாரென்று முடிவு பண்ணி fill பண்ணுங்கள்.
o. பழைய பாலிசி இருந்த மறைக்காம சொல்லுங்கள். உங்கள் கவரேஜை காப்பீட்டு நிறுவனம் சரி பார்க்கும்.
p. பாலிசி ஆவணம் வாங்கிய உடனே எல்லா details கரெக்ட் இருக்கான்னு
சரிபார்க்கவும். உங்கள் வயது,பெயர், இரத்த வகை,முகவரி மற்றும் பிற முக்கிய விஷயங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விஷயங்கள் தவறாக இருந்தால், உங்கள் முகவர் கிட்டச் சொல்லி ஆவணத்தில் சரி பண்ணி வாங்குங்கள்.
q.நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் யோசித்து
பாலிசி வாங்குங்கள், உங்கள் முகவர் தொகை ஜாஸ்தி பண்ணச் சொல்லுவார், இல்ல rider பார்த்து நீங்களே அதிகமா தேவை இல்லாமல் வாங்காதீர்கள்.
r. முக்கியமா நீங்க பாலிசி போட்ட காலம் வரைக்கும் இருக்கிற இன்ஷூரன்ஸ் நிறுவனமா செலக்ட் பண்ணுங்கள். (அடுத்த 20 - 30 வருடங்கள்)
s. Single Vs regular premium, எது நல்லது?
நம்மள மாதிரி வேலைக்கு போறவங்ககுலுக்கு ரெகுலர் தவணை தான் சரியான தேர்வு. ஆனால் உங்கள் பைனான்சியல் கண்டிஷன் வைத்து முடிவு பண்ணுங்கள். Regular தவணை தொகை விட Single தவணை தொகை குறைவாக இருக்கும், ஆனால் அது ஒட்டுமொத்தமாக கட்டறமாதிரி இருக்கும்.
t. Tax benefit இருக்கிறது, தவணை தொகையை 80C கவர் பண்ணலாம், மற்றும் சில health ரைடர்ஸ் add பண்ணி இருந்திங்கனா 80D ல கவர் பண்ணலாம், கிளைம் தொகை மற்றும் முதிர்வு தொகை 10D ல கவர் பண்ணலாம்.
u. தவணை காட்டாமல் விட்டுட்டீங்கன்னா பெரும்பாலான நிறுவனங்கள் சலுகைக் காலத்தின் முடிவிலிருந்து
2 - 3ஆண்டுகள் வரை வழங்குகின்றன. ஆவணம் இந்த தகவலைப் பின்பற்ற வேண்டிய செயல்முறையுடன் வழங்குகிறது, சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
v. உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தில் வேற யாருக்குத் தேவையோ அவர்களுக்கும் பாலிசி டேர்ம் பாலிசி எடுக்கலாம். குறைந்தபட்ச வரம்பு - 18 வயது.
w. எனக்கு இப்ப போதிய தொகை இல்ல அப்படின்ன அதிகரிக்கும் கவர் (Incremental Cover) பிளான் செலக்ட் பண்ணிக்கோங்க, அது ஒவ்வொரு வருடமும் தவணை மற்றும் காப்பீட்டுத் தொகை கூடும்.
x. சராசரி Claim தொகை settle (Average Claim Amount Settled) அதிகமாக செய்த இன்சூரன்ஸ் நிறுவனமா என்று பாருங்கள்.
y. பாலிசி வாங்கும் முன் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடுங்கள் மற்றும் பாலிசி வாங்கிய பின் உங்கள் குடும்ப உறுப்பினர் கிட்ட மறக்காமல்/மறைக்காமல் சொல்லுங்கள்.
z. நிறைய ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்காதிங்க. கால தாமதம் செய்யாமல் நல்ல பாலிசி செலக்ட் பண்ணி சீக்கிரம் டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கோங்க நம்ம சார்ந்தோர்களின் வருங்கால நீதி பற்றாக்குறையைக் காப்போம்.
டெர்ம் இன்சூரன்ஸ் குறைகள்: 1. தவணை நிர்ணயிப்பதில் வயது ஒரு பங்கு வகிப்பதால், 40 வயதிற்கு மேல் டெர்ம் இன்சூரன்ஸ் பெற விரும்புவோருக்கு தவணை அதிகமாக இருக்கும். 2. டெர்ம் இன்சூரன்ஸ் முடியும் போது maturity கிடைக்காது. 3. டெர்ம் இன்சூரன்ஸ் எதிராகக் கடனைப் பெற முடியாது.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றலை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது
லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ண போன சிபில் ஸ்கோர் முக்கியம் பிகிலு nu சொல்ராங்க.
சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னனு இந்த வாரம் விரிவா பார்த்துருவோம் வாங்க.,
Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.