*குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்*

“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை.

பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இருந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏராளம்.

🙏🇮🇳1
அந்தக் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்.

குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், #ஆரணியில் அருள் பாலிக்கிறார்.

🙏🇮🇳2
#தல_வரலாறு :

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்
ஆலோசனை கேட்டார்.

“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.
🙏🇮🇳3
குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாதாரண விஷயமா. . பக்தர்களுக்கு துன்பமென்றால் ஓடிவரும் ஈசனை வணங்கு. பாற்கடலில் பள்ளி்க் கொண்டிருக்கும் விஷ்ணுவையே உனக்கு சிவபெருமான் குழந்தையாக வரச் சொல்லிக் கட்டளையிடுவார்” என உலகை காத்தருளும் சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார்.

🙏🇮🇳4
அதன்படி தசரதர், மகா சக்திப் பொருந்திய சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். தசரதனின் நான்கு மனைவிகளும், மக்களும் விரதமிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டினார்கள்.

🙏🇮🇳5
பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றிடும் சிவன், தசரதனுனுக்கு அருள் செய்தார். அதுவும் தன்னுடைய படைகளின் தளபதியான விஷ்ணுவை ராமான பிறக்க கட்டளையிட்டார்.

🙏🇮🇳6
இதன் பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார் தசரதன். சிவனுக்கு “#புத்திரகாமேட்டீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

🙏🇮🇳7
#தசரதர்_சன்னதி:

ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய தீர்த்தம் நதியாக பெருக்கெடுத்தது. கமண்டல நதி எனப்பட்ட, இத் தீர்த்தக் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது.

🙏🇮🇳8
மழைக்காலங்களில் இந் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடும்.
புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.

🙏🇮🇳9
கோயிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது.
இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.

🙏🇮🇳10
#குழந்தை_பாக்கிய_வழிபாடு:

குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள்,

🙏🇮🇳11
ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச்சாதமோ, கறிவகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து, பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும்.

🙏🇮🇳12
இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.

🙏🇮🇳13
ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.

🙏🇮🇳14
புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.

🙏🇮🇳15
கமண்டல நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது.

🙏🇮🇳16
#திருவிழா:

☀️ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.

#அமைவிடம்

☀️திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., தூரத்தில் ஆரணி உள்ளது (வேலூரில் இருந்து 41 கி.மீ.,). பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.

🙏🇮🇳17
☀️திருதலம் திறக்கும் நேரம்:
காலை 7- 11 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

30 May
#my_country_my_PM

*What PM Modi did in 7 years...*

International Memberships 

● EBRD Membership 

● International Energy Agency 

● Australia Group 

● SCO Membership 

● Wassenaar Arrangement 

● MTCR Membership
● CREN 

● Asian Infrastructure Investment Bank

● International Solar Alliance
Security Pacts

● Military Logistic Pact 'LEMOA' with USA

● Military Logistic Pact 'MLSA' with France

● Military Logistic Pact with South Korea

● Cross Servicing Agreement 'ACSA' with Japan.

● MLSA pact with Australia. 

● Military Logistic Pact with Russia.
Read 45 tweets
30 May
தமிழகத்தில் தேச விரோத சக்திகளின் எழுச்சி: சுப்பிரமணியன் சுவாமி

சென்னை: 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சி அச்சுறுத்தலில் தமிழகம் உள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
Read 6 tweets
30 May
சீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி

கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Read 7 tweets
30 May
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா தொற்று காரணமாகப் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்/ தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு,
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஆதரவளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அத்தகைய குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கான முக்கியக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
Read 17 tweets
30 May
இது உங்கள் இடம்: கார்த்தி சிதம்பரம் யோசனை சொல்வாரா?

எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், தமிழக அரசுக்கு ஓர், 'அற்புதமான' யோசனையை வழங்கிஉள்ளார்.
அதாவது, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால், நம் நாடு பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகமும் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழக அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கார்த்தி சிதம்பரம், லாட்டரி யோசனை தெரிவித்துள்ளார்.
Read 7 tweets
30 May
*உலகில் பெரிய விஷ்ணு சிலை*

@mahavishnuinfo

இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம். 

🙏🇮🇳1
அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.

🙏🇮🇳2
அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.

🙏🇮🇳3
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(