ஜாதி பெயரால் திசை திருப்பும் போராளிகள்! கவிஞர் தாமரை சாட்டை
பாலியல் பிரச்னைகளை கூட பிராமண எதிர்ப்பாக திசை திருப்பும் போலி போராளிகளை தோல் உரிக்க வந்துவிட்டார் கவிஞர் தாமரை.
பாலியல் வன்கொடுமைகளும் பக்கம் பார்த்து பேசுதலும்! என்ற தலைப்பில் தாமரை கொட்டித் தீர்த்த குமுறல்களில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல் மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பாரம்பரியம் மிக்கதாக சமூகத்தில் உயர்படியில் இருப்பதாக தோற்றம் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. ராசகோபாலன் சிறையில். எவ்வளவு வேகமான நடவடிக்கை. வரவேற்க வேண்டும். கல்வி அமைச்சருக்கும் காவல் துறைக்கும் பாராட்டுகள். அப்படியே கொஞ்சம் திரும்பி பார்ப்போமா.
மூன்றாண்டுகளுக்கு முன் சின்மயி உட்பட 13 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகமும் சமூகமும் அரசும் பெண்ணுரிமை போராளிகளும் என்ன செய்தனர். சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்து துவைக்கப் பட்டார்.
அவர் தொழில் பாதிக்கப்பட்டு தொந்தரவு கொடுத்து அலைக்கழிக்கப்பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார்.
முகிலன் என்றோர் ஊரறிந்த 'போராளி'... ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக ஏமாற்றி, ஓடி ஒளிந்து 'கடத்தல்' நாடகம் ஆடுகிறார்.
வழக்கு பதிவான பிறகே கண்டுபிடிக்கப்பட்டு கைது ஆகிறார். ஆனால் பிணையில் வெளியே வந்து மீண்டும் தொழில் ஆரம்பித்தாகி விட்டது. அதற்கு முன், தோழர் தியாகு என்று அழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி,பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி,
உதவிநாடி வந்தவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ்கூறும் நல்லுலகுக்கு தெரிந்த சங்கதி.
மெத்தப்படித்த மேதாவி சுபவீ களவாணி என்பதும் அறிந்தது. ஆனால் நடந்தது என்ன. குழந்தையோடு நான் தெருவுக்கு வந்ததுதான் மிச்சம்.
இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன. ராஜகோபாலன்களுக்கும் வைரமுத்து, தியாகு, முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு?
ஒரு பார்ப்பன பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள், திராவிட பொறுக்கி என்றால் ஒத்துவீர்களோ. பாலியல் குற்றம் நிகழ்ந்தால் சாதி மதம் சமூக நிலை பதவி பணபலம் எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும்.
அதுதான் அறம். மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்கு பெயர் பச்சோந்தித்தனம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழகத்தில் தேச விரோத சக்திகளின் எழுச்சி: சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சி அச்சுறுத்தலில் தமிழகம் உள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி
கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
கரோனா தொற்று காரணமாகப் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்/ தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு,
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஆதரவளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அத்தகைய குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கான முக்கியக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், தமிழக அரசுக்கு ஓர், 'அற்புதமான' யோசனையை வழங்கிஉள்ளார்.
அதாவது, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால், நம் நாடு பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகமும் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழக அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கார்த்தி சிதம்பரம், லாட்டரி யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம்.
🙏🇮🇳1
அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.
🙏🇮🇳2
அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.