முனைவர் கமல.செல்வராஜ், அருமனை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 34 ஆண்டுகளுக்குப் பின், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த, 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, மத்திய அரசு அதற்கான பணியைத் துவங்கியது.
அக்குழுவினர், நம் நாட்டில் பெரும் நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை பல்வேறு தரப்பட்ட, 2.50 லட்சம் பேரிடம் கருத்துகளைச் சேகரித்தனர். அதன் பின், அவற்றை கொள்கை முன்வரைவாகத் தயார் செய்து, நாட்டு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பார்வைக்கு முன்வைத்தனர்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு முழு வடிவில் தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு. இதை, தமிழகம் தவிர, பிற மாநிலங்கள் அனைத்தும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏற்றுக்கொண்டன.
'ஹிந்தி திணிப்பு நடக்கிறது; குலத் தொழிலுக்கு அச்சாரம் போடப்படுகிறது' என, தமிழகத்தில் மட்டும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
வரும் கல்வியாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளின் கூட்டத்தை, சில தினங்களுக்கு முன், மத்திய அரசு கூட்டியது. இதில், அனைத்து மாநிலக் கல்வி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
ஆனால், தமிழகக் கல்வி அதிகாரிகளை, அக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல், தமிழக அரசு தடுத்துள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் எனவும், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
ஏனென்றால், இக்கல்விக் கொள்கையில், 3 வயது முதல், 6 வயது வரை அனைத்து மாணவர்களுக்கும், கட்டணமில்லாஅடிப்படை கல்வி வழங்கப்படும். தொடக்கப் பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை, மதியம் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.
30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்படும். நடுநிலைப் பள்ளியிலிருந்து, மாணவரின் திறமைக்கு ஏற்ற தொழிற்கல்வி கற்பிக்கப்படும்.
நாடு முழுதும் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும். இதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் உட்பட, 10 பிராந்திய மொழிகள் உட்படுத்தப்பட்டுள்ளன. விரும்பும் மொழியை கற்கலாம். இவற்றுடன், விரும்பினால் ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியைக் கூடக் கற்கலாம்.
இப்படி எண்ணற்ற நல்ல திட்டங்கள், இந்த தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுஉள்ளன. இக்கல்விக் கொள்கைக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
தமிழகத்திலும், இக்கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை, சுயசார்பு கல்வியாக மாற்ற, மத்திய அரசுடன் ஒத்துழைப்பதே விவேகமாகும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழகத்தில் தேச விரோத சக்திகளின் எழுச்சி: சுப்பிரமணியன் சுவாமி
சென்னை: 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சி அச்சுறுத்தலில் தமிழகம் உள்ளதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
சீனாவில் திடீரென அதிகரிக்கும் கோவிட் தொற்று; அரசு அதிர்ச்சி
கங்சோ: சீனாவின் தெற்கு மாகாணமான கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்துக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டு தற்போது சீனா படிப்படியாக அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பகுதியில் வைரஸ் சோதனை மேற்கொண்டபோது 20 புதிய நோயாளிகளுக்கு வைரஸ் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
கரோனா தொற்று காரணமாகப் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்/ தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு,
பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஆதரவளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அத்தகைய குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கான முக்கியக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், தமிழக அரசுக்கு ஓர், 'அற்புதமான' யோசனையை வழங்கிஉள்ளார்.
அதாவது, தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை துவக்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால், நம் நாடு பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகமும் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போது புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.தமிழக அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கார்த்தி சிதம்பரம், லாட்டரி யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம்.
🙏🇮🇳1
அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.
🙏🇮🇳2
அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.
அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.