பத்திரிக்கை செய்திக்குறிப்பு:
இலங்கையின் தெற்குபகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் வசம் இலங்கை அரசு ஒப்படைக்கும் தீர்மானத்தை மே20,2021இல் நிறைவேற்றியதால் தமிழ்நாட்டில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என 31-05-2021 ’தி இந்து’thehindu.com/news/national/… 1/10
ஆங்கில நாளிதழின் 4ம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது .இதனால் தமிழ்நாட்டில் உள்ள சீனா மற்றும் இலங்கை தூதரகங்களின் முன் போராட்டத்தினை (நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்ப்பினை அடுத்து) தமிழர் அமைப்புகள் சீனாவின் நிறுவனங்களை குறிவைத்து போராட்டத்தை நட்டத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக 2/10
காவல்துறை தகவல்கள் சொன்னதாக ஒரு செய்தியை வெளியிட்டுளளது. மேலும் பெயர் குறிப்பிடாத தமிழ்த்தேசிய அமைப்பின் பொறுப்பாளர் இத்தகவலை சொன்னதாக சந்தேகத்திற்கிடமான யூக அடிப்படையில் செய்தியை இந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழினப்படுகொலைக்கு சர்வதேசம் நியாயம் வழங்காத காரணத்தினால் 3/10
தமிழர்கள் சர்வதேசத்தின் மீது மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும் அதனால் இந்த எதிர்ப்புகளை சீனாவின் மீது காட்டவாய்ப்புள்ளது என்பது போல செய்தியை தாமாக வெளியிட்டுள்ளது. இலங்கை அரசுகளுடன் கடந்த பல வருடங்களாக நெருக்கமாக இயங்கி வரும் ‘தி இந்து’ நாளிதழ் தமிழ்த்தேசிய அமைப்புகள் குறித்தும், 4/10
தமிழர் போராட்டங்கள் குறித்தும் மிகத் தவறான செய்திகளை, உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்ட வரலாறு உண்டு. இது குறித்து பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை ‘தி இந்து’ நாளிதழிடமும், பொதுவெளியிலும் வெளிப்படுத்தி இருக்கின்றன. இந்த செய்தி நிறுவனத்தினை கண்டித்து பல 5/10
போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐ.நா மனித உரிமை மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடுகளை சீன அரசு எடுத்து வந்துள்ளதை மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழர் அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. இந்த தமிழினப்படுகொலையில் இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்து 6/10
உள்ளிட்ட நாடுகளின் நீண்டகால பங்களிப்பை தமிழர் அமைப்புகள் கண்டித்தும் வந்திருக்கின்றன. தங்களது எதிர்ப்புக் கருத்துக்களை சனநாயக வழியிலேயே வெளிப்படுத்தி இருக்கின்றன. மாறாக ‘தி இந்து’ இதழில் சித்தரிப்பதைப் போன்ற சட்ட ஒழுங்கு நெருக்கடியை ஏற்படுத்தியதில்லை. கொரொனோ நெருக்கடி 7/10
காலகட்டத்தில் அந்த நெருக்கடியை எதிர்கொள்ள தமிழர் அமைப்புகள் தங்களால் இயன்ற சமூகப் பணிகளை செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இது போன்ற உண்மைக்கு மாறான செய்தியை வெளியிடும் ‘தி இந்து’வின் இச்சிறுமைச் செயல் விசமத்தனமானது, உள்நோக்கமுடையது. சீனா உள்ளிட்ட நாடுகளின் மீதான 8/10
ஏமாற்றத்தினை/எதிர்ப்பினை கருத்தியல் அளவில் தொடர்ந்து பதிவு செய்து வந்த போதிலும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டமைப்பதைப் போன்று தமிழர் அமைப்புகள் சட்ட ஒழுங்கை சீர்கேடு செய்யும் இயக்கங்களாக சித்தரிப்பது என்பது தமிழர் விரோத பார்ப்பனீய சூழ்ச்சியே. இத்தகைய சீர்கேடான செயலை வன்மையான 9/10
FamilyMan எனும் படம் தமிழீழ போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்துகிறது. ’மெட்ராஸ்கபே’ படம் போல பல படங்களில் ஈழப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது. ‘புலிப்பார்வை’ போன்ற படங்கள் போராளிகளை மலினப்படுத்துகிறது. இவ்வகை தமிழர் விரோத படங்கள் தங்குதடையின்றி உருவாகி..1/10
வெளியாகின்றன. இவை எவ்வகையிலும் கலை சார்ந்த படைப்புகள் அல்ல. இந்தியாவின் தேசிய இனங்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையிலான பிரச்சாரங்கள். இவை எதேச்சையாக எடுக்கப்படுவதில்லை. 7 தமிழர் விடுதலையை பேசும்பொழுது இந்து நாளிதழ் ‘ராஜீவ் கொலை-வி.புலிகள் வீழ்ச்சி’ என அரைப்பக்கத்தில்.. 2/10
கட்டுரையை எழுதுகிறது. இலங்கை மீது பொருளாதாரதடை என தீர்மானத்தை தமிழகம் போட்டவுடன் இலங்கை அரசுடன் நெருக்கமான ‘லைக்கா’ நிறுவனத்திற்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கிறது. தேசியத்தலைவர் படங்கள் பதிந்த சமூகவளைதள பக்கங்கள் நிரந்தரமாக அறிவிப்பின்றி முடக்கப்படுகின்றன. இனப்படுகொலை காணொளிகள் 3/10
கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator வசதியை மோடி அரசு செய்திருந்தால் இன்று நெருக்கடி மோசமாகியிருக்காது. ரூ201 கோடியில் 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை. இத்தனை நாட்கள் 1/5
கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிககுறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது ஏன்? நெருக்கடி உருவான பின் ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு 2/5
வக்காலத்து ஏன் வாங்குகிறார்கள் பாஜக தலைவர்கள்? நெருக்கடியை பற்றி கடந்த வருடமே உணர்த்தும், ஏன் அதற்குரிய வசதிகளை செய்யவில்லை என பாஜக சொல்வார்களா? ஸ்டெர்லைட்டுக்காக கூச்சலிடும் பாஜக கூட்டம் இது பற்றி பேசுவார்களா? 4-6 வாரத்திற்குள் ஆக்சிசனை மருத்துவமனைக்குள்ளாகவே உருவாக்கும் 3/5
இந்தியாவிற்குள் சிறிய மாநிலம் வளர்ச்சி அடைவது உண்மையெனில் புதுச்சேரி இன்னொரு சிங்கப்பூராகி இருக்கவேண்டும். திரிபுரா சுவிசர்லாந்தாகியிருக்க வேண்டும். அஸ்ஸாம், அயர்லாந்தாகிருக்க வேண்டும்.
2014 பிரச்சாரத்திற்காக மோடி திருச்சி வந்தபோது மாநிலபிரிப்பு எனும் சூழ்ச்சி விவாதமானது 1/5
தேசிய இனங்களை சிறு சிறு மாநிலங்களாக உடைந்தால் அம்மக்களின் அரசியல் பலம் குறைந்து போகும், பொருளாதார வளர்ச்சி சிதையும்.ஒரு தேசிய இனம் தமக்குள்ளாக முரண்களை வளர்த்து சிதறுண்டுபோகும். அதிக எம்.பிக்களை கொடுக்கும் மிகப்பெரும் மாநிலமான உத்திரபிரதேசத்தின் இந்தி பேசும் மக்கள் 2/5
இந்தியாவிற்குமான ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் இருக்கும் போது, சிறு-குறு மாநில முதல்வர்களாக டில்லி அரசிடம் குறைந்தபட்ச அங்கீகாரத்திற்காக கையேந்தும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள். மிக முக்கியமாக காவிரி பறிபோகும், NLC-யில் டீக்கடை வைக்கக்கூட தமிழருக்கு உரிமையிருக்காது 3/5
சரஸ்வதி எனும் இளம்பெண் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை அனைத்துச் சமூகத்தைச் சார்ந்த ஆண்களாலும் தங்குதடையின்றி நிகழ்த்தப்படுகிறது. பட்டியலினச் சமூகமாக இருந்தாலும் ஆண்களின் பெண் மீதான ஆதிக்கபோக்கு குறைந்துவிடவில்லை. சாதியப்படிநிலையில்
அனைவரையும் விட கீழான நிலையிலேயே பெண்கள் வைக்கப்பட்ட இச்சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இன்றளவும் இருக்கிறது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைக்கான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வன்முறையாளர்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை
இந்நிலையைப் போக்க அனைவரும் ஒன்றாக முன்வரவேண்டுமெனும் நிலையையே இது காட்டுகிறது. பெண்கள் மீதான வன்முறையை ஏவுகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களை காப்பதும், ஆதரிப்பதும் வன்மத்தின் உச்சம். சேலம் சிறுமியை கொலை செய்தவனை ஏன் கைதுசெய்யவில்லையென கேட்டதற்காக சிபிசிஐடி வழக்கை என் மீது ஏவிய
நீண்டநாட்களுக்குப் பிறகு திரையரங்கில் குடும்பத்துடன் படம்பார்க்க சென்றது கர்ணனுக்காக. மாரிசெல்வராஜின் படைப்பு மிக நேர்த்தியாக அரச பயங்கரவாதத்தையும், அதன் முதுகெலும்பாக அமையும் இந்துத்துவ ஜாதிய வன்மத்தையும், சமூகமயமான சாதிய மனநிலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தீரா வன்மத்தோடு
வேட்டையாடித் தீர்க்கும் இந்த சமூக-அரசியல்-அதிகாரவர்க்க ஜாதியப் போக்கை அப்பட்டமாக, ஒளிவுமறைவில்லாமல், அச்சப்படாமல் காட்சிப்படுத்தியதை எப்படி போற்றாமல் இருக்கமுடியும். பெருங்காமநல்லூரிலிருந்து வாச்சாத்தி, பரமகுடி, கூடன்குளம் வரை நீண்ட வரலாறு கொண்டது அரசின் பயங்கரவாதம். இந்த
வன்முறைகளில்
சாதிய ஒடுக்குமுறையை உள்ளடக்கி பட்டியலின மக்கள் மீது வெளிப்படுத்தப்பட்ட வன்முறைகளே இன்றளவும் மிக மோசமான வலிநீங்கா வடுக்களாகியிருக்கிறது. நம் சமூகம் சனநாயகமற்று, சாதிய வன்மத்தோடு இயங்கி வருவதை நெற்றியில் அடித்துச் சொல்வதைப் போல வெளிப்படுத்தும் 'கர்ணன்'
இலங்கை பற்றிய ஐ.நாவில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட திர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கியதல்ல. அது ஐ.நா மனித உரிமை அவை முன்மொழிந்தவற்றை உள்ளடக்கியவையும் அல்ல, இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமுமல்ல. இப்படியாக நீர்த்துபோக செய்யப்பட்ட ஒரு
தீர்மானத்தை கூட மோடி அரசால் ஆதரிக்க இயலாது என்பதே பாஜகவின் தமிழின விரோதத்திற்கு சாட்சி. ஆயிரம் தமிழர் கோவில்கள் உடைக்கப்பட்டதை கண்டுகொள்ளாத போலி கூட்டம், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்க எப்படி உடன்படும். காங்கிரஸ் கட்சிக்கு எவ்வகையிலும் வேறுபட்டதல்ல பாஜக. தனது பிராந்திய நலனை
அடிப்படையாகக் கொண்டு மேற்குலகம் கொண்டுவரும் இத்தீர்மானம் அமெரிக்கா-பிரிட்டன் தலைமையிலான இராணுவ கூட்டுறவிற்காக தமிழர் கோரிக்கைகளை பேரம்பேச பயன்படுத்துகிறது. தெற்காசிய கடலில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்ட பயன்படுத்தப்படும் தீர்மானத்தை பற்றிய விவாதத்தில் சாதுர்யமாக