அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
ரூ .1000/- அல்லது ரூ 2,000/- அல்லது ரூ 3,000/- அல்லது மாதத்திற்கு ரூ 4,000/- அல்லது ரூ 5,000/- 60 வயதை எட்டிய பின்னர் சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகை தொடங்கும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்; அதிகபட்சம் 40 ஆண்டுகள்
-நாமினி உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
-ஒருவர் ஒரு APY கணக்கை மட்டுமே திறக்க முடியும்.
-18-40 வயதுக்குட்பட்ட NRI APY கணக்கைத் திறக்க முடியும்.
ஓய்வூதியம் 60 வயதில் தொடங்கும்.
நீங்கள் NPS (தேசிய ஓய்வூதிய முறை) யில் கணக்கு வைத்து இருந்தால் APY தொடங்க முடியாது
APY அம்சங்கள்:
- சந்தாதாரர்களுக்கு மாத ஓய்வூதியம் உத்தரவாதம், ரூ. 1,000 முதல் ரூ. 5,000.
- இந்திய அரசு (GOI) சந்தாதாரரின் பங்களிப்பில் 50% அல்லது ஆண்டுக்கு ரூ. 1,000, எது குறைவாக இருந்தாலும். வருமான வரி செலுத்தாதவர்களுக்கு அரசாங்கத்தின் கூட்டு பங்களிப்பு கிடைக்கிறது.
பங்களிப்பு:
நீங்கள் பங்களிக்க தொடங்கும் போது மாதாந்திர பங்களிப்பு தேவையான ஓய்வூதியத் தொகை மற்றும் வயதைப் பொறுத்தது.
மாதத்திற்கு ரூ. 1,000 உத்தரவாத ஓய்வூதியத்திற்காக வழங்கப்பட வேண்டிய பங்களிப்புக்கான அட்டவணை கீழே உள்ளது.
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A Thread on PMSBY - An Accidental Death Insurance Plan 👇
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் விபத்து இறப்பு காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது
காப்பீடு பாதுகாப்பு: பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் விபத்தில் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ.2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் டெர்ம் காப்பீடு திட்டம். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் ஆயுட் காப்பீடு ஆண்டுக்கு ரூ .330 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.
காப்பீடு பாதுகாப்பு: PMJJBY திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் எந்தவொரு காரணத்திற்காகவும் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ . 2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்