A Thread on Financial Mistakes done by Middle-Class People: 👇
நடுத்தர வர்க்க மக்கள் நம் செய்யும் நிதி தவறுகள்:
தல அஜித்: ஹலோ! நண்பர்களே இந்த வாரம் நம்ம நடுத்தர வர்க்க மக்கள் செய்யும் நிதி தவறுகள் பற்றி விரிவா பார்த்துருவோம் வாங்க.
a.பெரும்பாலும் நாம் செய்வது சேமிப்பு= (வருமானம்–செலவுகள்) அல்ல செலவு= வருமானம் - (சேமிப்பு+முதலீடு) இது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
வரவு எட்டணா செலவு பத்தணா பண்ணாதீர்கள்.
b.எல்லாவற்றையும் ஒரே முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
c. நல்ல வருமானம் வரும் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு பண்ணுங்கள், வெறும் சேமிப்பு மட்டும் செய்தீர்கள் என்றால் பணவீக்கம் ல மாட்டிக்கொள்வீர்கள்.
எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி
d. தங்கம் மட்டுமே முதலீடு திட்டம் னு வாங்கிட்டு இருக்காதீர்கள்..
e. நாம் வாங்கும் சம்பளம் மட்டுமே வருமானம் என்று நினைக்காதீர்கள். மாற்று வருமான திட்டத்தை ஆராயுங்கள்.
f. நீங்கள் இளமையாக இருக்கும்போது உங்கள் ஓய்வூதியத் திட்டத்தைத் திட்டமிடுங்கள்.
இளமையில் கல்.
g. உங்கள் முதலீட்டை எப்போதும் மதிப்பாய்வு செய்யுங்கள், அவ்வளவு தான் இன்வெஸ்ட் பண்ணிட்டோமேன்னு இருக்காதீர்கள் உங்கள் முதலீடுகளை அடிக்கடி கண்காணிக்கவும்.
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
h. காப்பீடு மிகவும் முக்கியமானது, வேலையில் சேர்ந்தவுடன் உங்களை நல்ல டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.
i. செலவு கணக்கை எழுதி வைத்து செலவுகளைக் கண்காணிக்கவும். எப்பொழுதும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். அதை எப்பொழுதும் கண்காணியுங்கள். இந்த மாத பட்ஜெட்டை அமைப்பதற்கு முன் உங்கள் கடைசி மாத செலவுகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.
எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
j. Couple goals மாதிரி Financial goals 😉 மிக முக்கியமானவை, உங்கள் நிதி இலக்குகள் குறுகிய கால முதலீடு / நடுத்தர கால முதலீடு / நீண்ட கால முதலீடு என்று பிரித்து முதலீடு பண்ணுங்கள். அவசர நிதி என்று தனியாக சேமித்து வையுங்கள்.
k. இது தேவையா / வேண்டுமா என்று கேள்வி கேட்டுட்டு எந்த பொருளையும் வாங்குங்கள், தேவை இல்லாத எந்த பொருளும் வாங்காதீர்கள்.
l. அவசியம் இல்லாத சில முதலீட்டில் முதலீடு செய்யாமல் எப்போதும் உங்கள் நிதி நிலைமைகளின் அடிப்படையில் முதலீடு செய்யவேண்டும், யாரோ சொன்னதை அடிப்படையாகக் கொண்ட
முதலீடு செய்யாதீர்கள்.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
m. எந்த முதலீடு திட்டத்திலும் கண்மூடித்தனமான ரிஸ்க் எடுக்காதீர்கள். வட்டி அதிகம் கிடைக்கும் என்று மோசடி திட்டத்தில முதலீடு பண்ணி மாட்டி கொள்ளவேண்டாம்.
n.ஷேர் மார்க்கெட் / ஸ்டாக் பற்றி முழுமையாக ஆராயாமல் எதிலேயும் முதலீடு செய்யாதீர்கள்.
ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோல
o.உங்கள் வருமான வரி தாக்கத்தின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் திட்டமிடுங்கள்:
லைப் இன்சூரன்ஸ்ல் முதலீடு செய்வதற்குப் பதிலாக ELSS Mutual fund,
Health insurance மற்றும் ஒரு கால காப்பீட்டை (Term Insurance) வாங்கலாம்.
p. 2 - 3 கிரெடிட் கார்டு வைத்துக் கொண்டு கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்து, அந்த கார்டு கடனை அடைப்பதற்கு பர்சனல் லோன் போட்டு அடைப்பது. எவ்வளவு சம்பளம் வந்தாலும் எப்பொழுதும் நிதி பற்றாக்குறையுடன்
இருப்பீர்கள். கிரெடிட் கார்டு சரியாகப் பயன்படுத்துங்கள் அல்லது அதை வாங்காமலிருந்தால் இன்னும் நல்லது.
q. கடன்களை அதிக படுத்திட்டே இருக்காதீர்கள். கடன்களைச் சீக்கிரம் அடைக்கப் பாருங்கள். Financial Freedom என்பது ஒரு தனி சுகம், அதை அனுபவிங்கள்.
r. தேவையற்ற சந்தாக்கள், கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள் தயவுசெய்து முடிந்தவரைச் சேமியுங்கள். ஆரோக்கியம் மற்றும் செல்வம் இரண்டும் உங்கள் வாழ்க்கையில் முக்கியம்.
Long Live Happy Life
s. பல சிறிய பொருள் வாங்குதல் ஒரு பெரிய செலவுக்கு வழிவகுக்கும், அவற்றைக் குறைத்து
மதிப்பிடாதீர்கள். எந்த பொருள் வாங்கினாலும் ஆராய்ந்து வாங்குங்கள் நிறையக் காசு போட்டு வாங்கற பொருள் நமக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்று யோசித்து வாங்குங்கள்.
t. உங்கள் முதலீடுகளைச் சிறிதாகத் தொடங்குங்கள், அதன் அருமை உங்களுக்குப் போகப் போக புரிய ஆரம்பிக்கும்.
இன்றே MF SIP யில் உங்களது முதலீட்டை.த் தொடங்குங்கள், சில திட்டங்களில் மாதம் ரூ .100 உடன் தொடங்கலாம். Start with small steps.
பல துளி பெருவெள்ளம்.
u. தேய்மான சொத்துக்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.( உ: மொபைல் போன், கார், அபார்ட்மெண்ட்….,)
v. உங்கள் நிதி நிலைமைகள் குறித்து எதையும் மறைக்காமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது மனைவியிடம் எப்போதும் தெரிவிக்கவும்
w. உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள்.
x. முதலீட்டுக்கு எப்பாவும் பொறுமை முக்கியம். Overnight ல பணக்காரன் ஆகமுடியாது. நேர்மையா இருங்கள்.
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
y. உங்கள் குழந்தைக்கும் மற்றும் உங்கள் மனைவிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும், பைனான்சியல் திட்டமிடல் என்றால் என்ன என்று சொல்லிகுடுங்க..
z. கடைசியாக உங்கள் 20 வயதில் ஆரம்பக் காலங்களில் உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குகள், உங்கள் 30/40/50 வயதில் அல்ல.
சிறிய உதாரணம் ஒருவர் தனது 50 வயதில் பணி ஓய்வு இலக்கு வைக்கிறார் என்றால்
அதனால் இளமையில் கல் என்பதை இளமையில் முதலீடு செய் என்று எடுத்துக் கொண்டு அனைவரும் மேலே சொன்ன நிதி தவறுகளைச் செய்யாமல் நல்ல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். Its Just the Beginning
ஆடம்பரத்துக்கும் தேவைக்கும் ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் நல்ல சேமித்து நல்ல திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் வருங்காலத்தில் ஓய்வு வாழ்க்கை நிதிப் பற்றாக்குறை இல்லாமல் நல்ல இருக்கலாம், அந்த பக்கம் போய்விட்ட கொஞ்சம் கஷ்டப் படுவீர்கள். இந்த பக்கமா இல்ல அந்த
பக்கமாவென்று முடிவு செய்கின்ற நேரம் வந்தாச்சு. நல்ல முடிவு பண்ணி வாழ்க்கையில் வளமாக இருங்கள். இது தாங்க உங்களுக்கு நான் தரும் #ValimaiUpdate
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, நான் கற்றதை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அடல் ஓய்வூதிய யோஜனா (APY), இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. APY இன் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம்
ரூ .1000/- அல்லது ரூ 2,000/- அல்லது ரூ 3,000/- அல்லது மாதத்திற்கு ரூ 4,000/- அல்லது ரூ 5,000/- 60 வயதை எட்டிய பின்னர் சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய தொகை தொடங்கும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்; அதிகபட்சம் 40 ஆண்டுகள்
A Thread on PMSBY - An Accidental Death Insurance Plan 👇
பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் விபத்து இறப்பு காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 12 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது
காப்பீடு பாதுகாப்பு: பிரதான் மந்திரி சூரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் விபத்தில் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ.2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது மத்திய ஆட்சியால் தொடங்கப்பட்ட குறைந்த பிரீமியம் டெர்ம் காப்பீடு திட்டம். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரருக்கு ரூ. 2 லட்சம் ஆயுட் காப்பீடு ஆண்டுக்கு ரூ .330 பிரீமியத்தில் கிடைக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.
காப்பீடு பாதுகாப்பு: PMJJBY திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் எந்தவொரு காரணத்திற்காகவும் இறந்தால் ரூ .2 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகை நாமினிக்கு கொடுக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்பு: நாமினி ரூ . 2 லட்சம் தொகையைப் பெறுவார்கள்.
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்