unpopular opinion - Ponniyin selvan
#shared

பொன்னியின் செல்வன் ;
படிகின்ற பலருக்கும் பிடிக்காமல் போகலாம்…

வாசகர் ஒருவர் எழுதியது

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் அவரே எதிர்பாராத வகையில் புகழ் பெற்ற ஒன்றாகியுள்ளது என்றுதான் நான் நினைக்கின்றேன்.
இன்றுவரை புத்தகச் சந்தைகளில் அதிகம் விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

1950ன் தொடக்கத்தில் கல்கியில் தொடராக வெளியானபிறகு, பலமுறை மீண்டும் தொடராக வெளியிடப்பட்டுள்ளது.

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடகக்
குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் தொடங்கி பலர் திரைப்படமாக்கு முயற்சித்த நிலையில், தற்போது மணிரத்தினம் திரைப்படமாக்கி வருகின்றார்.

இக்கதை புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களில் 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக்
கொண்டுள்ளது.

கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.

நந்தினி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் கற்பனையானது என கல்கியே இறுதியில் கூறியுள்ளார்.
சுந்தர சோழர் தஞ்சை அரண்மனையில் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். காஞ்சியில் உள்ள இளவரசன் ஆதித்த கரிகாலன் தன் நண்பன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு அனுப்பி பெற்றோரை காஞ்சிக்கு அழைத்துவரச் சொல்கிறார்.

தஞ்சை செல்லும் வந்தியத்தேவனை, இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள இளவரசர் அருண்மொழிவர்மனை
தஞ்சைகு அழைத்து வரச் சொல்கிறார்சொல்கிறார் குந்தவை.

இதற்கிடையில் அரசர் சுந்தரசோழரை கொலை செய்ய முயற்சிக்கும், பாண்டிய அரசனின் வேளக்காரப் படை கடம்பூர் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலனை கொலை செய்கின்றது.

அரசன் சுந்தரசோழர் சிறுவயதில் காட்டில் காத்திருந்தபோது, தனக்கு உதவிய பெண்ணை
ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்ற உணர்விலேயே உடல் நிலை சரியில்லாமல் உள்ளார்.

நந்தினியும், மதுராந்தகனும் சுந்தரசோழருக்கும், காட்டிலிருந்த அந்தப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என குந்தவை, அருண்மொழி வர்மன், கரிகாலன் உள்ளிட்ட அனைவரும் நினைக்கின்றனர். மதுராந்தகனுக்கு பட்டம் சூட
கூட முடிவெடுக்கின்றனர்.

காட்டிலிருந்த அந்தப்பெண்ணுக்கும், பாண்டிய அரசனுக்கும் பிறந்தவர்கள் என இறுதியில்தான் தெரிகின்றது.

பள்ளி, கல்லூரி காலத்தில் படித்தபோது பரப்பரப்பாக இருந்தது. இப்போது, கொரொனா ஊரடங்கில் மகன் படிக்க கேட்டபோது வாங்கிகொடுத்துவிட்டு, நானும் படித்தேன்.
படித்தபிறகுதான் இந்தக் கதைக்காகவா தமிழுலகம் இவ்வளவு பேசுகின்றது என்று தோன்றியது.

காட்டிலிருந்த பெண்ணுடன் பழகிய பாண்டியனுக்கு பிறந்த ஒரு பெண்ணையும், ஆணையும், சோழ அரசன் தன்னுடைய மகன், மகள் என நினைப்பதும், அரியணை ஏற்ற முயல்வதும்,
பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அந்த பெண்ணையும், ஆணையும் சோழ அரியணையில் உட்கார வைக்க பாண்டிய மன்னர்களின் வேளக்காரப் படையும், ஒற்றர்களும் செய்யும் வேலைகளும் 5 பாகங்களின் கதையாக விரிவடைகின்றது.

மாபெரும் சோழப் பேரரசு என அழைக்கப்படுகின்ற சோழ அரசர்கள் இவ்வளவு பலகீனமாகவா இருந்துள்ளார்கள்
என்று தோன்றுகின்றது.

வேறுபலர் எழுதியுள்ள பல வரலாற்று நாவல்களில் சாகசவாதம் அதிகமிருக்கும்.
இதில் அதுவுமில்லை.

துரோகம், வஞ்சனை, ஏமாற்றுதல், ஏமாந்துபோதல் போன்றவையே மீண்டும் மீண்டும் வருகின்றது.
வந்தியத்தேவனை சாகச நாயகனாகக் காட்டி கதையை தூக்கிச் சுமக்கின்றார்.
இந்தக் கதை
சோழர்களின் பெருமையைப் பேசவில்லை. சோழர்கள் ஏமாளிகள் என்பதையும், ஏமாற்றப்படுவதையும் காட்டுகின்றது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

24 May
தொடர்ந்து ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்வதால் அதில் அடுத்தடுத்த நிலைகளைக் கடப்பது மிகச் சுலபமாகிவிடுகிறது...

சில வருடங்களுக்கு முன் எப்போதாவதுதான் புத்தகம் படிப்பேன். அதுவும் எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்ற எல்லை மிகக் குறுகியதாக இருந்தது.
பிறகு தொடர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து செய்யச் செய்ய நான் கண்ட பலன்கள் மிக அதிகம். அவற்றில் முக்கியமானவை:

1) எந்தப் புத்தகத்தையும் தயக்கம் இல்லாமல் அணுக முடிகிறது. 'இந்த மனநிலைக்கு இந்தப் புத்தகம் படிப்பதுதான் சரி' போன்ற வரம்புகளை சுலபமாகக்
கடந்துவிட்டிருக்கிறேன்.

2) ஆங்கிலப் புத்தகங்களில் சுயமுன்னேற்றம் பற்றிய புத்தகங்கள் மட்டுமே படித்து வந்திருந்தேன், அதைத் தாண்டி புதினங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

3) தமிழில் புதினம், அபுதினம் என்ற பிரிவு பேதம் இல்லாமல் படிக்க முடிகிறது.

4) இரவு தூங்கும் முன்பு சில பக்கங்களாவது
Read 6 tweets
24 May
Here is the ultimate book on the worldwide movement of hackers, pranksters, and activists that operates under the non-name Anonymous, by the writer the Huffington Post says “knows all of Anonymous’ deepest, darkest secrets.”
Half a dozen years ago, anthropologist Gabriella Coleman set out to study the rise of this global phenomenon just as some of its members were turning to political protest and dangerous disruption (before Anonymous shot to fame as a key player in the battles over WikiLeaks,
the Arab Spring, and Occupy Wall Street). She ended up becoming so closely connected to Anonymous that the tricky story of her inside–outside status as Anon confidante, interpreter, and erstwhile mouthpiece forms one of the themes of this witty and entirely engrossing book.
Read 6 tweets
24 May
நீங்கள் படித்த புத்தகத்துக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால் 50 க்கு நீங்கள் பெற்ற மதிப்பெண் எத்தனை?

1. அம்மா வந்தாள்-தி ஜானகிராமன்
2. அவமானம் - சதத் ஹசன் மண்டோ
3.  அறம் – ஜெயமோகன்
4.  ஆயிஷா - இரா.நடராசன்
5.  இந்தியாவில் சாதிகள்- DR.AMBEDKAR
6.  இரும்பு குதிரைகள்- பாலகுமாரன்
7. உடைந்த நிலாக்கள்- பா.விஜய்
8. எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் -மருதன்
9. என் இனிய இயந்திரா- சுஜாதா
10. ஒரு புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி
11. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
12. கடல் புறா -சாண்டில்யன்
13. கருவாச்சி காவியம் –வைரமுத்து
14. கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
15. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி
16. கள்ளிக்காட்டு இதிகாசம்–வைரமுத்து
17. கற்றதும் பெற்றதும்- சுஜாதா
18. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம்
19. காவல் கோட்டம்- சு.வெங்கடேசன்
20. கி.மு கி.பி –மதன்
Read 8 tweets
23 May
Tell me how many points you score. One point to each series you have watched.

1.13 reasons why
2.Arrow
3.Behind her eyes
4.Better call Saul
5.Bodyguard
6.Breaking Bad
7.Bridgerton
8.Cursed
9.Daredevil
10.Dark
11.Defenders
12.Delhi crime
13.Designated Survivor
14.Dexter
15.Emily in Paris
16.Flash
17.Friends
18.Game of thrones
19.Glitch
20.Grey’s anatomy
21.Haunting of Bly manor
22.Haunting of Hill House
23.House of cards
24.How to get away with murder
25.Ironfist
26.Lock and Key
27.Lost
28.Lucifer
29.Money Heist
30.Never have I ever
Read 5 tweets
21 May
வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும்.
சமணமதம் என்றால், ஜைனமதத்துக்கு மட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும்
என்றாலும் பெரும்பாலும் சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
Read 7 tweets
21 May
'நீலிக் கண்ணீர்'  மற்றொரு விளக்கம் 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லில்  வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?
பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது
' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(