அடுத்த வாரம் ஒரு Twitter Space போடணும். குறும்படம் எடுக்கும் போது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பத்தி பேசலாம்னு ஒரு எண்ணம் (முக்கால்வாசி நகைச்சுவை அனுபவங்கள் தான்). அது போக Zero budget'ல Shortfilm எடுக்குறது பத்தியும் பேசலாம்னு நினைக்கிறேன்.
எங்களோட முதல் குறும்படம் சரியா 10 வருசத்துக்கு முன்னால வந்தது. என்னோட கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்கள் மட்டும் வச்சு timepass'ஆ தான் எடுத்தோம் இந்தப் படத்த. ஆனா, நாங்களே நினைக்காத அளவுக்கு இதுக்கு reach கிடைச்சுச்சு!
இந்தக் குறும்படத்துக்கு நாங்க Teaser, Deleted scenes, Story discussion video'ன்னு வேற சில வீடியோக்கள வெளியிட்டு காமெடி பண்ணுனோம். குறும்படம் எடுக்குற க்கு கொஞ்சம் குறும்பு அதிகம் தான்!
Bengaluru shortfilm deleted scenes -
அப்பெல்லாம் Tweetup'ன்னு ஒரு கலாச்சாரம் இருந்துச்சு. அதுல தொடர்ந்து பெங்களூர்ல நிறைய கீச்சர்கள சந்திச்சேன். சரி, இவங்களையெல்லாம் சேர்த்து ஒரு குறும்படம் பண்ணுவோம்னு ஒரு சிந்தனை வந்துச்சு. அப்படி எடுத்த படம் தான் "உடன்பிறப்புகளே"!
இந்தப் படத்தையும் ஒரு Mega tweetup'ல தான் release பண்ணோம். இந்தப் படத்துக்கும் அப்ப ஏகப்பட்ட அலும்பு பண்ணிருக்கோம். Trailer, Official release update video, Bloopers எல்லாம் போட்டிருக்கோம் இந்தப் படத்துக்கு!
"உடன்பிறப்புகளே" Bloopers -
அதுக்கப்பறம் கொஞ்சம் serious mode'ல ஒரு குறும்படம் எடுக்கணும்னு தோணுச்சு. அதோட விளைவு தான் "திருப்பம்" குறும்படம். இதுக்கடுத்து இப்ப வரைக்கும் குறும்படம் எடுக்குறதுக்கு நேரமோ சூழ்நிலையோ கூடி வரல!
இதுக்கு நடுவுல @iamkarki 'யோட making'ல ஒரு குறும்படத்துல இரண்டு வேடங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சத்து. இதுல நெறய learning'உம் கிடைச்சது நிறையா நகைச்சுவையான அனுபவங்களும் கிடைச்சது!
அப்பறம் இலங்கைல ஒரு குறும்படம் எடுக்குற group என்னைய ஒரு romcom கதை எழுத சொல்லிக் கேட்டாங்க. அந்த அனுபவம் எனக்கு புதுசா இருந்துச்சு. அவங்க என்னோட கதைல எடுத்த குறும்படம் - "கில்லாடி காதல்"
இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றேன்னா இந்தக் குறும்படங்கள்ல involve ஆன ஆளுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து Twitter space'ல பட்டறையைப் போடப் போறோம். நீங்களும் வந்து entertainment'ல கலந்துக்கோங்க!
#PrimeVideo - Contagion (2011) - #ArivomPrime#அறிவோம்திரை - Medical/Suspense/Thriller. இப்ப Corona Virus'ன்னால நடக்குற பல உண்மை நிகழ்வுகள் 9 ஆண்டுகளுக்கு முன்னாடி வெளிவந்த இந்தப் படத்துல அங்கங்க அப்படியே ஒத்துப்போகுது! ஆன்னா, அப்பப்ப documentary feel'உம் வருது!
#PrimeVideo - Searching - #ArivomPrime#அறிவோம்திரை - Suspense/Thriller. இந்தப் படத்தை சந்துல ஏற்கனவே நிறைய அலசிட்டாங்க. இந்தப் படத்தோட திரைக்கதை ரொம்ப அருமை. Digital screens மட்டுமே பயன்படுத்தி கதை சொல்வது செம்ம creativity!!! 👍👌
#Netflix - "10 Cloverfield Lane" - இது கொஞ்சம் வித்தியாசமான Thriller. முடிவு தான் கொஞ்சம் சொதப்பல். சொதப்பல தவிர்த்திருந்தா இது ஒரு அருமையான படம்! #ArivomNetflix#அறிவோம்திரை
#Netflix - Looper - இது ஒரு Time Loop படம். எனக்கு இது கொஞ்சம் predictable'ஆ இருந்துச்சு. ஆகா-ஓகோன்னு வெளில பேசிக்கிற அளவுக்கு இல்ல. ஆனாலும் பாக்கலாம்! #ArivomNetflix#அறிவோம்திரை