Netflix மாதிரி Amazon Prime'க்கும் ஒரு thread போட்டுருவோம்! #ArivomPrime #அறிவோம்திரை 😛
#PrimeVideo - Contagion (2011) - #ArivomPrime #அறிவோம்திரை - Medical/Suspense/Thriller. இப்ப Corona Virus'ன்னால நடக்குற பல உண்மை நிகழ்வுகள் 9 ஆண்டுகளுக்கு முன்னாடி வெளிவந்த இந்தப் படத்துல அங்கங்க அப்படியே ஒத்துப்போகுது! ஆன்னா, அப்பப்ப documentary feel'உம் வருது! Image
#PrimeVideo - Searching - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Thriller. இந்தப் படத்தை சந்துல ஏற்கனவே நிறைய அலசிட்டாங்க. இந்தப் படத்தோட திரைக்கதை ரொம்ப அருமை. Digital screens மட்டுமே பயன்படுத்தி கதை சொல்வது செம்ம creativity!!! 👍👌 Image
#PrimeVideo - Tumbbad (Hindi) - #ArivomPrime #அறிவோம்திரை - Horror. இது ஒரு வித்தியாசமான horror படம். ஒளிப்பதிவு அருமையா இருக்கும். ரொம்ப ரொம்ப சாதாரண கதை தான். பெரிய திருப்பங்களும் கிடையாது திகிலும் நிறைய இல்ல. ஆனாலும் கொஞ்சம் கூட சலிக்காது! Image
#PrimeVideo - Vellai Pookkal - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. படம் முடியிற வரைக்கும் தொடர்ந்து யூகிக்க வச்சுட்டே இருந்துச்சு. படம் முடியும் போது யாரும் எதிர்பார்க்காத மாதிரி ஒரு பெரிய திருப்பமும் இருந்துச்சு. Good thriller! Image
#PrimeVideo - Jiivi (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Mystery/Thriller. இந்தப் படம் பத்தியும் நிறைய பேர் ஏற்கனவே பேசிட்டாங்க. திரைக்கதையும் வசனமும் தான் இந்தப் படத்தோட பலமே. படம் முடியுற வரைக்கும் சின்ன சின்ன திருப்பங்கள் இருந்துட்டே இருக்கும்.👍 Image
#PrimeVideo - Jallikkattu (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Eccentric genre. இது இந்த மாதிரி படம்னு வகைப்படுத்த முடியல. ஒளிப்பதிவும் இசையும் கலக்கல். Cult classic. புடிச்சவங்களுக்கு ரொம்ப புடிக்கும் புடிக்காதவங்களுக்கு புடிக்கவே புடிக்காது! Image
#PrimeVideo - The Prestige - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense. என் பார்வைல Nolan'ஓட best படம் இது தான். திரைக்கதை ரொம்ப அருமையா இருக்கும். படம் கொஞ்சம் கூட தொய்வேயில்லாம நகரும். 👌 Image
#PrimeVideo - A beautiful mind - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. Game theory'ல வர்ற Nash equilibrium கண்டுபிடிச்ச Nobel prize வாங்குன அறிவியலாளர் John Nash அவரோட உண்மைக்கதை. அவருக்கு ஒரு mental disorder இருந்துச்சு! Image
#PrimeVideo - Fight Club - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Thriller. நிறைய பேருக்கு இந்தப் படம் பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஓரளவுக்கு ஊகிக்கிற மாதிரி தான் திருப்பம் இருக்கும். ஆனாலும் திரைக்கதை சுவாரசியமா இருக்கும்! Image
#PrimeVideo - The Italian Job - #ArivomPrime #அறிவோம்திரை - Heist/Action/Thriller. நல்ல பொழுதுபோக்கான ஒரு action படம்! Image
#PrimeVideo - Parasite (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Drama. முதல் பாதி படத்துல நிறையவே கருப்பு நகைச்சுவைகள் நிறைஞ்சிருக்கு. சில காட்சிகள் ரொம்பவே சுவாரசியமா இருக்கு. நேரம் போனதே தெரியல. படம் முடிவு கிட்ட நடக்குற சில விஷயங்கள் எல்லாருக்குமே பிடிக்குமான்னு தெரியல! Image
#PrimeVideo - Chef - #ArivomPrime #அறிவோம்திரை - Dramedy. சமையல் சாப்பாடு புடிச்சவங்களுக்கு படம் பிடிக்கும். தோத்து போயி அவமானப்பட்டு பின்னாடி ஜெயிக்கிற template கதைகள் பிடிச்சவங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். குடும்பத்தோட பார்க்கலாம்! Image
#PrimeVideo - Room (2015) - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Drama. ஓர் அறைக்குள்ள அடைப்பட்ட வாழ்க்கை கொடுமையானது. அதுல இருந்து ஒரு நாள் விடுதலை கிடைச்சாலும் உளவியல் பாதிப்புகள் மீள நிறைய நாட்கள் ஆகும். அருமையான உளவியல் படம்! 👌😇 Image
#PrimeVideo - Prisoners - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Mystery/Drama/Thriller. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வேயில்லாம போகுது. காட்சிகள் மெதுவா நகர்ந்தாலும் திரைக்கதைல விறுவிறுப்பு குறையல. பதட்டம் நிறைந்த காட்சிகள் நிறைய இருக்கு! 👌👌👌 Image
#PrimeVideo - The Man From Earth - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Drama. படம் முழுக்க ஒரு அறைக்குள்ள தான் நடக்கும். ஆனா, மிகவும் சுவாரசியமான உரையாடல்களால நேரம் போறதே தெரியாது. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்! Must watch 👍 Image
#PrimeVideo - Minority Report - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Action/Mystery/Suspense/Thriller. கதையும் திரைக்கதையும் செம்ம சுவாரசியமா இருக்கும். Futuristic world'ல நடக்குற கதை இது. நல்ல பொழுதுபோக்கான படம்! Tom Cruise movie! 👌👌👌 Image
#PrimeVideo - Edge of tomorrow (2014) - #ArivomPrime #அறிவோம்திரை - Sci-fi/Adventure/Fantasy/Action/Thriller. தனிதனியா ஒரு war movie, ஒரு alien movie, ஒரு time-loop movie பாக்குறதுக்கு பதிலா இந்த ஒரு படத்த பார்க்கலாம்! Good timepass! 👌👌👌 Image
#PrimeVideo - Moonlight - #ArivomPrime #அறிவோம்திரை - Drama/LGBT. 'கருப்பர்கள்' மட்டுமே நிறைந்த கதை. ஓரினச்சேர்க்கை மாதிரி ஒடுக்கப்பட்ட நிலைல இருக்கவங்களோட அவ்வளவா சொல்லப்படாத கதை. ரொம்ப மெதுவா நகரும். பொறுமை தேவை! Image
#PrimeVideo - Mad Max Fury Road - #ArivomPrime #அறிவோம்திரை - Action/Thriller. படம் முழுக்க chasing scenes தான். வித விதமான சண்டைக்கருவிகள் பார்க்கலாம். அதே நேரத்துல கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையும் இருக்கு. High octane action fans will love it! 👌 Image
#PrimeVideo - City of God (Spanish) - #ArivomPrime #அறிவோம்திரை - Gangwar/Action/Suspense/Thriller. எப்படி gang உருவாகுது, அவங்களுக்குள்ள எப்படி gangwar ஆரம்பிக்கிது, எதுமே புரியாம உள்ள நுழைஞ்சு சாகுறவங்க யாரு, இதெல்லாத்துலையும் லாபம் யாருக்குன்னு செம்மையா காட்டிருக்காங்க! 👌 Image
#PrimeVideo - Crawl - #ArivomPrime #அறிவோம்திரை - Creature/Horror/Drama. அங்கங்க சின்ன சின்ன jumpscares இருக்கு. Weekend பொழுதுபோக்கா பார்த்து enjoy பண்ணலாம்! 👍 Image
#PrimeVideo - Shakuntala Devi (Hindi) - #ArivomPrime #அறிவோம்திரை - Biography/Dramedy. கணித மேதை சகுந்தலா தேவியோட கதை இது. திரைக்கதை சுவாரசியமா இருக்கு. நிறைய காட்சிகள் family drama தான். Eccentric character! Image
#PrimeVideo - The wailing (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Mystery. திகில் காட்சில இருக்க கூடாது; கதைல இருக்கணும். அப்படி பார்த்தா இந்தப் படம் ஒரு நல்ல திகில் படம்னு சொல்லலாம். முடிவுக்கு சரியான விளக்கம் இல்லாததால இதுக்கு நிறைய interpretations வரும்! 👍 Image
#PrimeVideo - Loving Vincent - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. படத்துல ஒவ்வொரு frame'மும் painting மாதிரி இருந்துச்சுன்னு இந்தப் படத்துக்கு சொல்லலாம். ஏன்னா ஒவ்வொரு frame'மும் உண்மையிலேயே oil painting'ஆல பண்ணிருக்காங்க. சுவாரசியமான திரைக்கதை. நல்ல experience! 👌👌👌 Image
#PrimeVideo - HIT The First Case (Telugu) - #ArivomPrime #அறிவோம்திரை - Crime/Mystery/Thriller/Suspense. நிறைய சுவாரசியமான காட்சிகள் இருக்கு. முதல் பாதி படம் ரொம்ப மெதுவா நகர்ந்தாலும் என்ன நடக்கப் போகுதுன்னு ஒரு ஆர்வம் இருந்துட்டே தான் இருந்துச்சு. ஆனா, Climax கொஞ்சம் சொதப்பல்! Image
#PrimeVideo - Doctor Sleep - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Horror. இது ஒரு மாதிரி dark themed படம். காட்சிகளை விட திரைக்கதைல திகில் இருக்கு. படம் முடிஞ்ச பிறகும் அதோட பாதிப்பு கொஞ்ச நேரம் இருக்கும். கதை மெதுவா நகரும். எல்லாருக்கும் இந்த மாதிரி படம் பிடிக்காது! Image
#PrimeVideo - Baaram - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Drama. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்புல வந்த படம். இந்தப் படத்துல காட்டப்பட்டிருக்க நிகழ்வு நிறைய சிற்றூர்கள்ல உண்மையிலேயே நடக்குறது தான். ஆனா நிறைய பேருக்கு தெரியாது. எந்தப் படத்துலயும் காட்டினதாவும்எனக்கு ஞாபகம் இல்ல!👍 Image
#PrimeVideo - Kung fu Panda - #ArivomPrime #அறிவோம்திரை - Animation/Dramedy. சின்ன பசங்க விரும்பி பாக்குற மாதிரி விசயங்களும் இருக்கு... பெரியவங்களுக்கு ஏத்த வசனங்களும் தத்துவமும் இருக்கு... 90 நிமிசத்துக்கு கொஞ்சம் கூட bore அடிக்காம நல்ல timepass! 👌 Image
#PrimeVideo - Kalidas (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Thriller. தமிழ்ப் படங்கள்ல வெளிவந்ததிலேயே ரொம்ப வித்தியாசமான cop thriller movie இது தான். Hero ஒரு police. ஆனா, அவருக்கு ஒரு fight scene கூட இல்ல! 👍 Image
#PrimeVideo - Lights Out - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Thriller/Drama. மொத்தமே 80 நிமிசம் தான் படம். அதனால கதையை படபடன்னு சொல்லுறாங்க. உள்ள இருக்க drama portions எடுபடல. அங்கங்க jumpscares நல்லா இருந்துச்சு. ஓரளவுக்கு திகிலான படம் தான்! Above average! Image
#PrimeVideo - Android Kunjappan Ver 5.25 (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Comedy/Drama. ரொம்ப இயல்பான அழகான படம். மனித உணர்வுகள் பத்தி நிறைய பேசிருக்காங்க ஒரு ரோபோட் மூலமா. தந்தை மகன் உறவை படத்துல நல்லா காட்டிருக்காங்க! 👍 Image
#PrimeVideo - Burning (Korean) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. இது ஒரு open interpretation movie. அதாவது இந்தக் கதைய பலவிதமா புரிஞ்சுக்கலாம். கதை ரொம்ப மெதுவா நகர்ந்தாலும் திரைக்கதை சுவாரசியமா இருக்கு. Good one! 👌 Image
#PrimeVideo - Kavaludaari (Kannada) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Crime/Thriller. திரைக்கதை மெதுவா நகர்ந்தாலும் அடுத்து என்ன நடக்கும்ன்னு நம்மள தொடர்ந்து யோசிக்க வைக்குது. படம் முடிவு கிட்ட நிறைய திருப்பங்கள் இருக்கு. நல்ல thriller! 👍 Image
#PrimeVideo - Donnie Darko - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Thriller/Scifi/Fantasy. ரொம்ப குழப்பமான கதை. இந்தக் கதைக்கு நிறைய interprettations இருக்கு. கதை பல கோணங்கள்ல நகர்றதால மெதுவா போனாலும் சுவாரசியமா இருக்கு! Image
#PrimeVideo - Blue Ruin - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Revenge/Thriller. ரொம்ப நேரான கதை தான். மெதுவா நகர்ற திரைக்கதை தான் இந்தப் படத்துக்கு பலமே. அது தான் ஒவ்வொரு காட்சிலயும் பதட்டடத்த கூட்டுது! Image
#PrimeVideo - Drishyam 2 (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Drama. ஒரு வெற்றியடைஞ்ச படத்துக்கு 2nd part வந்தா பெரும்பாலும் முதல் பாகத்தோட எதிர்பார்ப்பை தரமுடியாததால தோல்வியடையும். ஆனா, இங்க கிட்டத்தட்ட முதல் பாகம் அளவுக்கு செம்ம சுவாரசியமான திரைக்கதை. 👌👌👌 Image
#PrimeVideo - Godzilla, King of monsters - #ArivomPrime #அறிவோம்திரை - Creature/Fantasy. இந்த மாதிரி படங்கள்ல எல்லாமே ரொம்ப மிகையா இருக்கும். ஏகப்பட்ட mass scenes இருக்கும். உணர்ச்சிய ஏத்துற மாதிரி music இருக்கும். அந்த மாதிரி entertainment'க்கு ஏத்த படம் இது! 👍🐉 Image
#PrimeVideo - Unhinged - #ArivomPrime #அறிவோம்திரை - Thriller. இவ்ளோ extreme ஆன character உள்ள ஆள் இருப்பாங்களாங்கறது சந்தேகம் தான். ஆனா, அந்தக் கேள்வியே வரவிடாமச் செய்றது வில்லனோட நடிப்பு! செம்ம engaging thriller! 👍 Image
#PrimeVideo - Andha Naal (1954) - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Suspense/Thriller. இது வெளிவந்த காலத்துல கண்டிப்பா ரொம்ப புதுமையான படம் தான். கதை சொல்லும் விதம் ரொம்ப புதுமையா இருக்கும். வசனங்கள் நிறைய பேசுவது மாதிரி இருந்தாலும் காலத்தை தாண்டி நிக்கிற படம் தான் இது! 👍 Image
#PrimeVideo - The Babadook - #ArivomPrime #அறிவோம்திரை - Mystery/Psychological/Horror/Drama. இந்தப் படத்துல jumpscares இல்ல. ஆனாலும், ஒரு சில scenes பதட்டமா இருந்துச்சு. ஆனா, ரொம்ப மெதுவா நகரும் கதை. குறியீடுகள் நிறைய இருக்கு. Image
#PrimeVideo - Tenet - #ArivomPrime #அறிவோம்திரை - Scifi/Adventure/Action. கதைய முழுசா புரிஞ்சுதா அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு. பார்த்து முடிச்ச பிறகும் யோசிக்க வைக்குது படம். Reverse entropy'ல என்னோட version'அ பார்த்தா இந்த கதைய கேட்டு புரிஞ்சுக்கணும்! Entertaining! Image
#PrimeVideo - Drag Me to Hell - #ArivomPrime #அறிவோம்திரை - Horror/Mystery. பயமுறுத்துற காட்சிகள் இருக்கு, பதட்டமான காட்சிகள் இருக்கு. ஆனா, நிறைய காட்சிகள் disgusting'ஆவும் ஒரு வினோதமான humour ஓடவும் இருக்கு! எதிர்பார்க்காத climax!

primevideo.com/detail/0KZX2YZ… Image
#PrimeVideo - Karnan (Tamil) - #ArivomPrime #அறிவோம்திரை - Drama/Social Issue. ஒரு படத்துல வர்ற நாயகன் வலி உணரும் போது நம்மளும் உணர்ந்தா, கோபம் பீறிட்டு வரும் போது அது நமக்கும் வந்தா அது தான் அந்தப் படத்துக்கு வெற்றி. அந்த மாதிரி ஒரு படம் தான் இது! 👍 Image
#PrimeVideo - Joji (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Suspense/Crime/Thriller/Drama. திரைக்கதையும், இசையும் அருமை. நடிப்பு... சொல்லவே வேணாம். கதை மெதுவா தொடங்கி போக போக பதட்டத்த கூட்டிக்கிட்டே போகுது! Worth watching 👌 Image
#PrimeVideo - Ek Mini Katha (Telugu) - #ArivomPrime #அறிவோம்திரை - Adult Comedy/Drama. உண்மைலயே enjoy பண்ற மாதிரி நிறைய நல்ல நகைச்சுவை காட்சிகள் இருக்கு. நகைச்சுவைன்னு மட்டுமில்லாம கதைல வர்ற meloodramatic காட்சிகளும் நல்லா எழுதப்பட்டுருக்கு. Worth watching! 👌 Image
#PrimeVideo - Nizhal (Malayalam) - #ArivomPrime #அறிவோம்திரை - Psychological/Thriller/Mystery. கதை ஒரு அருமையான line'ல தொடங்குது. ரெண்டு வெவ்வேற கதையை எப்படி இணைக்கப் போறாங்கன்னு ஆவலா பார்த்தா முடிவுல எல்லாத்தையும் சொதப்பிட்டாங்க. Average movie! Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Balaraman

Balaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BalaramanL

11 Jun
அடுத்த வாரம் ஒரு Twitter Space போடணும். குறும்படம் எடுக்கும் போது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பத்தி பேசலாம்னு ஒரு எண்ணம் (முக்கால்வாசி நகைச்சுவை அனுபவங்கள் தான்). அது போக Zero budget'ல Shortfilm எடுக்குறது பத்தியும் பேசலாம்னு நினைக்கிறேன்.
எங்களோட முதல் குறும்படம் சரியா 10 வருசத்துக்கு முன்னால வந்தது. என்னோட கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்கள் மட்டும் வச்சு timepass'ஆ தான் எடுத்தோம் இந்தப் படத்த. ஆனா, நாங்களே நினைக்காத அளவுக்கு இதுக்கு reach கிடைச்சுச்சு!

இந்தக் குறும்படத்துக்கு நாங்க Teaser, Deleted scenes, Story discussion video'ன்னு வேற சில வீடியோக்கள வெளியிட்டு காமெடி பண்ணுனோம். குறும்படம் எடுக்குற க்கு கொஞ்சம் குறும்பு அதிகம் தான்!

Bengaluru shortfilm deleted scenes -
Read 12 tweets
13 Dec 18
நேத்து #Netflix'ல Nightcrawler'ன்னு ஒரு படம் பார்த்தேன். செம Crime Drama. Worth watching! 👌

#ArivomNetflix #ArivomPadangal 😎
#Netflix - "10 Cloverfield Lane" - இது கொஞ்சம் வித்தியாசமான Thriller. முடிவு தான் கொஞ்சம் சொதப்பல். சொதப்பல தவிர்த்திருந்தா இது ஒரு அருமையான படம்! #ArivomNetflix #அறிவோம்திரை
#Netflix - Looper - இது ஒரு Time Loop படம். எனக்கு இது கொஞ்சம் predictable'ஆ இருந்துச்சு. ஆகா-ஓகோன்னு வெளில பேசிக்கிற அளவுக்கு இல்ல. ஆனாலும் பாக்கலாம்! #ArivomNetflix #அறிவோம்திரை
Read 52 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(