#TheFamilyManSeason2#actionthriller
2019ஆம் ஆண்டு வெளிவந்த "The Family Man" சீசன் ஒன்று தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து மும்பையில் மக்களை கொல்ல திட்டம் தீட்டுவது போலவும் அதை தடுக்க மனோஜ் பாஜ்பாய் தலைமையிலான குழு களம் இறங்குவது போலவும் கதை அமைத்திருப்பார்கள்.ஒன்றாம் சீசன்
பரபரக்கும் பட்டாசாய் வெடிக்கும்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்றே காமித்திருப்பார்கள்.அப்பொழுதே பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன.இந்நிலையில் இன்று இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது.டிரெய்லர் வெளிவந்த பொழுது தமிழர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிதிருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளானது
வெளியிட கூடாது என்று தடை கோரினார்கள் பல்வேறு அமைப்பினர்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இன்று வெளியாகி இருக்கிறது.கதை சுருக்கம்:இலங்கையில் ராணுவம் தாக்குதல் நடத்த அதில் இருந்து தமிழீழ தலைவர் மைம் கோபி,அழகம் பெருமாள் மற்றும் மைம் கோபியின் தம்பி தப்பி தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
இங்கு வந்து இங்கு இருக்கும் எம் எல் ஏ ஒருவரை சந்தித்து தமிழ் ஈழம் அமைய குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.இதை அறியும் இலங்கையின் ஜனாதிபதி அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார். சீனா இலங்கையில் தளம் அமைக்கும் முயற்சியில்
ஈடுபடுகிறது.அப்படி நடந்தால் அது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும் என்று இந்திய எண்ணுகிறது.இதை அனுமதிக்க கூடாது என்று இலங்கையின் ஜனாதிபதி இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார்.ஈழ தலைவர்களை ஒப்படைத்தால் சீனா இலங்கையில் தளம் அமைப்பதை தடுக்கிறோம் என்று கூறுகிறார்.அரசியல் லாபம்
காரணமாக இதற்கு இந்திய பிரதமர் ஒப்புக்கொள்கிறார்.மைம் கோபி மற்றும் அழகம்பெருமாள் வெளிநாட்டில் இருக்க மைம் கோபியின் தம்பி சென்னையில் இருக்கிறார்.அதனால் அவரை பிடிக்க ஒன்றிய அரசாங்கம் முயல்கிறது.திட்டத்தின் படி அவரை பிடிக்கிறது.அடுத்த நாள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழுது குண்டு
வெடித்து இருக்கிறார்.இதனால் கோபமுறும் மைம் கோபி பிரதமரை கொல்ல திட்டம் தீட்டுகிறார்.பிரதமரை கொன்றார்களா?ஈழ தலைவர்கள் என்ன ஆனார்கள்?இதில் சமந்தாவின் பங்கு என்ன? இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.மொத்தம் 9 எபிசோட்.7 மணி நேரம் ஓடுகிறது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழ் மற்றும்
தெலுங்கு மொழிகளில் வெளியிடவில்லை.முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் அருமையாக இருக்கிறது.பிரியாமணி மற்றும் அவர் பணி செய்யும் அலுவலக காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது.இதை தவிர்த்து எங்கேயும் சலிப்பு தட்டவில்லை.இந்த தொடர் மும்பையில் இருந்து சென்னை வருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் கிட்டத்தட்ட தொடரின் வசனங்கள் 60 சதவீதம் தமிழில் இருக்கிறது.30 சதவீதம் ஹிந்தியிலும் 10 சதவீதம் ஆங்கிலத்திலும் இருக்கிறது.தமிழ் நடிகர்கள் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள்.முக்கியமாக தேவதர்ஷினி,மைம் கோபி, அழகம்பெருமாள் ஆகியோர்க்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.தமிழர்கள்
வட இந்தியர்களை எப்படி பார்க்கிறார்கள்,வட இந்தியர்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்று திரைக்கதையில் காட்டியிருக்கிறார்கள்.வட இந்தியர்கள் தமிழர்களை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பொழுதெல்லாம் அதற்கு பதிலடி தரும் விதமாக காட்சியமைப்பு இருப்பது பாராட்டத்தக்கது.தமிழ் மொழி மற்றும்
தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.சமந்தா நடிப்பில் தெரிக்கவிடுகிறார்.அவர் விடுதலை புலிகள் அமைப்பு சேர்ந்தவராக இருப்பதால் அவரை கருப்பாக காட்டியிருப்பது என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை.சண்டை காட்சியில் வெறித்தனம் காட்டியிருக்கிறார்.
பின்னணி இசை தரமாக இருக்கிறது.முதல் எபிசோடின் இறுதியில் வரும் பாடல் தமிழில் இருக்கிறது.அது கேட்க நன்றாக இருக்கிறது.9 எபிசோடில் பாதிக்கு பாதி எபிசோட் பாடல் தமிழில் இருப்பது சிறப்பு.இப்பொழுது முக்கியான விஷயத்திற்கு வருவோம்.விடுதலை புலிகள் ISIS பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து இந்திய
பிரதமரை கொல்ல முயற்சிப்பது போன்ற திரைக்கதை முட்டாள்தனத்தின் உச்சம்.ஈழ ஆதரவாளர்கள் மற்றும் விடுதலை புலிகள் தீவிரவாதிகள் போன்றே சித்தரித்திருக்கிறார்கள். அதிலும் தன் இயக்கத்தின் குறிக்கோள் நிறைவேற சமந்தா சில நபர்களுடன் உறவு வைத்துகொள்வது போன்ற காட்சிகள் என்னவென்று சொல்வது?
குறிக்கோள் நிறைவேற எந்த எல்லை வரை செல்வார்கள் என்று முடிவு செய்து இவ்வாறு காட்சி அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.அதே சமயம் ஒன்றிய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களின் உணர்ச்சிகளோடு மற்றும் விடுதலை புலிகளை பலிகடா ஆக்குவது மற்றும் புலனாய்வு துறையினரை
வசதிக்கேற்ப பயன்படுத்துவது என்று வரும் காட்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.மனோஜ் பாஜ்பாய் அருமையான நடிப்பு,பிரியாமணி வரும் சில கட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டது போல் உள்ளது.மற்றபடி அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.விடுதலை புலிகளுக்கு பிரான்ஸ்
மற்றும் இங்கிலாந்து அரசாங்கம் ஆதரவு தெரிவிப்பது போன்ற சில நல்ல விஷயங்களையும் வைத்திருக்கிறார்கள்.தொடராக பார்க்கும் பொழுது அருமையான வெப் தொடர்.ஆனால் விடுதலை புலிகளை ISIS அமைப்பினருடன் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது உண்மையாகவே கோபப்படக்கூடிய ஒன்று.மூன்றாம் பாகம் அருணாச்சல பிரதேச
மாநிலத்தில் ஆரம்பிப்பது போல வைத்திருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகள்,இரத்தம் தெறிக்கும் காட்சிகள்,ஆபாச காட்சிகள் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது.தொடரின் லிங்க் எனது பயோவில் உள்ளது.இணைந்து கொள்ளவும்.அடுத்து "Conjuring 3" படத்தின் விமர்சனத்தில் சந்திப்போம்.நன்றி!வணக்கம்!
#asimplemurder ஜாலியாக சிரித்துகொண்டே பார்க்கக்கூடிய ஒரு அருமையான "காமெடி மர்டர் திரில்லர்" தான் இந்த வெப் சீரியஸ்.ஹீரோ முகமது அயூப்,"Mirzapur","Inside Edge","Hostages","Kathmandu Connection" போன்ற வெப் தொடர்களில் கலக்கிய அமித் சியால்,நம்ம ஊரு ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.கதை சுருக்கம்:ஹீரோ வேலை எதுவும் இல்லாமல் ஒர் கம்பெனி தொடங்க வேண்டும் என்று பலரிடம் முதலீடு செய்ய கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஹீரோயின் பிரியா ஆனந்த் அவர் மனைவி.இவருக்கு கோடிகளில் புரள வேண்டும் என ஆசை.இதனால் இவர் பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளியுடம் கள்ள
தொடர்பு வைத்திருக்கிறார்.ஒரு நாள் ஹீரோவுக்கு முதலீடு செய்கிறேன் என்று ஒரு அழைக்கிறார்.இவரும் அங்கு செல்ல ஒரு சிறிய நிகழ்வால் முகவரி மாறி சென்றுவிடுகிறார்.அங்கு சென்றதும் ஒரு சாமியார் 5 லட்சம் ஒரு துப்பாக்கி ஒரு ஃபோட்டோ கொடுத்து அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணின் கதையை
"The Con Artists(2014)" ,- "Heist Action Thriller".கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களை யூகிக்க முடியாத டிவிஸ்டுகளுடன் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும்.ஹீரோவும் அவன் மாமாவும் அடிப்படையாக திரமைவாய்ந்த திருடர்கள்.ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தில்
நுழைந்து ஒரு விலையுயர்ந்த சிலையை திருடிக்கொண்டு வருகிறார் ஹீரோ.ஆனால் பாதுகாவலர்கள் துரத்தும் பொழுது அந்த சிலை உடைந்துவிடுவதால் அதே போன்று 3D பிரின்டிங் செய்யப்பட்ட சிலையை செய்து விற்க முயல்கின்றனர்.ஆனால் வாங்குபவர் இது போலி என கண்டுபிடிக்க "இது போல் நீ பல போலி சிலையை ஏலத்தில்
விட்டிருக்கிறாய்.எனவே இதை விற்றுகொடு என மிரட்டுகின்றனர்.அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் இருக்கும் விலையுயர்ந்த டைமண்ட் கற்களை திருட முயல்கிறார்கள்.அதனால் கண்காட்சியில் அறிமுகமான ஹீரோயினை அழைத்துகொண்டு நகைகடைக்கு செல்கிறார்.கேமரா எவ்வளவு இருக்கிறது,வழிகள் என்ன என்ன இருக்கிறது என்பதை
#animalworld#fantasy#gamingthriller
கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு சைனீஸ் ஃபேண்டஸி கம் கேமிங் த்ரில்லராக வெளிவந்த படம் தான் இந்த "அனிமல் வேர்ல்ட்".கதை:ஹீரோ ஒரு மாலில் இருக்கும் ஃபன் சிட்டியின் முன்பு ஜோக்கர் வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வேலையை செய்கிறார்.அவரது அம்மா கோமா
நிலையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.அங்கு பணிபுரியும் ஒரு செவிலியர் ஹீரோ காதலிக்கிறார்.அம்மாவின் மருத்துவ செலவை பாதி காப்பீட்டு நிறுவனமும் பாதி ஹீரோவின் காதலியான செவிலியர் பார்த்து கொள்கிறார்.ஒரு நாள் ஹீரோவின் நண்பர் அவரிடம் வந்து "தன்னுடைய முதலாளியின் வீடு விற்பனைக்கு
வர உள்ளது.12 மில்லியன் மதிப்புள்ள வீட்டை உடனடி தேவைக்காக 6 மில்லியனிற்கு விற்க உள்ளர்.எனவே என்னிடம் சிறிய பணம் தான் உள்ளது.உன் அம்மாவின் பெயரில் இருக்கும் வீட்டை அடகு வைத்து பணம் தந்தால்,முதலாளியின் வீட்டை வாங்கி விற்று வரும் லாபத்தில் பாதி தருவதாக கூறுகிறார்".முதலில் வேண்டாம்
#OperationAlamelamma 2017ஆம் ஆண்டு ஒரு கன்னட காமெடி த்ரில்லராக வெளிவந்த படம் தான் "ஆபரேஷன் அலமேலம்மா".கதை என்னவென்றால் ஹீரோவுக்கு பிராண்டட் பொருட்கள் மீது மோகம்.பிராண்டட் பொருட்கள் அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை
செய்கிறார்.ஹீரோ ரிஷி காய்கறி ஏலம் விடுபராக வேலை செய்கிறார்.ஒரு நாள் ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு கடையில் ஒரு ஆடை திருடுவதை பார்த்து பின்தொடர்கிறார்.அவர் வீட்டிற்க்கு வந்து இதை ஹீரோயினிடம் கூறுகிறார்.வெளியில் சொல்லாமல் இருக்க ஒரு கப் காபி சாப்பிட அழைக்கிறார்.இப்படியே இருவரும்
காதலிக்கிறார்கள்.அந்த பக்கம் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகனை ஒரு கும்பல் கடத்துகிறது.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறது.அந்த பையை ஒரு ரவுண்டானாவில் வைக்க சொல்ல மகனின் தந்தை அதை அங்கு வைக்க போலீஸ் அதை கண்காணிக்கிறது.ஹீரோ அந்த பையை பார்க்கிறார்.அது பிராண்டட் பை என்பதால் எடுக்க