#asimplemurder ஜாலியாக சிரித்துகொண்டே பார்க்கக்கூடிய ஒரு அருமையான "காமெடி மர்டர் திரில்லர்" தான் இந்த வெப் சீரியஸ்.ஹீரோ முகமது அயூப்,"Mirzapur","Inside Edge","Hostages","Kathmandu Connection" போன்ற வெப் தொடர்களில் கலக்கிய அமித் சியால்,நம்ம ஊரு ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.கதை சுருக்கம்:ஹீரோ வேலை எதுவும் இல்லாமல் ஒர் கம்பெனி தொடங்க வேண்டும் என்று பலரிடம் முதலீடு செய்ய கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஹீரோயின் பிரியா ஆனந்த் அவர் மனைவி.இவருக்கு கோடிகளில் புரள வேண்டும் என ஆசை.இதனால் இவர் பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளியுடம் கள்ள
தொடர்பு வைத்திருக்கிறார்.ஒரு நாள் ஹீரோவுக்கு முதலீடு செய்கிறேன் என்று ஒரு அழைக்கிறார்.இவரும் அங்கு செல்ல ஒரு சிறிய நிகழ்வால் முகவரி மாறி சென்றுவிடுகிறார்.அங்கு சென்றதும் ஒரு சாமியார் 5 லட்சம் ஒரு துப்பாக்கி ஒரு ஃபோட்டோ கொடுத்து அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணின் கதையை
முடித்துவிடுமாறு கூறுகிறார்.ஹீரோவுக்கு ஒன்றும் புரியாமல் பணத்தை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் வாங்கிகொண்டு வருகிறார்.வேறு ஒரு நபருக்கு பதில் இவர் அங்கு சென்றது அவருக்கு தெரியவருகிறது.தன்னுடைய மனைவி எப்பொழுதும் தன்னை அசிங்கபடுத்திக்கொண்டே இருப்பதால் அந்த போட்டோவில் இருக்கும்
பெண்ணின் கதையை முடித்துவிட்டு மீது 5 லட்சத்தை வாங்கலாம் என முடிவு செய்கிறார்.வீட்டிற்க்கு சென்ற பின் அந்த போட்டோவை பார்க்கும் பிரியா ஆனந்த் யார் இந்த பெண் என்று கேட்டு சண்டையிட்டு அந்த போட்டோவை கிழித்துவிடுகிறார்.இதனால் போட்டோவின் ஒரு சிறிய பகுதியை வைத்துகொண்டு அந்த பெண்
இருக்கும் முகவரிக்கு செல்கிறார்.ஆனால் முகவரி சரியாக தெரியாத காரணத்தினால் வேறு ஒரு வீட்டிற்க்கு செல்கிறார்.அங்கும் இது போன்ற பெண் இருப்பதால் அபெண்ணை தவறுதலாக கொலை செய்கிறார்.அதுமட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்.இதற்கு பின் என்ன ஆனது?
அந்த பணம் யாருடையது? கொல்ல வேண்டிய பெண்ணை கொலை செய்தார்களா?அந்த பெண் யார்?கடைசியில் ஹீரோ மாட்டினாரா?தொடரில் வரும் திருப்பங்கள் என்னென்ன? என்பதை வெப் தொடரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஹீரோ சென்டிமென்ட் கலந்து செமயாக நடித்திருக்கிறார்.ஹீரோயின் பிரியா ஆனந்த் கதாபாத்திரம்
பார்ப்பவர்களுக்கு "இவளை கொன்றுவிட வேண்டும்" என்று தோன்றும் அளவிற்கு அருமையாக நடித்திருக்கிறார்.இன்னொரு கதாபாத்திரம் அமித் சியால் வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறார்.முக்கியமாக காவல் ஆய்வாளராக வரும் கதாபாத்திரம் நம்மை சிரிக்க வைக்கிறது.அவர் வரும் காட்சிகள் எல்லாம் நம்மை
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.பின்னணி இசை நன்றாக இருக்கிறது.ஒளிப்பதிவும் அருமை.காமெடி,சண்டை காட்சிகள்,சென்டிமென்ட்,காதல் என அனைத்தும் சேர்ந்த கலவையாக இருக்கிறது இந்த வெப் தொடர்.இன்னும் சில கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எபிசோடின் ஆரம்பத்தில்
வரும் அனிமேஷன் காட்சிகள் பார்க்க அருமையாக உள்ளது.மொத்தம் 7 எபிசோடுகள்.மூன்றரை மணி நேரம்.நேரம் போவதே தெரியாமல் சிரித்துகொண்டே மகிழ்ச்சியாக பார்க்க ஒரு அருமையான காமெடி கிரைம் தொடர் இது.கண்டிப்பாக பார்க்கலாம்.கொலைகள்,sila ஆபாச காட்சிகள் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க ஏற்றது அல்ல.
வெப் தொடர் தமிழில் இருக்கிறது.OTT-ZEE 5. வெப் தொடரின் லிங்க் எனது பயோவில் உள்ளது.இணைந்து கொள்ளவும்.அடுத்த படத்தின் விமர்சனத்தில் சந்திப்போம்.நன்றி.வணக்கம்! @Mr_Bai007 @vanhelsing1313 @peru_vaikkala @_Girisuriya7_ @Jeeva_twitz555 @karthick_45 @iam_vikram1686 @saravanan7511

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதுசூதனன் பி சா

மதுசூதனன் பி சா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Madhusoodananpc

4 Jun
#TheFamilyManSeason2 #actionthriller
2019ஆம் ஆண்டு வெளிவந்த "The Family Man" சீசன் ஒன்று தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து மும்பையில் மக்களை கொல்ல திட்டம் தீட்டுவது போலவும் அதை தடுக்க மனோஜ் பாஜ்பாய் தலைமையிலான குழு களம் இறங்குவது போலவும் கதை அமைத்திருப்பார்கள்.ஒன்றாம் சீசன்
பரபரக்கும் பட்டாசாய் வெடிக்கும்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்றே காமித்திருப்பார்கள்.அப்பொழுதே பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன.இந்நிலையில் இன்று இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது.டிரெய்லர் வெளிவந்த பொழுது தமிழர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிதிருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளானது
வெளியிட கூடாது என்று தடை கோரினார்கள் பல்வேறு அமைப்பினர்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இன்று வெளியாகி இருக்கிறது.கதை சுருக்கம்:இலங்கையில் ராணுவம் தாக்குதல் நடத்த அதில் இருந்து தமிழீழ தலைவர் மைம் கோபி,அழகம் பெருமாள் மற்றும் மைம் கோபியின் தம்பி தப்பி தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
Read 19 tweets
3 Jun
"The Con Artists(2014)" ,- "Heist Action Thriller".கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களை யூகிக்க முடியாத டிவிஸ்டுகளுடன் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும்.ஹீரோவும் அவன் மாமாவும் அடிப்படையாக திரமைவாய்ந்த திருடர்கள்.ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தில் Image
நுழைந்து ஒரு விலையுயர்ந்த சிலையை திருடிக்கொண்டு வருகிறார் ஹீரோ.ஆனால் பாதுகாவலர்கள் துரத்தும் பொழுது அந்த சிலை உடைந்துவிடுவதால் அதே போன்று 3D பிரின்டிங் செய்யப்பட்ட சிலையை செய்து விற்க முயல்கின்றனர்.ஆனால் வாங்குபவர் இது போலி என கண்டுபிடிக்க "இது போல் நீ பல போலி சிலையை ஏலத்தில் Image
விட்டிருக்கிறாய்.எனவே இதை விற்றுகொடு என மிரட்டுகின்றனர்.அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் இருக்கும் விலையுயர்ந்த டைமண்ட் கற்களை திருட முயல்கிறார்கள்.அதனால் கண்காட்சியில் அறிமுகமான ஹீரோயினை அழைத்துகொண்டு நகைகடைக்கு செல்கிறார்.கேமரா எவ்வளவு இருக்கிறது,வழிகள் என்ன என்ன இருக்கிறது என்பதை Image
Read 9 tweets
25 May
#animalworld #fantasy #gamingthriller
கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு சைனீஸ் ஃபேண்டஸி கம் கேமிங் த்ரில்லராக வெளிவந்த படம் தான் இந்த "அனிமல் வேர்ல்ட்".கதை:ஹீரோ ஒரு மாலில் இருக்கும் ஃபன் சிட்டியின் முன்பு ஜோக்கர் வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வேலையை செய்கிறார்.அவரது அம்மா கோமா
நிலையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.அங்கு பணிபுரியும் ஒரு செவிலியர் ஹீரோ காதலிக்கிறார்.அம்மாவின் மருத்துவ செலவை பாதி காப்பீட்டு நிறுவனமும் பாதி ஹீரோவின் காதலியான செவிலியர் பார்த்து கொள்கிறார்.ஒரு நாள் ஹீரோவின் நண்பர் அவரிடம் வந்து "தன்னுடைய முதலாளியின் வீடு விற்பனைக்கு
வர உள்ளது.12 மில்லியன் மதிப்புள்ள வீட்டை உடனடி தேவைக்காக 6 மில்லியனிற்கு விற்க உள்ளர்.எனவே என்னிடம் சிறிய பணம் தான் உள்ளது.உன் அம்மாவின் பெயரில் இருக்கும் வீட்டை அடகு வைத்து பணம் தந்தால்,முதலாளியின் வீட்டை வாங்கி விற்று வரும் லாபத்தில் பாதி தருவதாக கூறுகிறார்".முதலில் வேண்டாம்
Read 13 tweets
23 May
#OperationAlamelamma 2017ஆம் ஆண்டு ஒரு கன்னட காமெடி த்ரில்லராக வெளிவந்த படம் தான் "ஆபரேஷன் அலமேலம்மா".கதை என்னவென்றால் ஹீரோவுக்கு பிராண்டட் பொருட்கள் மீது மோகம்.பிராண்டட் பொருட்கள் அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை Image
செய்கிறார்.ஹீரோ ரிஷி காய்கறி ஏலம் விடுபராக வேலை செய்கிறார்.ஒரு நாள் ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு கடையில் ஒரு ஆடை திருடுவதை பார்த்து பின்தொடர்கிறார்.அவர் வீட்டிற்க்கு வந்து இதை ஹீரோயினிடம் கூறுகிறார்.வெளியில் சொல்லாமல் இருக்க ஒரு கப் காபி சாப்பிட அழைக்கிறார்.இப்படியே இருவரும்
காதலிக்கிறார்கள்.அந்த பக்கம் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகனை ஒரு கும்பல் கடத்துகிறது.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறது.அந்த பையை ஒரு ரவுண்டானாவில் வைக்க சொல்ல மகனின் தந்தை அதை அங்கு வைக்க போலீஸ் அதை கண்காணிக்கிறது.ஹீரோ அந்த பையை பார்க்கிறார்.அது பிராண்டட் பை என்பதால் எடுக்க
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(