#BREAKING | ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு; மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி
வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும்; தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி
பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது; மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி
#BREAKING | கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை; கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே போகிறது; பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு; தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை மத்திய அரசு எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி
#தகவல்பலகை | கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து
செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள
தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room –Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்