அமிர்தலிங்கம் இவர் அகிம்சாவாதி.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவர் தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் எடுத்தவர் இவர் சார்ந்த தமிழர் விடுதலை கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.
அவருக்கு முன் எந்த தமிழரும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கு வந்தது இல்லை
1983 ல் தமிழர்க்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்து அந்த பதவியை துறந்தார்.
அமைதிப்படை இலங்கையில் செயல்பட்ட காலத்தில் சிங்கள பிரேமதாசா அதை எதிர்த்தார் .
இந்திய அரசு படை எடுத்து வந்திருப்பதாக சிங்களவர் கருதினர். அதனாலேயே ராஜிவ்வை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கி கட்டையால் தாக்க மூயான்றான். இந்த சூழ்நிலையில் புலிகளும் அமைதி படையை எதிர்த்தனர்
அதேவேளை அமிர்தலிங்கம் அமைதிபடையால் மக்களுக்கு பாதுகாப்பு என்று கருதினார் . மேலும் ராஜிவை
ஜெயவர்தனே ஒப்பந்ததை ஆதரித்தார் புலிகள் அதை ஏற்று இருந்தால் தமிழர்க்கு தனி மாகாணம் கிடைத்து இருக்கும்
இதனிடையே யோகேந்திரன் என்ற அகிம்சாவாதி அரசியல்வாதியுடன் சேர்ந்து எல்லா தமிழ் இயத்தையும் ஒன்றினைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார்.
யோகேந்திரன் புலிகளையும் அனுகினார் தாராளமாக சேர்ந்து செயல்படலாம் என்ற ஆர்வம் காட்டிய புலிகள் பேச்சுவார்த்தைக்கு கொழும்பில் உள்ள அமிர்தலிங்கம் வீட்டுக்கு 3 புலிகள் பிரதிநிதிகளை 13 ஜூலை 1989 அன்று அனுப்பி வைத்தனர் விசு ,சிவகுமார் ,விக்னா என்ற மூவரும் வந்தனர்.
தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் பொழுது சோதனை இட கூடாது அது தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என புலிகள் முன் நிபந்தனை வைத்து இருந்தனர் இவர்களும் தமிழர் நலனுக்காக தானே போராடுகிறார்கள் நம்மளை ஏன் கொல்ல போகிறார்கள் என்று அப்பாவியாக நம்பிய அமிர்தலிங்கமும் , யோகேஸ்வரனும் அவர்களை
சோதனை இட கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டனர்
அவர்கள் வந்து அறையில் பேச்சு வார்த்தையும் நடந்தது
அப்பொழுது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் சுட்டு கொன்றனர்
இவர்கள் வந்ததுமுதலே இவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாவலர் நிஸ்ஸாங்க் உடனே
அறையில் நுழைந்து இவர்கள் மூன்று பேரையும் சுட்டு கொன்றார்
புலிகள் ராஜிவ் கொலையை போலவே இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சாதித்தனர். கொன்றவர்கள் இவர் இயக்க ஆட்கள் என்ற பொழுதும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றனர்
இங்கே 2000 ம் அண்டுக்கு பிறகு புலி ஆதரவு ஆட்கள் இந்த
படுகொலையை மாத்தையா தான் இந்திய உளவுத்துறை திட்டத்தின் படி செய்ததாக சொன்னார்கள்.
இந்த படுகொலை நடந்தது 1989 மாத்தையாவை புலிகள் அமைப்பு துரோக குற்றம் சாட்டியது.
1993 ல் இந்த 4 வருடத்தில் அமைப்பில் என்ன நடக்குதுனு கூட தெரியாமல் பிரபா அப்பாவியாவா இருந்தார்
புலிகள் எப்பொதும் தைரியமாக கொலை செய்வார்கள்.
அது அநியாய படுகொலை என்பதால் ஒத்து கொள்ள தொடை நடுங்குவார்கள். இப்படி பல படுகொலையில் நாடகம் ஆடி உள்ளனர்.
பற்குணம்: புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் துரையப்பா கொலைக்காக தன் தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகையை விற்று பணம் கொடுத்தவர் விடுதலை புலிகளின் மத்திய குழு உறுப்பினர் பிரபாகரனின் சர்வாதிகார நடவடிக்கைகள் பிடிக்காமல் தான் வெளியேற போவதாக
கூறினார்.
அவரிடம் பேச வேண்டும் என புளியங்குளம் முகாமுக்கு வரச் சொல்லிய பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
ஆதாரம்: ஈழ போராட்டத்தில் எனது பதிவுகள் பக்கம் 54
இந்த கொலையை நியாயப்படுத்த இயக்கத்தில் இருந்து பிரிந்தால் கொலை என்பது இயக்க விதி
இதுதான் பிரபாகரன் முன்வைத்த வாதம்
பின்னாலில் கட்சி தலைமை உமா மகேஸ்வரன் கைக்கு சென்றதும் பிரபாகரன் அதை ஏற்க்காமல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து ரெலோ இயக்கத்தில் இணைந்து இரண்டு ஆண்டு செயல்பட்டார்
பற்குணத்துக்கு ஒரு நியாயம் சரி என்றால் பிரபாவும் தன்னை சுடச் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?!!
"இஸ்லாமியர்களின் ரத்தத்தில் விடுதலை புலிகளின் காலடிகள்"
புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா?
1987ம் ஆண்டு ஜுன் இரண்டாம் தேதி புலிகளின் ரக் வண்டிகள் யாழ்பாணத் தெருக்களில் நிறுத்தப்பட்டு அங்கு வாழ்ந்துவந்த முஸ்லீம்களை..
உடனடியாக ரஹ்மானியா கல்லூரியில் ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டனர்
ஒன்று கூடிய மூஸ்லீம்கள் அனைவரும் இரண்டு மணிநேர அவகாசத்தில் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பூர்வீக பூமியை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டதுடன் அவர்கள் உடுத்திருந்த உடுப்பை தவிர ஐம்பது ரூபாய் பணம் மட்டும்
எடுத்துச் செல்ல அனுமதிக்கபட்டனர்.
முஸ்லிம் மக்களின் வீடுகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால்
இலங்கையில் புலிகளின் ஆதிக்க பகுதியில் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை விரட்டி அடித்து விட்டு அவர்கள் குடும்பங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களின் அன்றைய மதிப்பு சுமார் 1026 கோடி
இந்த கொள்ளை அதோடு முடியவில்லை. இவர்களால் வெளியேற்றப்படாத கிழக்கு பகுதி முஸ்லிம்களுக்கு இவர்களால்,
விதிக்கப்பட்ட வரி விபரம்
ஒரு ஏக்கர் வயல் போகத்துக்கு 1500 ரூ
ஆடு,மாடு ஒன்றிற்கு ரூ 300
சாதா மீன்பிடி படகுக்கு மாதம் ரூ 300
இயந்திர மீன்பிடி படகு மாதம் 1000 ரூ
மாட்டு வண்டிக்கு வருடம் 1500 ரூ
விறகுக்கு மாதம் 1500 ரூ #அறிவோம்ஈழம்
ஆதாரம் : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை நூல் பக்கம் 126 ,127
சங்கி கும்பலின் CAA , NRC சட்டத்தை எதிர்க்கும் புலிகளின் ஆதாரவாளர்கள்
இஸ்லாமியருக்கு புலிகள் தனிவரி விதித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் ? #அறிவோம்ஈழம்
ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.
மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.
கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது. #அறிவோம்ஈழம்
இதைக் கேள்வி பட்ட விடுதலை புலியில் உள்ள கிட்டுவின் ஆதரவாளரானஅருணன் என்பவன் இதற்க்கு காரனம் மாற்ற இயக்கத்தவர் தான் என கருதி இரண்டு தானியங்கி ரக துப்பாகியுடன் வீட்டின் உள்ளே கூட்டாளிகளுடன் நுழைந்தான் அடைத்து வைத்து இருந்தோரை எல்லாம் சுட்டு கொன்றான்.
3 ஆகஸ்ட்1990 இல் காத்தான்குடி ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களை படுகொலையை செய்தது கரிகாலன் நியூட்டன் போன்ற தளபதிகள் தான்.
கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை திரிகோணமலை மாவட்டங்களில் தோல்வியுற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு முயற்சியை வடக்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு வவுனியா மன்னார் கிளிநொச்சி ஆகியவற்றில் வெற்றிகரமாக முன்னின்று செய்தவர் ஆஞ்சநேயர்(எ) இளம்பரிதி.
இந்த கரிகாலனும் இளம்பரிதியும் இறுதி யுத்தத்தின் கடைசி நாள் வரை பிரபாகரன் உடன் இருந்தனர். வெள்ளைக்கொடி ஏந்தி சரண்டராகி காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் இந்த இருவரும் உண்டு.
இதை இப்போது இங்கு குறிப்பிடக் காரணம், காத்தான்குடி படுகொலை வடக்கு இனச்சுத்தீகரிப்பு குறித்து புலி ஆதரவாளர்களே இப்போது ஒப்புக்கொண்டு எழுதி வருகிறார்கள்.