ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை.
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்
1/
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.
2/
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார்.
அவன் கூசாமல் உண்மையை சொன்னான்...
3/
“நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”
சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?
திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.
4/
சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.
5/
திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”
திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.
6/
மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.
அது என்னடி கதை? என்றான்.
ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான்.
7/
அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.
“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
8/
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான்.
9/
நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.
ராஜா: நில், யார் அங்கே?
10/
திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.
ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்
திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.
ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் ..
11/
திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.
திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று.
12/
மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.
ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?
திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன்.
13/
இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?
14/
ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.
15/
மறு நாள் அரசவை கூடியது.
ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.
நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை.
16/
இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.
அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.
17/
நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.
ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?
நிதியமைச்சர்: மன்னவா,
18/
திருடர்கள் என்ன முட்டாள்களா ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்
ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?
அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க,
19/
இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.
குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.
திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)
ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
20/
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்.
21/
இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)
ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
22/
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.
நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே.
23/
அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்
ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால்,உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன்.உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.
24/
நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.
ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்);
25/
இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.
முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.
26/
அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.
27/
சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.
28/
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று
(குறள் 297)
என்று வள்ளுவனும் செப்பினான்.
அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய் என்றார் 🙏
29/29
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமீபத்தில் ஒ ரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது...
1/
ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,
2/
"ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார்.
"இருக்கலாம்ங்க... ஏன் கேக்குறீங்க" என்றதும்,
"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப் பட்டிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.
3/
#மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் மறுபடியும் அதிசயத்தை கொடுத்திருக்கின்றது, மிக அதிசயமான அக்கோவில் முன்பு மண்ணில் மூழ்கி பின் வெளிவந்து பிரசித்தி பெற்றதெல்லாம் வரலாறு
இப்பொழுது சமீபத்திய தீவிபத்தினை அடுத்து கேரள பணிக்கர்கள் பிரசன்னம் பார்த்ததை அடுத்து...1/
இன்னொரு உப தேவதை அங்கு சரியான பூஜைகளின்றி நிற்பது கணிக்கபட்டது
ஆனால் இந்து அறநிலையதுறை அதிகாரிகள் பகுத்தறிவாளர்கள் அல்லவா, அப்படி எந்த சிலையும் இருக்க வாய்ப்பில்லை என மல்லுகட்டியிருக்கின்றார்கள்
பின் பணிக்கர்கள் சொன்ன இடத்தில் தோண்டும்பொழுது பழங்கால சிலை கிடைத்திருக்கின்றது...2/
இப்பொழுது அந்த பரிகார தேவதைக்கு பூஜைதொடங்கி சன்னதி கட்டபடுகின்றது
இதைத்தான் சொல்கின்றோம், அறநிலையதுறை நிர்வகிக்க அது வெறும் கம்பெனி அல்ல, கடை அல்ல
ஒவ்வொரு இந்து கோவிலும் இப்படி ஆயிரமாயிரம் அற்புதங்களும், சூட்சுமங்களும் மானிட சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியும் கொண்டவை...3/
"தமிழகத்தில் ஜெயித்து விட்டு உன்னை Dravidian Stock என்று எப்படி சொல்லிக் கொள்ளலாம்? Get out of Tamilnadu. நீ திராவிடன் என்றால் திராவிட தேசம் எங்கிருக்கிறதோ அங்கே போ." - விடியலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி.
"ஒரு புறம் ஒன்றியம் என்று சொல்லி தமிழர்களை இந்தியாவிலிருந்து பிரிப்பது...1/
மறு புறம் திராவிடன் என்று சொல்லி தமிழர்களை தமிழகத்திலிருந்து பிரிப்பது"
"இதை ஏன் பாஜக கண்டுகொள்ளாமல் இருக்கிறது?"
"2018இல் ஈரோடு மாநாட்டில் திராவிட நாடு பற்றி பேசியிருக்கிறார். அதன் திட்டத்தை பேசியிருக்கிறார். ஆதாரம் உள்ளது"
2/
"எதிர்க்கட்சியாக இருந்த வரை தன் வாக்கு வங்கியான மைனாரிட்டிகளிடமும், ஏமார்ந்த தமிழர்களிடமும் தன்னை வீரன் போலக் காட்ட 'பாசிச பாஜக' என்றெல்லாம் கூவிய திமுக இப்போது ஆட்சிக்கு வந்தகாரணத்தால் அவ்வாறு செய்ய முடியாது....
3/
"வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.? உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.?" - உள்ளிட்ட கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
1/
இந்த கட்டுக்கதைகளை பரப்பியவர் இப்போது டுமீல் முதல்வர். இவர் தவிர, இந்த கட்டுக்கதைகளை ராகூல் கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவலிகளும், கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மமதா பேகம் என பல தலைவலிகளும் பரப்பி வருகின்றனர்.
கட்டுக்கதைகளை உடைத்தெறியும் இந்த உண்மைகளை பகிரவும்:
2/
கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.?
உண்மை: 2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
3/
பஞ்சாப் நேஷனல் பேங்கில் கிட்டத்தட்ட ரூ 13 ஆயிரம் கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய மெஹுல் சோக்சி (லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியின் மாமா) டொமினிக்காவில் கைது!
ஆண்டிகுவாவில் குடியுரிமை வாங்கி அங்கே ஓடி ஒழிந்த சோக்சியை இந்தியாவுக்கு ....1/6
நாடுகடத்த முடியாமல் திணறினார் ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் ப்ரௌன்.
இரு தினங்களுக்கு முன் ஆண்டிகுவாவிலிருந்து தலைமறைவானார் சோக்சி. இன்று, ஆண்டிகுவாவின் அருகாமையில் இருக்கும் டொமினிக்காவில் கைது!
"சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்த சோக்சியை மீண்டும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டாம்..2/6
அவரை 'அழையா விருந்தாளி'யாக (persona non grata) கருதி, அங்கிருந்து இந்தியாவுக்கே அனுப்பி விடுங்கள்" என்று டொமினிக்காவை கோரியிருக்கிறார் ஆண்டிகுவா பிரதமர் ப்ரௌன். (படம் 1)
சோக்சி இன்னும் 48 மணி நேரங்களுக்குள் தனி விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படலாம்.
3/6
1, 2020 ஏப்ரலிலேயே மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான மருத்துவ Oxygen Plant நிருவலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது (படம் 1).
2, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த PM CARES நிதியிலிருந்து ரூ 201 கோடி வழங்கப்பட்டது.....1/
162 Medical Oxygen Generation Plants உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு இலக்கு. (படம் 2).
3, அதில் டில்லி அரசுக்கு இலக்கு 8. உருவாக்கியதோ 1! அதை வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தது டில்லி அரசு (படம் 3).
4, மருத்துவ Oxygen தயாரிக்க தேவையான ஆலைக்கு ....2/
பொதுவாக ஆகும் செலவு ரூ 20 கோடி. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி - பிப்ரவரி - மார்ச்) தன் சுய விளம்பரங்களுக்காக கேஜ்ரிவால் செலவழித்தது ரூ 150 கோடி! இந்த பணத்தில் குறைந்தது 7 Oxygen Plant போட்டிருக்கலாம் (படம் 4).