பராசர பட்டர், பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்ட சிறந்த வைணவர். சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகனாக
பிறந்தார். இளையவர் வேத வியாச பட்டர். தந்தை கூரத்தாழ்வான் ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக கணமழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் அவர்கள் பட்டினி கிடப்பதைப்
பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். பின்னர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க மூத்தவருக்கு பராசர பட்டர் என்றும், இளைய
மகனுக்கு வியாச பட்டர் என்றும் பெயரிட்டார். பராசரன் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியாரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தார். கூட வந்தவர்கள் அவருடைய புலமையையும் எல்லாமறிந்த வல்லமையையும்
புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தனர். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பராசரன் கையில் ஒரு பிடி மணலை எடுத்தான். பல்லக்கில் இருந்த பெரியார் முன் சென்று ஐயன்மீ்ர் உமக்கு எல்லாம் தெரியுமாமே, இந்தப்பிடி மணலில் எவ்வளவு மண் இருக்கிறது என்று சொல்லமுடியுமா? என்று
கேட்டானாம். ஸர்வக்ஞப் பட்டர் திகைத்துப் போனார். அவரிடம் பதிலில்லை என்பதை உணர்ந்த பட்டர் ' எல்லாம் கைப்பிடி மண் ' என்று தன் கேள்விக்கான பதிலை உரைத்தான். தன் தவற்றை உணர்ந்த ஸர்வக்ஞ பட்டர் பையனைக் கட்டித்தழுவி அவனை மனமார ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். ஒருமுறை எவ்வாறோ ஒரு நாய் கோவில்
உள் நுழைந்துவிட அர்ச்சகர்கள் லகு ஸம்ப்ரோக்ஷணம் (குளித்து விட்டு இறை நாம நீர் தெளித்தல்) செய்ய முடிவெடுத்து விடுகிறார்கள். இதை அறிந்த பட்டர் பெரிய பெருமாளிடம் விரைந்து சென்று நாள்தோறும் நான் கோவிலுக்கு வருவதற்காக ஸம்ப்ரோக்ஷணம் செய்யாத அர்ச்சக சுவாமிகள் நாய் நுழைந்ததற்கு செய்வது
ஏன் என்று விண்ணப்பிக்கிறார். மிகப்பெரிய பக்தனாய் இருந்தும் பட்டர் தன்னை ஒரு நாயை விடத் தாழ்மையானவர் என்று கருதினார். வைணவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது வினயம். இறைவனின் அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய நிலையை வழங்க
அவர்கள் வேண்டுகிறார்கள். அடியார்க்கு அடியாராய் இருப்பவர்களுக்குத் தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாகவும், அது இறைவனுக்கே செய்யும் தொண்டாகவும் கருதும் அந்தப் மனப் பாங்கு அனைவரும் கொள்ளத் தக்கது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

24 Jun
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
Read 6 tweets
24 Jun
#திருக்கடித்தானம் #ஸ்ரீஅற்புதநாராயணன் தற்போதைய கோட்டயம் பகுதியில் முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நந்தவனத்தில் அரிய பூக்கள் பூக்கும். இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் Image
போவதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறைஇட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு
விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, மன்னா நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே நாங்கள் வானுலகம் செல்ல முடியும் என கூறினர்
Read 16 tweets
24 Jun
இன்று ஆனி மூலம். #அருணகிரிநாதர் குரு பூஜை.(ஜெயந்தி)
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், ImageImage
நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூல்களாகவும் உள்ளன. அவர் இளம் வயதில் பல தீய பழக்கங்களுடன் இருந்தார். அவர் மாறுவர் என்று நம்பிய சகோதரி மற்றும் மனைவியை ஒரு சமயத்தில் மிகவும் மன வருத்துத்ததிற்கு உட்படுத்தி வீட்டை விட்டே வெளியேறினார். குழப்பமான மன நிலையில்
கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைப் பார்த்து (அவர் தான் அருணாசலேஸ்வரர் என்று ஒரு சாராரும் குமரக் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர்) அவருக்கு, குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும்
Read 16 tweets
23 Jun
இன்று #நாதமுனிகள் திருவதார நாள். ஆனி மாதம், அனுஷ நட்சத்திரம். அவர் பொயு 824 ம் வருடம் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும் Image
இயற்பெயருடன் பிறந்தவர்.     ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள். இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’. ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள் Image
முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும். அவர் பல தீர்த்த யாத்திரைகள் முடித்து பெருமாள் வழிகாட்டுதலால் திரும்பி வந்து காட்டுமன்னனார் கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். ஒருநாள் திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி)
Read 16 tweets
23 Jun
திரியம்பகேஸ்வரர் :
அறிவியலுக்கு அப்பாற்பட்டது இறை நம்பிக்கையும், இறை வழிபாடும். இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12-ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று திரியம்பகேஸ்வரர் சிவனாலயம். இங்கு கருவறையில் வற்றாத நீர் ஊற்று! பல்லாயிரம் ஆண்டுகளாக சுயம்புலிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் Image
கொண்டே இருக்கும். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது. திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. திரியம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் Image
உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப் Image
Read 9 tweets
22 Jun
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலைக்கழகம்" என்ற பெயரிலேயே13 பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா
பல்கலைக்கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என 5 யூனிவர்ஸிட்டிகளும்
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப் படுகின்றன. பொதுவாக இந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே உள்ளது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்களுக்கு
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(