இன்று #நாதமுனிகள் திருவதார நாள். ஆனி மாதம், அனுஷ நட்சத்திரம். அவர் பொயு 824 ம் வருடம் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும்
இயற்பெயருடன் பிறந்தவர். ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள். இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’. ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள்
முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும். அவர் பல தீர்த்த யாத்திரைகள் முடித்து பெருமாள் வழிகாட்டுதலால் திரும்பி வந்து காட்டுமன்னனார் கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். ஒருநாள் திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி)
கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,
ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
……திருவாய்மொழி 5-8-1
என்னும் பாடலில் தொடங்கி,
உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே
……திருவாய்மொழி 5-8-10
என்னும் பாடல் முடிய பத்து பாடல்களையும் பாடினர். அவற்றைக் கேட்ட நாதமுனிகள்
கடைசியாகப் பாடிய பாட்டில், ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே, அப்படியென்றால், உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமா? என்று வினவினார். அவர்கள் எங்களுக்கு இந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும் என்று பதிலளித்தனர். அப்பாடலில் குருகூர்ச்சடகோபன் என்று வருவதால், அவர்
திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார். அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர் மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர் திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம்
முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும் அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன
அருளுவார் என்று பதிலளித்தார். அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த மகிழ்ச்சியுடன் பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார். பன்னீராயிரம் முறை கண்ணிநுண்
சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார். இதனால் அகம் மகிழ்ந்த நம்மாழ்வார், அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார். நாதமுனிகளும், திருவாய்மொழியுடன் மற்ற பிரபந்த பாடல்களையும் அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார். நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின்
பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார். அவற்றைப் பெற்றபின்பும் நாதமுனிகள் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார். மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள், அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு
மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார்.
3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித் தொகுப்பாகவும்
பிரித்தார். இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்க இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்கு கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான், கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய #அரையர்கள். தேவகான இசைப்படி திவ்யப் பிரபந்தங்களை இறைவன்
முன் பாடி அபிநயித்து மக்களிடம் அவற்றைப் பொருளுடன் பரப்பி வந்தனர். பின்னர் மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அருளினார். வைணவ சம்பிரதாயமே இவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கு🙏🏻
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
#திருக்கடித்தானம்#ஸ்ரீஅற்புதநாராயணன் தற்போதைய கோட்டயம் பகுதியில் முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நந்தவனத்தில் அரிய பூக்கள் பூக்கும். இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல்
போவதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறைஇட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு
விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, மன்னா நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே நாங்கள் வானுலகம் செல்ல முடியும் என கூறினர்
இன்று ஆனி மூலம். #அருணகிரிநாதர் குரு பூஜை.(ஜெயந்தி)
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும்,
நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூல்களாகவும் உள்ளன. அவர் இளம் வயதில் பல தீய பழக்கங்களுடன் இருந்தார். அவர் மாறுவர் என்று நம்பிய சகோதரி மற்றும் மனைவியை ஒரு சமயத்தில் மிகவும் மன வருத்துத்ததிற்கு உட்படுத்தி வீட்டை விட்டே வெளியேறினார். குழப்பமான மன நிலையில்
கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைப் பார்த்து (அவர் தான் அருணாசலேஸ்வரர் என்று ஒரு சாராரும் குமரக் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர்) அவருக்கு, குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும்
திரியம்பகேஸ்வரர் :
அறிவியலுக்கு அப்பாற்பட்டது இறை நம்பிக்கையும், இறை வழிபாடும். இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12-ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று திரியம்பகேஸ்வரர் சிவனாலயம். இங்கு கருவறையில் வற்றாத நீர் ஊற்று! பல்லாயிரம் ஆண்டுகளாக சுயம்புலிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக்
கொண்டே இருக்கும். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது. திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. திரியம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில்
உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்
பராசர பட்டர், பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்ட சிறந்த வைணவர். சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகனாக
பிறந்தார். இளையவர் வேத வியாச பட்டர். தந்தை கூரத்தாழ்வான் ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக கணமழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் அவர்கள் பட்டினி கிடப்பதைப்
பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். பின்னர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க மூத்தவருக்கு பராசர பட்டர் என்றும், இளைய
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலைக்கழகம்" என்ற பெயரிலேயே13 பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா
பல்கலைக்கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என 5 யூனிவர்ஸிட்டிகளும்
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப் படுகின்றன. பொதுவாக இந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே உள்ளது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்களுக்கு