#திருக்கடித்தானம்#ஸ்ரீஅற்புதநாராயணன் தற்போதைய கோட்டயம் பகுதியில் முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நந்தவனத்தில் அரிய பூக்கள் பூக்கும். இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல்
போவதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறைஇட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு
விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, மன்னா நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே நாங்கள் வானுலகம் செல்ல முடியும் என கூறினர்
இதைக் கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக் கொண்டு, இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்கு தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு #திருக்கடித்தானம் என
பெயர் வந்ததாக கூறுவர். இத்தலத்து பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன் அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்தார் பெருமாள். இதன்
காரணமாக இத்தல பெருமாள் #அற்புதநாராயணன் என அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திவ்ய தேசம் இக்கோவில். 'கடி’ என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக் கொண்ட
மூன்று தலங்கள் உள்ளன. திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டில் உள்ள கண்டமென்னும் கடிநகர், கேரளாவில் திருக்கடித்தானம். கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தல பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடுவார் என்றும் கூறுகிறார்கள். அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோவில், கேரள மாநிலத்தில் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரியிலிருந்து சுமார் 3
கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. இங்கு நாராயணர் கற்பகவல்லி நாச்சியார் சமேதராக உள்ளார். வட்டவடிவமான கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். பெருமாள்தான் பிரதான மற்றும் முதலான சந்நிதியாகும்
நரசிம்மர் சந்நிதி பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரே கர்ப்பக் கிரகத்தில் இரண்டு சந்நிதிகள் இருப்பதால் இங்கு இரட்டைக் கொடிமரங்கள் உள்ளன. கருவறைக்கு தெற்கே தட்சணாமூர்த்தி, விநாயகர் மற்றும் பிரகாரத்தில் சாஸ்தா சுப்பிரமணியர், நாகர் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றன.
இந்த விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ள சந்நிதிக்கு கதவுகள் கிடையாது. மரத்தால் ஆன சட்டங்கள் வழியேதான் இவர்களை வழிபட முடியும். இக்கோவிலைச் சுற்றி கட்டப்பட்ட பிரம்மாண்ட கல்சுவர்கள் பூதகணங்களால் ஒரே நாளில் கட்டப்பட்டதாக கூறுவர். இங்குள்ள நரசிம்மர் உக்ர நரசிம்மராக இருப்பதால் அவரை சாந்தப்
படுத்த நரசிம்மருக்கு ஒவ்வொரு பூஜையின் போதும் நாராயணீயம் படிக்கப்பட்டும் பால்பாயாசம் நைவேத்யமாகவும் சமர்ப்பிக்கப்படுகிறது. இக் கோவிலின் முகப்பில் ஒரு கல்தூணில் இறந்த ஒரு மனிதரின் உடல் கிடத்தப்பட்டிருப்பது சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அது இந்த கோவிலின் காவலாளியின் உடல். ஒரு முறை
மன்னர் ஒருவர் இந்தக் கோவில்க்கு வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காவலாளி மன்னரிடம் பணம் வாங்கிக் கொண்டு கோவில் நடையை திறந்து விட்டிருக்கிறான். மரபை மீறிய அந்தக் காவலாளி அக்கணமே பிணமாகிப் போனான். இந்த நிகழ்ச்சியை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவே அவன் உடல் கோவில் முன்
வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கார்த்திகை மாதம்தான் இக்கோவிலில் பிரதான திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றப்படுகிறது. அன்று ஏற்றப்படும் தீபம் மறுநாள் வரை இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும். இந்த வைபவம் ‘சங்கேதம்’ என்று
அழைக்கப்படுகிறது. சிவபெருமான் ஜோதி வடிவில் இங்கு தோன்றியதை குறிக்கும் வகையில் இந்த வைபவம் கொண்டாடப்படுகிறது. கலியுகத்தின் முடிவில் அதே ஜோதிவடிவில் இறைவன் இங்கிருந்து செல்வார் என்ற ஐதீகமும் இதன் அடிப்படையில் உருவானதுதான். 2000-3000ஆண்டுகள் பழமையான கோவில் இது.
கலி யுகத்தில் நம் தேவைக்கு ஏற்ப குறைந்த நேரம் தியானித்து நிறைய பலனை பெற, இக்கோவிலுக்குச் சென்று கற்பகவல்லி சமேத ஸ்ரீ அற்புத நாராயணனை தரிசித்து வருவோம்.🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
இன்று ஆனி மூலம். #அருணகிரிநாதர் குரு பூஜை.(ஜெயந்தி)
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும்,
நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூல்களாகவும் உள்ளன. அவர் இளம் வயதில் பல தீய பழக்கங்களுடன் இருந்தார். அவர் மாறுவர் என்று நம்பிய சகோதரி மற்றும் மனைவியை ஒரு சமயத்தில் மிகவும் மன வருத்துத்ததிற்கு உட்படுத்தி வீட்டை விட்டே வெளியேறினார். குழப்பமான மன நிலையில்
கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைப் பார்த்து (அவர் தான் அருணாசலேஸ்வரர் என்று ஒரு சாராரும் குமரக் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர்) அவருக்கு, குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும்
இன்று #நாதமுனிகள் திருவதார நாள். ஆனி மாதம், அனுஷ நட்சத்திரம். அவர் பொயு 824 ம் வருடம் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும்
இயற்பெயருடன் பிறந்தவர். ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள். இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’. ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள்
முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும். அவர் பல தீர்த்த யாத்திரைகள் முடித்து பெருமாள் வழிகாட்டுதலால் திரும்பி வந்து காட்டுமன்னனார் கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். ஒருநாள் திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி)
திரியம்பகேஸ்வரர் :
அறிவியலுக்கு அப்பாற்பட்டது இறை நம்பிக்கையும், இறை வழிபாடும். இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12-ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று திரியம்பகேஸ்வரர் சிவனாலயம். இங்கு கருவறையில் வற்றாத நீர் ஊற்று! பல்லாயிரம் ஆண்டுகளாக சுயம்புலிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக்
கொண்டே இருக்கும். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது. திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. திரியம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில்
உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்
பராசர பட்டர், பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்ட சிறந்த வைணவர். சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகனாக
பிறந்தார். இளையவர் வேத வியாச பட்டர். தந்தை கூரத்தாழ்வான் ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக கணமழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் அவர்கள் பட்டினி கிடப்பதைப்
பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். பின்னர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க மூத்தவருக்கு பராசர பட்டர் என்றும், இளைய
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலைக்கழகம்" என்ற பெயரிலேயே13 பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா
பல்கலைக்கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என 5 யூனிவர்ஸிட்டிகளும்
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப் படுகின்றன. பொதுவாக இந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே உள்ளது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்களுக்கு