இன்று ஆனி மூலம். #அருணகிரிநாதர் குரு பூஜை.(ஜெயந்தி)
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும்,
நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூல்களாகவும் உள்ளன. அவர் இளம் வயதில் பல தீய பழக்கங்களுடன் இருந்தார். அவர் மாறுவர் என்று நம்பிய சகோதரி மற்றும் மனைவியை ஒரு சமயத்தில் மிகவும் மன வருத்துத்ததிற்கு உட்படுத்தி வீட்டை விட்டே வெளியேறினார். குழப்பமான மன நிலையில்
கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைப் பார்த்து (அவர் தான் அருணாசலேஸ்வரர் என்று ஒரு சாராரும் குமரக் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர்) அவருக்கு, குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும்
சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்க்கவில்லை. ஒரு நிலையில் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின்
மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி நில்!” என்றும் சொன்னார். திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ
எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரிக்கு இன்னுமொரு பெரும் ஆசியும் கிடைத்தது. முருகன் அவரை, அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும்,
மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் அவரை இரு கரம் கூப்பித் தொழுதார். அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு.
ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று கந்தன் மேலும் சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!என்று சொல்லி
“முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாம். அதன் பிறகும் அவர் வாழ்வில் பல சோதனைகளை எதிர்கொண்டார். சம்பந்தாண்டான் என்கிற தேவி உபாசகன்
அவரிடம் அசூயை கொண்டு அரசனிடம் சென்று தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால்
ஊரை விட்டே ஓடவேண்டும். என்று சவால் விட்டான். மன்னனும் மகிழ்ச்சியுடன், தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும்
சம்மதித்தார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து
அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி
அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான்
தாமதம், மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். இன்று அவர் ஜெயந்தி திருநாளில் அவர் இயற்றிய பாடல்களை
வாய் மணக்க, நெஞ்சினிக்க, தமிழ் வளர்க்க, இறை அருள் கிடைக்க பாடுவோம்! நாம் எளிமையாக ஒரு ஸ்தோத்திர பாராயணம் செய்து கொண்டு இருந்தால் அதுவே பக்தியை வளர்த்து பேரானந்தத்தை நமக்கு கொடுக்கும்
திருசிற்றம்பலம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
#திருக்கடித்தானம்#ஸ்ரீஅற்புதநாராயணன் தற்போதைய கோட்டயம் பகுதியில் முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நந்தவனத்தில் அரிய பூக்கள் பூக்கும். இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல்
போவதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறைஇட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு
விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, மன்னா நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே நாங்கள் வானுலகம் செல்ல முடியும் என கூறினர்
இன்று #நாதமுனிகள் திருவதார நாள். ஆனி மாதம், அனுஷ நட்சத்திரம். அவர் பொயு 824 ம் வருடம் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும்
இயற்பெயருடன் பிறந்தவர். ஸ்ரீவைணவ ஆசார்ய பரம்பரை, பெருமாள், பிராட்டி, விஷ்வக்சேனர், நம்மாழ்வார் ஆகியோரைத் தொடர்ந்து வருவது. முதல் மூவர் பரமபதத்தில் உள்ளவர்கள். இவ்வுலகில், நம்மாழ்வார் ‘ஆழ்வார்’. ஆகவே, நம்மாழ்வாரை யோக சமாதியில் நேரே தரிசித்து உபதேசம் பெற்ற நாதமுனிகள்
முதலாசார்யர் எனக் கொள்வது வைணவ மரபாகும். அவர் பல தீர்த்த யாத்திரைகள் முடித்து பெருமாள் வழிகாட்டுதலால் திரும்பி வந்து காட்டுமன்னனார் கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். ஒருநாள் திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி)
திரியம்பகேஸ்வரர் :
அறிவியலுக்கு அப்பாற்பட்டது இறை நம்பிக்கையும், இறை வழிபாடும். இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12-ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று திரியம்பகேஸ்வரர் சிவனாலயம். இங்கு கருவறையில் வற்றாத நீர் ஊற்று! பல்லாயிரம் ஆண்டுகளாக சுயம்புலிங்கம் உள்ள கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக்
கொண்டே இருக்கும். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரியம்பகத்தில் உள்ளது. திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. திரியம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில்
உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒருமுகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்றுமுகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்
பராசர பட்டர், பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்ட சிறந்த வைணவர். சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகனாக
பிறந்தார். இளையவர் வேத வியாச பட்டர். தந்தை கூரத்தாழ்வான் ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக கணமழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் அவர்கள் பட்டினி கிடப்பதைப்
பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். பின்னர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க மூத்தவருக்கு பராசர பட்டர் என்றும், இளைய
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலைக்கழகம்" என்ற பெயரிலேயே13 பல்கலைக்கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா
பல்கலைக்கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என 5 யூனிவர்ஸிட்டிகளும்
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப் படுகின்றன. பொதுவாக இந்த பல்கலைக்கழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே உள்ளது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் 200 மாணவர்களுக்கு