#Gantumoote (2019)(Kannada)(IMDB : 8.1)(Romantic Drama)

96 பாணியில் 90களில் நடக்கும் ஒரு பள்ளிப்பருவ காதல் கதை, படம் முழுக்க கதாநாயகியின் பார்வையிலே திரைக்கதை நகரும். ஒரு பெண் காதல் வயப்பட்டால் ஆணை எப்படி பார்ப்பாள், எப்படி ரசிப்பாள் என்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள். Image
மேலே உள்ள புகைப்படத்திலேயே பார்த்தால் தெரியும், ஒருவித வெக்கம் சூழ்ந்த காதல் பார்வையுடனே ரசிப்பாள் மீரா. ஒரு பெண் ஆணை ரசிப்பதை இவ்வளவு அழகாக இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. மீராவாக நடித்திருக்கும் #TejuBelawadi முகத்தில் அத்தனை முகபாவனைகள். காதலனை ரசிக்கும்போது, தன்னை
இழிவாக பேசும் ஒருவன் முன் கெத்தாக நடக்கும்போது, மனம் நொந்து நிற்கும் காதலனிடம் பாசமாக கொஞ்சும் போது, விடுமுறை இடைவெளிக்குப்பின் காதலனை ஏக்கத்துடன் விடாமல் பார்த்து ரசிப்பது, பாகுபாடு பார்த்து பேசும் காதலனிடம் பரிதாபமாக பேசும்போதும் எத்தனை எத்தனை பாவனைகள் 😍👏🏼👏🏼👏🏼. ImageImageImageImage
மீராவின் நடிப்பிற்க்காவே எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம் 😍. காதல் பேசும் படத்தில் ஆங்காங்கே பெண்ணியம் பேசியிருப்பதும்,

" நா படம் பாக்குறத தடுக்க அவன் யாரு "

" அவன் என்னை காதலிக்கிறதா சொன்னான், அவன் டிக்ஸ்னரில காதல்னா இதான் போல "

" அவன் ஸ்மோக் பண்ணாலும்,
அவனை ஏன் நல்லவன் இல்ல கெட்டவன்னு என்னால தீர்மானிக்க முடியல? "

" கேவலம் ஒரு எக்ஸாம் ரிசல்ட்க்காக யாராச்சும் இப்டி செத்து போவாங்களா? "

" 63 பேர் இருக்க கிளாஸ்ல அவன் என்னைக்கும் முக்கியமா படல, அன்னைக்கு தவிர "

" இது என்னோட பிரச்சனை நான் தான் தனியா பாத்துக்கணும் "

போன்ற வசனங்கள்
ரசிக்கும்படி இருக்கின்றன. 96 இல் விட்டுப்போன ரொமான்ஸ் காட்சிகள் இதில் இடம் பெற்று இருந்தாலும், அடிக்கடி இடம்பெறுவது நாம் ஆங்கில படம் பார்க்கிறோமோ? என்ற எண்ணத்தை தொட வைப்பது, ஒரு கட்டத்திற்கு மேல் பள்ளி பருவ காலத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்று வருத்தமளிக்க வைக்கிறது. அதை
மட்டும் சகித்து கொண்டால், ஒரு நல்ல காதல் படத்தை பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும்.
இணைப்பிற்கு நேரடி செய்தியை (DM) அணுகவும்.
@TamilColor @iam_6kannan @Tamilse10489195 @Miracle07503041 @vigneshduraiR @Dini91130050 @Mr_Bai007 @EmKayMohan @Legend_twitz @Ajit_karthi @itzsAlex_

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகிழ் திகழ் தமிழ்வாணி🥳ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ😷

மகிழ் திகழ் தமிழ்வாணி🥳ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ😷 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Tonystark_in

28 Jun
#HowToFindOldTweets

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗)

இன்னைக்கு இந்த த்ரெட்ல நாம பாக்கப் போறது, ட்விட்டர்ல Image
நம்மளோட பழைய ட்விட்களை எப்படி எடுக்குறதுன்றதப் பத்திதான் பாக்க போறோம். அதுக்குளாம் முன்னாடி இந்த RT, Likes லாம் எதுக்கு இருக்கு அதை நாம எதுக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றதை மொதல்ல பாப்போம்.

🔃 RT (Retweet) - இந்த ஆப்ஷன் எதுக்குனா இன்னொருத்தவங்க போட்ட ட்விட்ட நம்ம ஷேர்
பண்ணி, அதை நம்மளோட ப்ரொபைல் பக்கம் (அல்லது) TL (Time Line) பக்கம் கொண்டு வர்ற ஆப்ஷன் தான் இது. அடுத்து

♥️ (Likes) - இந்த ஆப்ஷன் எதுக்குனா, நாம போட்ட முக்கியமான ட்விட்ட நாம சீக்கிரமா எடுக்கனும் இல்ல இன்னொருத்தவங்க போட்ட நல்ல (அல்லது) முக்கியமான ட்விட்ட நாம ஈஸியா எடுக்கனும் அப்படி
Read 14 tweets
27 Jun
#BarotHouse (2019)(Tamil Dubbed)
(Thriller Drama)(IMDB : 7.3)(Zee5)

(இந்த த்ரெட்டில் டேக் செய்த ட்விட்டில் இருந்து ரிப்ளை செய்பவர்கள், என்னைத் தவிர பிற நபர்களை அன்மார்க் செய்து பேசுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼 நம் பேச்சு அவர்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் 🤗) Image
ஒரு பண்டிகை நாளான்று தன் வீட்டில் இருக்கும் அண்ணனை விளையாட அழைக்கிறாள் ஷ்ரேயா, அவன் நான் தபேலா வாசிக்க வேண்டும் என்று செல்கிறான். பிறகு தன் சித்தப்பாவிடம் நான் ஒளிந்து கொள்கிறேன் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி செல்கிறாள், அவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். வீட்டின் பல பகுதிகளில் Image
ஒளியும் ஷ்ரேயா கண்டு பிடித்துவிடுவார் என எண்ணி யோசிக்க, வீட்டின் வெளிய கிறிஸ்துவ வழி பாட்டுடன் கல்லறைக்கு சென்று கொண்டு இருப்பவர்களோடு இவளும் சென்று அங்கு ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் வந்தவர்கள் எல்லாம் சென்று விட, ஷ்ரேயாவின் பின்னால் இருந்து யாரோ அவளை கல்லால் அடிக்க Image
Read 15 tweets
13 Jun
Torrent டவுன்லோட் App'னா காலம் காலமா நமக்கு தெரிஞ்சது Utorrent App தான் அது காலாவதியாகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. அதுக்கு அப்றம் தெரிஞ்ச பெஸ்ட் App'ன்னா Flud Torrent தான் இதுவும் வர வர மக்கர் பன்ன ஆரம்பிக்குது, வேற எப்டி தான் நாம Torrent சைட்ல டவுன்லோட் பண்றதுன்னு கேக்குறீங்களா?!
இந்த த்ரெட்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது Torrent சைட்ல எப்டி ஈஸியா படம் டவுன்லோட் பண்றது அப்டின்றதத்தான். பொதுவா Torrent சைட்ல டவுன்லோட் கொடுத்தா ஃபைல் சைஸவிட அதிகமா நெட் போகும் இல்லனா பாதிலயே டவுன்லோட் ஆகாம நின்றும். அதுக்கு அப்றம் நாம என்ன பண்ணாலும் அது டவுன்லோட் ஆகாது இல்லையா!?
அதுனால அதிக நெட்டும் போகாம, பாதிலயும் நிக்காம எப்டி டவுன்லோட் பண்றதுன்னு பாப்போம் வாங்க. Seedr.cc அப்டின்ற இந்த வெப்சைட் லிங்க ஓபன் பண்ணி உள்ள போனீங்கன்னா என்டர் பேஜ் இந்த மாதிரி வரும் அதுக்கு அப்றம் Signup'ல போய் உங்க Email ஐடி கொடுத்து லாக் இன் பண்ணிங்கன்னா உங்க
Read 16 tweets
10 Jun
#TheBelkoExperiment (2016)(English)(IMDB : 6.1)

கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பெல்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வழக்கம்போல பணிக்கு வரும் ஊழியர்களை புதிதாக இருக்கும் காவலர்கள் சோதனை செய்கிறார்கள், சில பேர் திருப்பி அனுப்ப படுகிறகிறார்கள். அதை பற்றி ஹீரோவும், அவரின் மேல் Image
ஊழியரும்(Boss) என்ன சோதனை இது புதிதாக இருக்கிறது என கேக்க, சாதாரண சோதனை தான் என்று உள்ளே அனுப்ப படுகிறார்கள். மறுபுறம் புதிதாக வேலைக்கு சேரும் ஒரு பெண்ணிடம், நீங்க கம்பெனி டாக்டர்ஸ பாத்தீங்களா? அவங்க ஒரு சிப் ஒன்னு வைப்பாங்க எதுக்குனா இந்த ஊரில் பாதுகாப்பு அதிகம் இருக்காது, ஒரு
வேளை நீங்கள் தொலைந்து விட்டால் அதை வைத்து உங்களை கண்டுபிடிப்போம் என கூற, சரி என்று தலையாட்டிக்கொண்டே தன் தலையை தொடுப்பார்த்து கிளம்புகிறார். மறுபுறம் உள்ளே வந்த நாயகன் அலுவலகத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிய, உள்ளே உள்ள பழைய செக்யூரிட்டியிடம் கால்செய்து விசாரிக்க, எனக்கும்
Read 12 tweets
8 Jun
இந்த த்ரெட்ல நாம தமிழ்ல வெளிவந்த சிறந்த இந்திய வெப் சீரிஸ் மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ் பத்தி தான் பாக்க போறோம். இதுல ஆல்ரெடி நீங்க பாத்ததும் இருக்கலாம், அது பாக்காதவங்களுக்கு உதவும் அதுனால அதையும் சேர்த்துருக்கேன். பொதுவாக இணைய தொடர்களுக்கு சென்சார் கிடையாது என்பதால்
தகாத வார்த்தைகள் பேசுவது, ஆபாச காட்சிகள் வைப்பது போன்றவைகள் இடம்பெறும், ஆதலால் இந்த மாதிரியான இணைய தொடர்களை தனியாக பார்ப்பது உங்களுக்கு நல்லது. கீழே வரும் தொடர்களை பழையது முதல் புதியது வரை வருட வாரியாக வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
Zee5 இல் இடம்பெறும் தொடர்களின் காட்சியமைப்பு Netflix, Prime Video, hotstar, Sonyliv களில் வருவது போல இருக்காது. சாதாரண டிவி தொடர் காண்பது போல தான் இருக்கும், ஆனால் கதைகள் நன்றாக இருக்கும்.
Read 62 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(