#பூரி #ஜகந்நாதருக்கு ஜுரம் வருமா? அதுவும் #க்ரோனா மாதிரி ஜுரம் வருமா? இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல் நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு. அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழ்கிறோம். சொந்த கிராமத்திலிருக்கும்
குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மகா க்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம். சிதம்பரத்தில் இருக்கக்கூடிய தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை
கொண்டாடுகிறார்கள். அதே போல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள். நாம் கோகுலாஷ்டமிக்கு மட்டுமே குழந்தையாக க்ருஷ்ணனை பூஜித்து பலகாரங்கள் செய்வோம்.
ஜகன்னாதபுரியிலோ என்றுமே தங்கள் குழந்தையாகவே அவரைக் கருதுவதால் தான்,
வேளா வேளைக்கு வித விதமான பலப்பல உணவுகள் அவருக்குப் படைக்கப்பட்டு மஹாப்ரஸாதமாக அளிக்கப்படுகிறது. இன்று நாம் சளி காய்ச்சல் வந்தால் 14 நாட்கள் தனிமை வாசம், சித்த மருத்துவர்கள் கொடுக்கக்கூடிய மருந்துகள், கஷாயங்கள், தன்னந்தனியாக யாரையும் சந்திக்காமல் இருக்க கூடிய நிலை என்றெல்லாம்
க்வாரண்டைன் செய்யும் கொரோனா காலத்தில் வாழ்கிறோம். ஆனால் புரி நகரில் வருடா வருடம் கிருஷ்ண பரமாத்மாவான ஜெகநாதனும், அவன் சகோதரனும் சகோதரியும் நோய்வாய் படுகிறார்களாம்.
நோய்வாய்ப்பட்டவர்கள் இதேபோல் 15 நாட்கள் தனிமைப்படுத்தி குவாரண்டைன் வைக்கும் வைபவமும் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.
ஆண்டுதோறும் ஆஷாட மாதம் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய ஆடி மாதத்தில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதருடைய ரதோற்சவம் நடைபெறும். (சமீபத்திய ரதோற்சவம்) நமக்கு நினைவிருக்கும். அந்தக் காலத்துக்கு முந்தைய 14 நாட்கள் ஜெகநாதன் யாரையும் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா? ஆஷாட மாதம்
துவங்குவதற்கு முன்பு வரக்கூடிய பௌர்ணமியில் #புரிஜெகந்நாதர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அந்த கருவறையில் இருக்கக்கூடிய தெய்வங்களான ஜெகன்நாதனுக்கும் அவருடைய சகோதர சகோதரிகளுக்கும் “தேவ ஸ்நான் பூர்ணிமா” என்று 108 வாளி மூலிகைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்களாம். வெயில்
காலத்தில் குளிக்காமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிடித்து பச்சைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்கள். ஒரேடியாக செய்தால் என்ன ஆகும்? குழந்தைகள் மூவருக்கும் ஜுரம் வந்து விடுகிறதாம். அதனால் மூவரும் யாரையும் சந்திக்காமல் 15-நாட்கள் தனியே இருப்பார்கள்.
அனவாஸர க்ருஹம் எனும்
தனி இடத்துக்கு அவர்களைக் கொண்டு சென்று விடுவார்கள். கோவில் அர்ச்சகர்களே ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகி ஜெகநாதன் கூடவே இருப்பார்கள். அப்போது அவர்களதுஅந்த காய்ச்சல் குணமாக பத்து மூலிகைகளைக் கொண்டு அழைத்து உருவாக்கிய ’தசமூலம்’ எனும் ஆயுர்வேத மருந்தையும், ’பூலூரி’ என்று சொல்லக்கூடிய
வாசனை மூலிகையால் செய்யப்பட்ட எண்ணையும் தருவார்கள். வழக்கமான ’சப்பன் போக்’ எனப்படும் பல்சுவை உணவு இல்லாமல் பத்தியச் சாப்பாடு தான் நைவேத்யம். 15 நாட்கள் இந்த நேரத்தில் ஜெகநாதன் யாருக்கும் தரிசனம் கொடுப்பதில்லை, இந்த மருந்துகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு உடல் தேறியபின், ஜகந்நாதர்
முதலில் கொஞ்சம் போல கிச்சடி சாப்பிடுவார். பின் வழக்கமான பற்பல உணவுகள் ஆரம்பிக்கும். பின்னர் நோயெல்லாம் குணமான பிறகு சுபத்ரையுடனும், பலபத்ரனுடனும் ஜெகநாதர் சந்தோஷமாக தேரிலேறி தேரோட்டத்தை துவங்குவதாக ஐதீகம். ஜகத்குருவான சங்கராச்சாரியார் முன்னே வந்து அவனை தரிசனம் செய்வார். புரி
நகரின் ராஜா வெள்ளிப் பூண் போட்ட விளக்குமாறு கொண்டு ரதத்தை சுத்தம் செய்வார். பாமரன் பண்டிதன் வித்யாசம் இல்லாமல் அவர்கள் இறைவனின் ரதோத்ஸவத்தை தங்கள் வீட்டு குழந்தைகளின் வரவாகவே உணர்வதே அதன் அழகு.
அதனால் தான் இந்த ஆண்டு தேரோட்டத்தை தடை செய்த போது, அரும்பாடு பட்டு அதனை நிறுத்த
சம்மதிக்காமல் பக்திப் பெருக்குடன் நடத்தி விட்டார்கள்.
இது தான் இறைவனுடனான பந்தம்! குழந்தைகள் நோயெல்லாம் குணமாகி ஆனந்தமாக பவனி வருவதைக் காண லக்ஷோபலக்ஷம் மக்கள், ஏதோ தங்கள் குழந்தைகளே வருவதாக உணர்ந்து வடம் பிடித்து ரதம் இழுப்பார்கள். மூத்தவனான பலதேவன் முன்னே செல்ல, குட்டித்தங்கையான
சுபத்ரையை பாதுகாப்பாக நடுவே விட்டு, ஜெகந்நாத க்ருஷ்ணன் ஒய்யாரமாக பின்னே வருவான்.
உலகுக்கெல்லாம் நாயகன் - ஜகத்தின் நாதன் தான். அதனால் என்ன, எங்களுக்கு அவன் குழந்தை தான். ஜுரமெல்லாம் குணமாகி, ரதத்தில் ஏறும் முன்பு அந்த குட்டி வாசல் வழியே முட்டைக் கண்களை முழித்துக் கொண்டு அவன்
எட்டிப்பார்த்து வெளியே வரும் அழகு ஒன்று போதுமே, இந்த ஜன்மம் கடைத்தேற! இறைவனை நம்முடன் வாழ்பவனாகவே பார்ப்பது நம் தர்மம். தெய்வீகம் என்பது எங்கோ இருப்பதல்ல !
தெய்வங்களுடனே நாளைத் துவங்கி தெய்வத்துடனே வாழ்வதே நம் ஹிந்து மதம். பாரத பூமியின் ஓவ்வொரு அணுவிலும் இந்த தெய்வீகத் தன்மை
என்றும் எப்போதும் கலந்தே இருக்கும்
ஜகன்னாத: ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே !
ஜெய் ஜகந்நாத் ! ஜெய் விமலா!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

27 Jun
#பிரம்ம_முகூர்த்தம்
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து ஜபிப்பது, தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் தொடங்குவது சிறந்த பயனைத் தருவதோடு் நினைவாற்றலையும் அதிகப்
படுத்துகிறது. பிரம்மா முகூர்த்தம் அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும், அல்லது சூரிய உதயம் வரை. இது பிரம்ம தேவரின் நேரத்தை குறிக்கிறது. இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. நாம் விரும்பும்
Read 18 tweets
26 Jun
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்‌ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்
Read 6 tweets
26 Jun
MLA E.R.ஈஸ்வரனனின் சொந்த ஊர் கொக்கரையான்பேட்டை கிராமம், நாமக்கல் மாவட்டம். E.R.ஈஸ்வரனின் தாயாரான முத்தாயிக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே முத்தாயியை விட்டு பிரிந்து போய் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டார் ராமசாமி. அதே ஊரைச்
சேர்ந்த #தஸ்தஹீர் என்கிற முஸ்லிமோடு வாழ்க்கையை அமைத்து கொண்டார் முத்தாயி. அவர்களுக்குப் பிறந்தவர் தான் E.R.ஈஸ்வரன். அப்பா ஸ்தானத்திலிருந்து படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே தஸ்தஹீர் தான். அந்த வகையில் E.R.ஈஸ்வரனை ஒரு முஸ்லிம்மாக தான் பார்க்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். இது
E.R.ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போன போது E.R.ஈஸ்வரனோ அவரது தாயாரோ எந்த சடங்கிலும் ஈடுபட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம் சில வருடங்களுக்கு முன்பு தஸ்தஹீர் இறந்து போக முஸ்லிம் வழக்கப்படி சில சடங்குகளை செய்திருக்கிறார் E.R.ஈஸ்வரன்
Read 5 tweets
25 Jun
#துக்காராம் பக்த துக்காராம் புனே நகரத்திற்கு அருகே தேகு எனும் ஊரில் பிறந்தவர். இவர் விட்டலரின் பரம பக்தர். ஒரு சமயம் அவர் மனைவியான ஆவளீ ஏதோ வீட்டில் இருந்த சிறிது மாவை வைத்து இரண்டு சுக்கா ரொட்டி தயார் செய்து கொண்டு செல்ல ஆயுத்தமானார். பாவம் அதற்கு தொடு கறி செய்ய கூட இயலாத வறுமை.
துக்காராம் மகராஜ் பண்டார மலை என்னும் இடத்தில் விருட்ச வல்லி மரத்தின் கீழே அமர்ந்து அபங்கம் இயற்றி பாடி கொண்டிருப்பார். காட்டின் மைய பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது அவள் காலில் ஒரு விஷமுள் தைக்க அங்காயீ (அங்காளம்மன்) என அவளது குலதெய்வத்தை அழைத்தார். சடார் என பாண்டுரங்கன் வந்து
நின்றான். இந்த பெண்மணிக்கோ விட்டலனை கண்டால் பிடிக்காது. ஹே கருப்பா. நீ ஏன் இங்க வந்த நான் உன்ன கூப்பிடலயே. என் வீட்டுக்காரர பைத்தியமாக்கி இப்படி உட்கார வச்சி இருக்கியே உனக்கு இது நியாயமா சொல்லு. விட்டலன் சிரித்து கொண்டே ஆவளீ உங்களுக்கு என்ன குறை வச்சேன் உன் வீட்டுகாரர் கடனெல்லாம்
Read 5 tweets
24 Jun
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட "Transperancy international" பத்திரிக்கை ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும்.
2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 125 வது இடத்தை பிடித்துள்ளது. மோடி பதவி ஏற்கும் போது இந்தியா 62 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே #தமிழகம் 16 வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் பெற்றிருக்கிறது! 2010 #திமுக ஆட்சியின் போது தமிழகம்தான் இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகித்ததாகவும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் மத்திய அரசின் துறைகளில்
எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்கட்சியாக முதலிடத்தை #காங்கிரஸும் 2ஆம் இடத்தை #திமுகவும் 3ஆம் இடத்தை #கேரளகம்யூனிஸ்ட்டும் நான்காவது இடத்தை #ஆம்ஆத்மி கட்சியும் பிடித்திருக்கிறது. இதில் ஆம்ஆத்மி 2 கோடி
Read 6 tweets
24 Jun
#திருக்கடித்தானம் #ஸ்ரீஅற்புதநாராயணன் தற்போதைய கோட்டயம் பகுதியில் முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நந்தவனத்தில் அரிய பூக்கள் பூக்கும். இந்த மலர்களை தேவர்கள் பறித்து சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல்
போவதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறைஇட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூ பறிக்க வந்த போது காவலர்கள் தேவர்கள் என தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு
விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, மன்னா நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் மட்டுமே நாங்கள் வானுலகம் செல்ல முடியும் என கூறினர்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(