கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன.
கனடாவில் பழங்குடிகள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்காக உறைவிடப்பள்ளி முறையை பிரிட்டிஷ் நிர்வாகம் கனடாவில் கொண்டு வந்தது.
அப்பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து கட்டாயப்படுத்தி அந்த பள்ளியில் சேர்த்து அவர்களை கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.5லட்சம் பழங்குடியின மாணவர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை அனைத்தையும் ரோமன் கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியை பேசியதற்காக தாக்கப்பட்டதாகவும், உடல் மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு அதிகம் ஆளாகி உள்ளதாகவும் கனடா அரசு ஒப்புக் கொண்டிருக்கின்றது.
இந்த பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோய் மற்றும் மர்மமான முறையில் இறந்து உள்ளதாகவும் தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்பள்ளிகள் 1899 முதல் 1997 வரை இயங்கியுள்ளன. கடந்த மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிறிஸ்தவ உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் ரேடார் மூலமான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கொடூர படுகொலையை கலாச்சார படுகொலை என்று கனடா பழங்குடியின தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்ற கருத்தை வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்கள் குழந்தைகள் மீதான இத்தாக்குதலுக்கு கனடாவிற்கு நேரில் வந்து அவர்களிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இதன் முக்கியத்துவம் தொடர்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரான்சிஸ் அதற்கு வேதனை தெரிவித்திருந்தார்.
ஆனால் பழங்குடியின மாணவர்கள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச் நிர்வாகத்தின் பங்கிற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் நியூஸ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன் முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?
நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'புதிய இந்திய துறைமுக சட்டத்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது' என்று புலம்பி உள்ளார்.
இதன் வாயிலாக, முதல்வருக்கு ஆலோசனை கூறியது யாரோ ஒருவர் கற்றுக்குட்டி என்பதும், தன் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
தனிச் சட்டம்
இந்தியாவில் கடல் வாணிபத்தையும், துறைமுகங்களையும் நிர்வாகம் செய்ய, கடல்சார் வாணிபச் சட்டம் 1058, இந்திய துறைமுகச் சட்டம் 1908, பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ஆகிய சட்டங்கள் உள்ளன.
உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ?
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி,
இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும்,
இது உங்கள் இடம்: ‛ஜெய்ஹிந்த் என்றால் என்ன தெரியுமா!
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவிற்கு, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதற்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
பல தலைவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.சுதந்திர போராட்டத்தில், நாட்டுப்பற்றை தெரிவிக்க 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய்' போன்ற வார்த்தைகளை, தியாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின், அனைத்து இந்தியரையும் ஒன்றிணைக்க, செண்பகராமன் பிள்ளை என்ற தமிழரின், 'ஜெய்ஹிந்த்' கோஷம் பரவலாக ஒலிக்க துவங்கியது.'ஜெய்ஹிந்த்' என்றால், 'இந்தியா வாழ்க' என அர்த்தம்.
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்
புராண பெயர் : வில்வாரண்ய சேத்திரம்
ஊர் : வெள்ளூர்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
🙏🇮🇳1
*திருவிழா:*
பிரதோஷம், சிவராத்திரி
*தல சிறப்பு:*
இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. 🙏🇮🇳2
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. 🙏🇮🇳3