எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன் முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?
நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.
போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்திருந்தால் அப்போதே எனக்கு மோக்ஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது.
அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்கமாட்டேன் என்றது ஏன் தெரியுமா? இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்து விட்டேன் அல்லவா? அதனால் நீ இனி எனக்குப் பிறவியே தரமாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும்?
இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு.”
இந்தஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும், அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து விடுவார்.
நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்து விடுவார். இந்த ஸ்லோகத்தைச் சொன்னவர் கவித்வ சமத்காரத்தில் பாடியவரில்லை.
அவர் பழுத்த அனுபவசாலி, எனவே அவரது வார்த்தையை பரிபூர்ணமாக நம்பி நாமும் ஈசுவரனிடத்தில் சரணாகதி என்று விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம்.
நமஸ்கரித்தால் மோக்ஷம் நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் பண்ணினால் அப்படியே கிடைக்கும்! சந்தேகமில்லை.
நமஸ்காரம்_செய்வதைத் "தண்டம் சமர்ப்பித்தல்" என்பார்கள். "தண்டம்" என்றால் 'கழி' அல்லது 'கோல்' என்று அர்த்தம்.
கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்த சரீரத்தை நமதல்ல, இது ஈஸ்வரனுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம்.
நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை ‘அது தண்டமாகி விட்டது’ என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம்.
இதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக ஈசுவரன் முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும்.
அதுதான் 'தண்டம் சமர்ப்பிப்பது'. ஜுரம் வந்தால் நம் சரீரத்தால் நிற்கவும் நடக்கவும் முடிகிறதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜுரமாக வந்திருக்கிறது.
இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்ஸார ஜுரத்தை புரிந்துகொண்டு, அதற்கு அடையாளமாக ஸ்வாமியின் முன் தண்டகாரமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.
‘நாம் செய்கிறோம்’ என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே ஸதாகால நமஸ்காரம். அந்த அனுபவம் நமக்கு ஸித்திக்காத போதிலும் ஈஸ்வர சந்நிதியிலாவது அப்படி பாவித்து வணங்கித் தரையோடு, தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கிவிட்டால், அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம்.
‘பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்’ என்பதற்கு அடையாளம் சரீரத்தைத் தரையில் போடுவது, கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட ஸ்வாமி தம் பங்கைக் குறைத்துக் கொண்டு விடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லை.
நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும் அவரிடம் தள்ளுவதற்கு வெளி அடையாளமாக உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் நம் பாரம் அனைத்தையும் கிருபா சமுத்திரமான ஸ்வாமியே ஏற்று அநுக்கிரகிப்பார்.
கோவில்களில்_நமஸ்காரம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த மற்றும் பலரும் வழக்கமாக செய்யக்கூடிய ஒன்றே...
ஆனால், மஹா பெரியவா கூறியபடி, நாம் நமஸ்காரம் செய்யும் பொழுது " நம்மையே அர்ப்பணிக்கின்றோம்" என்ற எண்ணத்தோடு ("நான்" என்ற எண்ணத்தை) செய்யும் பொழுது நாம் முழு பலனையும் அடைகின்றோம்.
இந்த நேரத்தில், இந்த சிறியவனின் சிந்தையில் தோன்றியது "பாஞ்சாலி" துகில் உரியும் காட்சி தான்..
ஆம்... இதே 'சரணாகதி தத்துவம்' தான் "பாஞ்சாலி துகில் உரியும் காட்சியிலும்" அல்லவா ? துச்சாதனன் தனது வஸ்திரத்தை இழுக்கும் பொழுது
பாஞ்சாலி ஒரு கையால் வஸ்திரத்தை பிடித்துக்கொண்டே கிருஷ்ணரை அழைத்த பொழுது, சிறிது நேரம் வராது சோதனை செய்த பகவான், எப்பொழுது "இனி நடப்பதெல்லாம்
கிருஷ்ணா உன் பொறுப்பு" என்று முழு சரணாகதி அடைந்து தனது இரு கைகளையும் உயர்த்தி கண்ணை மூடி கிருஷ்ணரை அழைத்தவுடன்,
கிருஷ்ணர் வஸ்திரங்களை அள்ளி வழங்கி காப்பாற்றினாரோ அது போல...
நமது_நமஸ்காரத்தை தெரிவிக்கும் முறையானது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபடும்.
ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் "சாஷ்டாங்க நமஸ்காரம்" (சாஷ்டாங்க = எட்டு அங்கங்கள்) என்றும் பெண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் "பஞ்ச அங்க நமஸ்காரம்" என்றும் அழைக்கப்படும். (பஞ்ச அங்க = ஐந்து அங்கங்கள்).
ஏன் என்றால், இன்னென்ன, அவயங்கள் மட்டும் தான் பூமியில் அதுவும் கோவிலில் பட வேண்டும் என்ற சாஸ்திர விதி இருப்பதால்...
ஆண்கள் = இரண்டு கால் பாதங்கள், இரண்டு மூட்டுகள், மார்பு பகுதி, இரண்டு கைகள் மற்றும் நெற்றி பகுதி. (மற்ற அங்கங்கள் படக்கூடாது )
பெண்கள் = இரண்டு கால் பாதங்கள், இரண்டு கைகள் மற்றும் நெற்றி பகுதி. (வஜ்ராசனம் செய்வது போல்) (மற்ற அங்கங்கள் படக்கூடாது )
இனி, ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும், கண்டிப்பாக நமஸ்காரம் (அர்த்தம் புரிந்து) செய்வோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'புதிய இந்திய துறைமுக சட்டத்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது' என்று புலம்பி உள்ளார்.
இதன் வாயிலாக, முதல்வருக்கு ஆலோசனை கூறியது யாரோ ஒருவர் கற்றுக்குட்டி என்பதும், தன் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
தனிச் சட்டம்
இந்தியாவில் கடல் வாணிபத்தையும், துறைமுகங்களையும் நிர்வாகம் செய்ய, கடல்சார் வாணிபச் சட்டம் 1058, இந்திய துறைமுகச் சட்டம் 1908, பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ஆகிய சட்டங்கள் உள்ளன.
கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ?
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி,
இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும்,
இது உங்கள் இடம்: ‛ஜெய்ஹிந்த் என்றால் என்ன தெரியுமா!
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவிற்கு, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதற்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
பல தலைவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.சுதந்திர போராட்டத்தில், நாட்டுப்பற்றை தெரிவிக்க 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய்' போன்ற வார்த்தைகளை, தியாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின், அனைத்து இந்தியரையும் ஒன்றிணைக்க, செண்பகராமன் பிள்ளை என்ற தமிழரின், 'ஜெய்ஹிந்த்' கோஷம் பரவலாக ஒலிக்க துவங்கியது.'ஜெய்ஹிந்த்' என்றால், 'இந்தியா வாழ்க' என அர்த்தம்.
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்
புராண பெயர் : வில்வாரண்ய சேத்திரம்
ஊர் : வெள்ளூர்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
🙏🇮🇳1
*திருவிழா:*
பிரதோஷம், சிவராத்திரி
*தல சிறப்பு:*
இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. 🙏🇮🇳2
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. 🙏🇮🇳3