தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'புதிய இந்திய துறைமுக சட்டத்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது' என்று புலம்பி உள்ளார்.
இதன் வாயிலாக, முதல்வருக்கு ஆலோசனை கூறியது யாரோ ஒருவர் கற்றுக்குட்டி என்பதும், தன் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
தனிச் சட்டம்
இந்தியாவில் கடல் வாணிபத்தையும், துறைமுகங்களையும் நிர்வாகம் செய்ய, கடல்சார் வாணிபச் சட்டம் 1058, இந்திய துறைமுகச் சட்டம் 1908, பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ஆகிய சட்டங்கள் உள்ளன.
*கடல்சார் வாணிபச் சட்டம், கப்பல்களைப் பற்றியது. கப்பலை வாங்குவது, விற்பது, பதிவு செய்வது, அதில் பணிபுரியும் மாலுமிகளுக்குத் தரப்பட வேண்டிய ஊதியம், உணவு, ஓய்வு மற்றும் விடுப்பு பற்றியது.
* பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் என்பது, குறிப்பிட்ட சில துறைமுகங்களுக்கான சட்டம். நாடு விடுதலை பெற்ற பின், கோல்கட்டா, மும்பை, சென்னை போன்ற துறைமுகங்களை மத்திய அரசு ஆழப்படுத்தி நவீனப்படுத்தியதால், அவற்றுக்கென தனிச் சட்டம் வகுக்கப்பட்டது.
இதில் நாளடைவில் 11 துறைமுகங்கள் சேர்க்கப்பட்டன. இந்தச் சட்டம், மேலே குறிப்பிட்ட இரண்டு சட்டங்களுக்கும் உட்பட்டது.
இதன் முக்கியமான அம்சங்கள், நிர்வாக அமைப்பு பற்றிய பிரிவுகள் தான்.
இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிர்வாக வசதிக்காக இத்துறைமுகங்கள், இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டவை. இதற்கு, அன்றைக்கு சொல்லப்பட்ட காரணம், துறைமுகங்கள் லாப நஷ்ட நோக்கம் இல்லாமல், செலவை மட்டும் வசூலித்தால் போதும் என்பது தான்.
இதனால், துறைமுகங்கள் லாப நோக்கை மறந்தன; பெரும்பாலும் நஷ்ட நோக்கை நாடின.
வளர்ச்சித் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றால், துறைமுக அறங்காவலர் குழுவுக்கோ, அதன் தலைவருக்கோ போதிய அதிகாரங்கள் கிடையாது.எண்ணெய் நிறுவனங்களை போல சுதந்திரமாக செயல்பட முடியாது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மாநில அரசிற்கும், இந்தச் சட்டத்திற்கும், இந்தத் துறைமுகங்களுக்கும் எப்போதும், எவ்விதத்திலும், எந்நிலையிலும் சம்பந்தமில்லை.
இப்போது இயற்றப்பட்டுள்ள இந்திய துறைமுகச் சட்டம் 2021, மேற்கண்ட சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, துறைமுக நிர்வாகத்திற்கு உரிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. 1963ம் ஆண்டு சட்டத்தின் திருத்திய வடிவம் தான் இது. உதவாத சட்டங்கள் இதில் நீக்கப்பட்டுள்ளன.
அவசியம்
ஏன் புதிய சட்டமாக உள்ளது என்றால், அறக்கட்டளையாக செயல்பட்ட துறைமுக நிர்வாகத்தை ஒரு வாரியமாக மாற்றியதால், அடிப்படையே மாறி விட்டது. இந்திய துறைமுகச் சட்டம், அனைத்து துறைமுகங்களுக்குமான சட்டம். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியமான செய்தி உள்ளது.
கடந்த 1908ல், வ.உ.சி., சுதேசி கப்பல் கம்பெனி துவங்கிய போது, அவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே போடப்பட்ட சட்டம் இது. இன்றும், இந்திய கம்பெனிகள் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு, இந்தச் சட்டமும் ஒரு காரணம்.இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோது, இன்றைய மாநிலங்கள் இல்லை.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், இச்சட்டம் ஏழு முறை திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், சட்டப் பிரிவுகளை விட, திருத்தப் பிரிவுகள் அதிகம்.
சிக்கல் என்னவெனில், தற்போதைய தனியார் துறைமுகங்களை, யார் கண்காணிப்பது என்பதை பற்றி, இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை.
எனவே, இதை முற்றிலும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது தான் நடந்திருக்கிறது இப்போது!
தனியார் துறைமுக நிர்வாகத்தை சீராக்கவும், புதிய துறைமுகங்களை உருவாக்க நடைமுறைகளை எளிதாக்கவும், புதிய வகையிலான கடல் போக்குவரத்து சாதனங்களை ஒழுங்குபடுத்தவும், அமெரிக்காவோடு நாம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களை நெறிமுறைப் படுத்தவும், இந்த புதிய சட்டத்தை வைத்து தான் செய்ய முடியும்.
உதாரணமாக, அமெரிக்காவின் 'மார்போல்' என்ற ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. இதன்படி, கப்பல்கள் தங்களது கழிவுநீரை வெளியேற்ற, பல நிபந்தனைகள் உள்ளன. ஆனால், இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில், இதை ஆய்வு செய்ய வழி இல்லை.
இதுபோல கடந்த 100 ஆண்டுகளில் மாறி உள்ள உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சட்டமும் மாற வேண்டும் அல்லவா!
அதற்காக, இந்தச் சட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறது என்று சொன்னால், அதில் உண்மை இல்லவே இல்லை. மாறாக, அதிக அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இப்போது இருக்கும் சட்டத்தில், 69 பிரிவுகள் உள்ளன. அவை அப்படியே புதிய சட்டத்திலும் உள்ளன. கூடுதலாக, சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடலோர மாநிலங்களின் வளர்ச்சிக் குழு என்று ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தான் முதல்வர் கரித்துக் கொட்டுகிறார்.
இக்குழு, எந்த வகையிலும் மாநில துறைமுக நிர்வாகத்தில் தலையிட வழி இல்லை. இதன் முக்கிய பணி, இரண்டு துறைமுகங்களுக்கு இடையே பிரச்னை வந்தால், தீர்த்து வைப்பது மட்டுமே.
உலக அளவில் துறைமுகம் சம்பந்தமாக, இந்தியா கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் படி, எல்லாத் துறைமுகங்களும் செயல்படுகின்றவா என்று கண்காணிப்பது; புள்ளி விபரங்களைத் திரட்டுவது; பகிர்ந்து கொள்வது; வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரை செய்வது;
ஆய்வுகள் மேற்கொள்வது போன்றவற்றை மட்டும் தான் இக்குழு செய்ய முடியும்.
துறைமுக நிர்வாகம் முழுக்க முழுக்க, மாநில அரசிடம் மட்டுமே இருக்கும். சுருக்கமாக சொல்வதானால், ஒட்டுப் போட்ட சால்வைக்குப் பதிலாக, காலத்திற்கேற்ற புதிய சால்வையை இச்சட்டம் தருகிறது.
அதுமட்டுமல்லாமல், தனியார் துறைமுகங்களை எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொடுத்து, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது.
பட்டினமருதுார், எண்ணுார், காட்டுப்பள்ளி போன்ற துறைமுகங்களை கண்காணிக்கும் அதிகாரம், தமிழக அரசிற்கு வழங்கப் பட்டுள்ளது.
இதைப் புரிந்துகொள்ளாமல், மாநில அரசின் உரிமைகள் பறிபோய் விட்டன என்று, மற்ற முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவது, என்ன மடமை? இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து, வராத துயரம் வந்ததாக காட்டும், உங்கள் கறுப்பு கண்ணாடியைக் கழற்றுங்கள் முதல்வரே!
பா.பிரபாகரன்
எழுத்தாளர்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன் முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?
நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.
கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ?
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி,
இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும்,
இது உங்கள் இடம்: ‛ஜெய்ஹிந்த் என்றால் என்ன தெரியுமா!
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவிற்கு, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதற்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
பல தலைவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.சுதந்திர போராட்டத்தில், நாட்டுப்பற்றை தெரிவிக்க 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய்' போன்ற வார்த்தைகளை, தியாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின், அனைத்து இந்தியரையும் ஒன்றிணைக்க, செண்பகராமன் பிள்ளை என்ற தமிழரின், 'ஜெய்ஹிந்த்' கோஷம் பரவலாக ஒலிக்க துவங்கியது.'ஜெய்ஹிந்த்' என்றால், 'இந்தியா வாழ்க' என அர்த்தம்.
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்
புராண பெயர் : வில்வாரண்ய சேத்திரம்
ஊர் : வெள்ளூர்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
🙏🇮🇳1
*திருவிழா:*
பிரதோஷம், சிவராத்திரி
*தல சிறப்பு:*
இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. 🙏🇮🇳2
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. 🙏🇮🇳3