தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்
புராண பெயர் : வில்வாரண்ய சேத்திரம்
ஊர் : வெள்ளூர்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
🙏🇮🇳1
*திருவிழா:*
பிரதோஷம், சிவராத்திரி
*தல சிறப்பு:*
இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. 🙏🇮🇳2
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. 🙏🇮🇳3
வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
🙏🇮🇳4
*பொது தகவல்:*
இவ்வாலயமானது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்றுதான் ஆலயக்கல்வெட்டு கூறுகின்றது.
ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. 🙏🇮🇳5
பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிராகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன. 🙏🇮🇳6
தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.
🙏🇮🇳7
*பிரார்த்தனை*
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது.
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
🙏🇮🇳8
அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார்.
🙏🇮🇳9
எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
🙏🇮🇳10
குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும்.
🙏🇮🇳11
மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
🙏🇮🇳12
*நேர்த்திக்கடன்:*
சுக்கிரவாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான, விடியற்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி,
🙏🇮🇳13
வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகி சந்தோஷமாக வாழலாம்.
அத்துடன் இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.🙏🇮🇳14
*தலபெருமை:*
திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார்.
🙏🇮🇳15
அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார்.
இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள்.
தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள்.
🙏🇮🇳16
ஆனால், ஈசன் அங்கே வராததால் பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்யலானாள்.
இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள்.
🙏🇮🇳17
அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார்.
மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார்.
🙏🇮🇳18
வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார்.
🙏🇮🇳19
வேறெங்கும் காண இயலாத வகையில் தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.
🙏🇮🇳20
அபயம், வரதம் கூடிய திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காட்சி தருகிறாள் இவள். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
🙏🇮🇳21
ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள்.
வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு.
🙏🇮🇳22
*சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம்.*
முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும், வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து கால பைரவர் படைத்தளபதியாகச் சென்று முசுகுந்தனுக்கு வெற்றியைக் கொடுத்த தலம்.
ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப்பெயர் பெற்றது.
🙏🇮🇳23
வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
🙏🇮🇳24
*சித்த விரத பூமி:*
போகர் ஏழாயிரம் எனும் நூலில் திருக்காமேஸ்வரர், திருச்சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வதாகவும், சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், 🙏🇮🇳25
சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், 🙏🇮🇳26
வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷான ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்கதாகும்.*
🙏🇮🇳27
இன்னும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரத்தை தரிசனம் செய்யலாம்.
ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார்.
🙏🇮🇳28
அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்த்தியர் நாடியிலும், விசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்பானதாகும்.
🙏🇮🇳29
சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் மனிதர்களாகிய நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பு.
🙏🇮🇳30
மன்மதன் திருக்காமேஸ்வர பெருமானிடம் காமபானத்தைப் பெற்று அதை உயிரினங்களின் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாச்சாரம் தெரியாமல் திகைத்தார். உடனே பைரவரை தியானித்து பைரவர் பாதங்களில் காமபானத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார்.
🙏🇮🇳31
பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராக காட்சித்தந்து காமபானத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்குக் கொடுத்து ஞானபைரவராக தற்போது காட்சித் தருகின்றார்.
🙏🇮🇳32
எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ராகுகால நேரத்தில் 16 மிளகு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி ஏற்படும்.
🙏🇮🇳33
*தல வரலாறு:*
தட்சன் யாகம் நடத்திய கதை எல்லோருக்கும் தெரியும். ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன்.
🙏🇮🇳34
அவனது மாப்பிள்ளையான அதாவது தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? பாசம் விரட்டியது.
🙏🇮🇳35
எனவே, அழைப்பு இல்லாமலே அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பினாள் பராசக்தி. கூடவே, தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள்.
தன் அனுமதி இல்லாமல் சென்றதால், உமையை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.
🙏🇮🇳36
பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள்.
🙏🇮🇳37
இறைவனும் இறைவியும் பிரிந்து இருந்தால், உலக சிருஷ்டி எவ்வாறு நிகழும்? பிரபஞ்சம் பரந்து விரிய வேண்டாமா? சக்தியும் சிவனும் சேர்ந்தால்தானே இது சாத்தியம் ! இதற்காக பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.
🙏🇮🇳38
*சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு காமத்தின் மீது எப்படி நாட்டம் வரும்?*
காம பாணம் ஈசன் மேல் விழுந்தால்தானே அவருக்கு சக்தியின் நினைவு வரும்? ! இதற்காக அனைவரும் மன்மதனை அணுகினர்.
🙏🇮🇳39
ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான்.
இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான்.
தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. 🙏🇮🇳40
அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.
நடந்ததையும், நடக்கப் போவதையும் அறியாதவரா ஈசன்?
🙏🇮🇳41
வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார்.
விளைவு - பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது.
🙏🇮🇳42
தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள்.
எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், தேவி சிவகாம சுந்தரியாகவும் நமக்குக் காட்சி தருகிறார்கள்.
🙏🇮🇳43
இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்புச் சிற்பம் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது.
சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது.
மன்மதனின் இழப்பை அவன் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இழந்த கணவனை திரும்ப வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள்.🙏🇮🇳44
அதே வேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார்.
🙏🇮🇳45
அதோடு, மன்மத மதன களிப்பு மருந்து எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார்.
இங்கு மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
🙏🇮🇳46
மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
🙏🇮🇳47
*சிறப்பம்சம்:*
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது.
🙏🇮🇳48
தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳49
வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
எப்பொழுதுமே, நாம் செய்யும் எந்த ஒரு சிறு செயலாயினும், அதன் முழு பொருள் உணர்ந்து செய்யும் பொழுது அதில் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி தான் என்பதில் ஐயமில்லை அல்லவா ?
நமஸ்காரம் என்றால் என்ன ? அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன ?
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு சில தகவல்கள் பரமேசுவரன் மீது ஒரு சுலோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார்.
“திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே! நீ என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப்போவது இரண்டாவது அபராதம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், 'புதிய இந்திய துறைமுக சட்டத்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது' என்று புலம்பி உள்ளார்.
இதன் வாயிலாக, முதல்வருக்கு ஆலோசனை கூறியது யாரோ ஒருவர் கற்றுக்குட்டி என்பதும், தன் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.
தனிச் சட்டம்
இந்தியாவில் கடல் வாணிபத்தையும், துறைமுகங்களையும் நிர்வாகம் செய்ய, கடல்சார் வாணிபச் சட்டம் 1058, இந்திய துறைமுகச் சட்டம் 1908, பெருந்துறைமுக அறக்கட்டளைச் சட்டம் 1963 ஆகிய சட்டங்கள் உள்ளன.
கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பிற்கு பின் இடைத்தேர்தல் கரூருக்கு வந்தால் திமுகவின் வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்படுவாரா ?
தமிழக அளவில் மட்டுமல்லாமல், திமுக வரலாற்றிலேயே தன்னுடைய செல்வாக்கினை விட, கோடீஸ்வரராக இருந்து தற்போது மிகுந்த ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான கே.சி.பழனிச்சாமி,
இவரை தற்போதைய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, கே.சி.பி என்கின்ற வார்த்தையை மணல் அள்ளும் ஜே.சி.பி என்றும், மணல் திருடன் என்றும்,
இது உங்கள் இடம்: ‛ஜெய்ஹிந்த் என்றால் என்ன தெரியுமா!
எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்தியாவிற்கு, சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. அதற்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
பல தலைவர்கள், ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.சுதந்திர போராட்டத்தில், நாட்டுப்பற்றை தெரிவிக்க 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய்' போன்ற வார்த்தைகளை, தியாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
அதன் பின், அனைத்து இந்தியரையும் ஒன்றிணைக்க, செண்பகராமன் பிள்ளை என்ற தமிழரின், 'ஜெய்ஹிந்த்' கோஷம் பரவலாக ஒலிக்க துவங்கியது.'ஜெய்ஹிந்த்' என்றால், 'இந்தியா வாழ்க' என அர்த்தம்.