#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார். நாட்டிலிருந்த பல வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர
தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் #அஷ்டாவக்கிரமகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றுள்
இருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம். அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஜனகரின் கேள்வியை அறிந்த
அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை " என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார். நான் சொல்கிறேன் என்றார் அஷ்டாவக்கிரர். அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.
அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர். குள்ளமாக, கறுப்பாக, எட்டு எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு வந்த ஒருவரைப் பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டவக்கிரர் மௌனமாக நின்றார். “ஐயன்மீர் என் கேள்விக்கு
பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார். “சொல்கிறேன், மன்னரே ஜனகா, உன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைகாரர்களையும் முதலில் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டவக்கிரர். “என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு கசாப்பு கடைக்காரனும்
தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர். “இங்கு இருப்போர் பண்டிதன் என யாரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர். சபை முழுக்க கொதித்தெழுந்தது.
என்ன திமிர் இந்த குரங்கனுக்கு என்று சப்தமிட்டார் ராஜகுரு.
வேதம் கற்ற
பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள் என்று அனைவரும் கூச்சலிட்டனர்.
"ஏன் அப்படி சொன்னீர்கள்?
கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர் கேட்டார். உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார். “ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில்
நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது. ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா? நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை. இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என்
தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே? தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின்
உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன். பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.
அவமானமடைந்த
பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள். வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் விழுந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் #அஷ்டாவக்கிர_கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த
உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன? தூங்கினப்போது கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான். உன்னோட ராஜ வாழ்வும், பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை. ராஜாவா இருக்கும்பொழுது சந்தோஷப்படாதே.
தூங்கும்பொழுது அந்த சந்தோஷம் போய்விடும். பிச்சைக்காரனாக இருக்கும்பொழுது வருத்தப்படாதே. முழித்தால் அந்த வருத்தம் மறைந்துவிடும். இரண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள் என்றார். உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை கடவுளை தவிர. பகவத் கீதையில் சம நிலையில் இருக்க மனிதன் கற்று
கொள்ள வேண்டும் என பரந்தாமன் கூறியதை உன் நினைவில் கொள் என உபதேசம் செய்தார். இன்பம் துன்பம் என்ற இரட்டை நிலையையும் சமமாக நோக்கவும் உடல்தோற்றத்தினை வைத்து மனிதருடைய அறிவினை அளவிடுதல் கூடாது என்பதனை இந்து மதத்தில் அழகாக போதிக்கப்படுகிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
இவர் அஷ்டவக்கிரர் என்றும் அஷ்டாவக்கிரர் என்றும் குறிப்பிடப் படுகிறார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம்
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
#கேரளா#மணப்புள்ளி_பகவதி_அம்மன்#திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில்
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நிகழப் போகும் போருக்காக குருஷேத்திரத்தில் யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றி நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது,
பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி சுற்றுமுற்றும் பார்த்தபோது அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய் ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்து கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால்
என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது. நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். எனக்குத் தெரிந்ததெல்லாம் நீ தான் எங்களைக் காப்பவர். எங்களைக்
#சரபேஸ்வரர் உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்” அவதாரம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனம் என்னும் ஊரில் காவிரி தென்கரையில் அழகிய ஸ்ரீ கம்பகரேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது
வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின் கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக இவர் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க
கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். இங்கு சரபேஸ்வரக்கென என தனி சன்னதி உள்ளது. சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த உருவம் கொண்டவர். சரபேஸ்வரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரர் எட்டு கால்களும், இரண்டு
#பிரம்ம_முகூர்த்தம்
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து ஜபிப்பது, தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் தொடங்குவது சிறந்த பயனைத் தருவதோடு் நினைவாற்றலையும் அதிகப்
படுத்துகிறது. பிரம்மா முகூர்த்தம் அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும், அல்லது சூரிய உதயம் வரை. இது பிரம்ம தேவரின் நேரத்தை குறிக்கிறது. இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. நாம் விரும்பும்
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்