🎊🎉திருமண வரம் அருளும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில்🎉🎊
🌳தலவரலாறு🌳
🍁சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில்,குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார்.அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள்.அவளது நோக்கம்,முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும் என்பதாகும்
.ஆனால்,அந்த முனிவரோ முக்தியை நாடி தவம் இயற்றி இறைவனடி சேர்ந்து விட்டார்.
🍁தன் விருப்பம் நிறைவேறாத அந்தப் பெண்,காடுகளைச் சுற்றி வந்தாள்.அவளது உண்மையான விருப்பத்தை அறிந்த காலவ முனிவர்,அவளை மணம் புரிந்தார்.அவர்களுக்கு முன்னூற்று அறுபது பெண்கள் பிறந்தார்கள்.
🍁தர்ம பத்தினியாக
வாழ்ந்த அந்தப் பெண் பரமபதம் அடைந்தார்.இதனால் தன்னுடைய முன்னூற்று அறுபது கன்னிகைகளுக்கும் மணம் முடித்து வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு காலவ முனிவரை வந்து சேர்ந்தது.தன்னுடைய நிலையைக் கூறி,வேதமூர்த்தியாகவும் ஞானப்பிரானாகவும் விளங்கும் ஆதி வராகரை வேண்டினார்.வராக மூர்த்தி அவருக்கு
காட்சி தந்தார்.‘கவலையுறாதீர்கள் காலவ முனிவரே!நானே நாள் தோறும் பிரம்மச்சாரியாக வந்து தங்களின் கன்னிகைகளை திருமணம் செய்து கொள்கிறேன்’என்று அருளினார்.
🍁காலவ முனிவர் தந்தை என்ற முறையில் நிம்மதியானார்.அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை உணர்ந்தார்.உலகில் எல்லோரும் ஜீவாத்மாக்கள்.இவர்கள்
அனைவரும் காலவ முனிவர் போன்ற குருவை துணை கொண்டால் பரமாத்மாவான,பெருமாள் ஆதி வராகரை அடையலாம்.இங்கு திருமணம் என்பது புறத்தில் நிகழ்ந்தாலும்,அகத்திலே இனி ஒரு ஜென்மம் எடுக்காது,இந்த மாயையிலிருந்து மீட்டு தன்பதம் சேர்த்துக் கொள்வான் என்று பொருளும் உண்டு.
🍁வேதம் சொல்லும் தர்மங்கள்,
யாகங்கள் எல்லாவற்றையும் கொண்ட திருமணம் என்ற இல்லற தர்மத்தையும் சொல்லும் தெய்வம்.வேதத்தில்,திருமண நிகழ்வில் கன்னிகா தானம் மிகமிக முக்கியமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது.திருமணம் என்பது தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது எனும் வார்த்தையிலுள்ள சத்தியம் இது தான்.எனவே,தான் வராகர் காலவ
முனிவரின் முன்னூற்று அறுபது கன்னிகைகளையும் திருமணம் செய்து கொண்டார்.
🍁முன்னூற்று அறுபத்தோராம் நாள் அனைத்து கன்னிகைகளையும் ஒருவராக்கி #அகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் சூட்டி வராகப் பெருமாள் எழுந்தருளச் செய்தார்.காலவ முனிவர் வராகரின் கருணையை எண்ணி கண்ணீர் விட்டார்.
🍁#திருவிடந்தை எனும் இத்தலத்தில், "நான் என்றும் நித்திய கல்யாணப் பெருமாளாகவே அருள்புரிவேன்’' என்று பெருமாள் உறுதி கூறினார்.
🍁இத்தலத்திற்கு ‘நித்தியகல்யாணபுரி’என்றும் பெயர் உண்டு.எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள்.எம் தந்தையாக பெருமாள் திரு என்கிற லட்சுமி தாயாரை இடப் பாகத்தில்
கொண்டுள்ளதால் திருவிடவெந்தை எனப் பெயர் பெற்றது.அதுவே திருவிடந்தை என்று மறுவியது.
🍁பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோவில்.ஆனால்,தொன்மை கீர்த்தியில் ஈடு இணையற்ற தலம்.கருவறையில் வராகர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கிறார்.இடது கால
ை மடித்து அந்த மடியில் தாயாரை அமர்த்தி அவரின் காதருகே "சரம ஸ்லோகம்"எனும் மந்திரத்தை உபதேசிக்கும் கோலம்,காணக் கண்கோடி வேண்டும்.
🍁பெருமாளின் இடது திருவடி ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசில் படுமாறு அமைந்தது அரிய அமைப்பாகும்.இவரை தரிசிப்பவர்களுக்கு ராகு கேது தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு
விடுகிறது.
🍁உற்சவர்களான பெருமாள்,தாயார் இருவருக்கும் கன்னத்தில் இயற்கையிலேயே திருஷ்டி பொட்டு அமைந்திருக்கிறது.எப்போதும் கல்யாண வீட்டின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.தனிக்கோவில் கொண்டுள்ள தாயாரின் திருப்பெயர் கோமளவல்லித் தாயார் என்பதாகும்.
🍁அருளும்,அழகும் ஒருசேர வீற்றிருந்து
செல்வ வளத்தை பெருக்குவதில் இவளுக்கு நிகர் எவருமில்லை.பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
🍁திருமணமாகாத ஆணோ,பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேங்காய்,பழம்,வெற்றிலை,மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து,அர்ச்சனை செய்து
கொண்டு அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்து ஒன்பது முறை கோவிலை வலம் வரவேண்டும்.திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை சேவித்து செல்வது இத்தலத்தின் வழக்கம்.பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும் முன்பே திருமணம்
நிச்சயமாகிவிடுவது சகஜமானது.
🛐மன்னனுக்கு அருள் செய்த இறைவன்🛐
பல்லவ மன்னன் ஒருவன்,திருவிடந்தை தலத்தின் மகிமையை அறிந்தான்.இதையடுத்து ‘தினமும் ஒரு பெண்ணுக்கு இத்தலத்தில் திருமணம் செய்து வைப்பேன்’என்று அறிவித்தான்.
அது போல தினமும் ஒரு தம்பதியாக திருமணம் நடத்தி வைத்தான்
.ஆனால்,ஒரு நாள் ஒரு பெண்ணுக்கு வெகு நேரமாகியும் மணமகன் கிடைக்கவில்லை.காத்திருந்து காத்திருந்து நாழிகைகள் கரைந்து கொண்டிருந்தன.ஆனால்,அவன் வேண்டுதல் வீணாகவில்லை!அதிசுந்தரனாக பேரழகு பொருந்திய மணமகன் வந்தான்.மணம் செய்து கொண்டான்.அந்த மணமகன் மன்னனை நோக்கி,‘மன்னா என்னைப் பார்’என்று
சொல்லி, வராகராக காட்சி தந்து மறைந்தான்.
இதையடுத்து பல்லவ மன்னன், மூலவரே #வராக#மூர்த்தியாக அமையும் படியாக ஆலயம் எழுப்பினான்.இந்த ஆலயத்திற்கு திருமண வரம் வேண்டி வரும் பக்தர்கள்,வெகு விரையில் மணமுடித்து வந்து மீண்டும் இறைவனை வழிபடுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.
என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் ஜகத் காரணம் என்பதால்! ஹே! கிருஷ்ணா,தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு
கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால்தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்கொண்டிருக்கிறார்..
கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே.அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? )
ராஜசூய யாக வேலை தடபுடலாக நடந்துகொண்டு இருந்தது. யுதிஷ்டிரன் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுத்தார். பீமனுக்கு சமையலில் மேற்பார்வையாளராகவும், நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பையும், அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பையும்.,
திரௌபதிக்கு சாப்பாடு பரிமாறுகிற வேலையும், கர்ணனுக்கு பரிசுகள் விளங்கும் பொறுப்பையும் , துரியோதனனுக்கு கஜானாவை பாதுகாக்கும் பொறுப்பும் கொடுத்தார். ஆனால் கண்னனுக்கு மட்டும் எந்த பொறுப்பும் கொடுக்க வில்லை. கண்ணன் தனக்கும் ஏதாவது வேலை கொடுக்கும் படி கேட்டார். யுதிஷ்டிரனுக்கு
கண்ணனுக்கு வேலை கொடுக்க மனம் இல்லை . ஆனால் கண்ணன் கட்டாயப்படுத்தினான்
அதற்க்கு யுதிஷ்டிரன் " கிருஷ்ணா, நீங்கள் மிகவும் பெருமைக்கு உரியவர். உங்களால் கால்களை கழுவி நாங்கள் உங்களை கவுரவிக்க வேண்டும். அத்தகைய உங்களுக்கு நான் என்ன வேலை கொடுக்க முடியும்? "
ஒரு சூரிய கிரஹணம். அன்று துவாரகையிலிருந்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா மற்றும் அனேகர் குருக்ஷேத்ரத்தில் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்யச் சென்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்து எத்தனையோ வருஷங்களாச்சே, அதனால் கிருஷ்ணன் குருக்ஷேத்ரம் வரப்போகிறான் என்று
அறிந்து பிருந்தாவனத்திலிருந்து நந்தகோபன், மற்றும் பல கோப, கோபியர்கள் எல்லாம் கூட குருக்ஷேத்ரம் வந்துவிட்டனர். கிருஷ்ணனைப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆசை.
யசோதை, ரோகிணி இருவரில் ரோகிணி வெடுக் வெடுக் என்று நிறையப் பேசுவாள். குருக்ஷேத்ரத்தில் யாத்ரிகர்கள் யாரோ சிலர் போட்டுவைத்த
ஒரு பெரிய கூடாரம் அவர்களுக்கு வசதியாக அமைந்தது. அதில் கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரில் சிலர், மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பலர் தங்கியிருந்தனர். கிருஷ்ணனைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யமாக வளர்ந்தது.
முயற்சியும் நம்பிக்கையும் தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஆகப் பெரிய சக்திகள்....
அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் . ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை .
முனிவருக்கே உண்டான இயல்பில் , அவருக்கு கோபம் வந்தது.
கோபத்தில் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது . வானம் பொய்த்துவிடும் என சாபமிட்டார். இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
ஆனால் முனிவரோ சற்றும் மனம் இரங்காமல்,
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி அவரின் கோபத்தை சாந்தப்படுத்தும் விதமாக ஊர் மக்கள் அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து விட்டனர்.
வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்த பரந்தாமனும் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான். பரந்தாமனின்
தெய்வத் திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் -படிக்கப் படிக்கவே பரவசமாக இருக்கிறதே-இந்த சுகானுபவத்தை நேரில் சென்று அனுபவித்தால் எப்படி இருக்கும் -நிச்சயம் கண்ணனோடு கலந்து விடலாம்
ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்
இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல்
நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு.
அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.
சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம்.
சிதம்பரத்தில் இருக்கக்கூடிய
தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள்.
மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்! இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?"- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து
வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
உடனே, "ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்
உங்களுக்கு ஒரு சோதனை!" என்றார் கிருஷ்ணர்.
இருவரும், "என்ன அது?" என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.
முதலில் தருமரிடம், "தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!" என்றார் பகவான்.